இரவு- எலீ வீஸல்

இரவு- எலீ வீஸல்- பிரஞ்சிலிருந்து ஆங்கிலத்தில் மரியன்வீஸல் தமிழாக்கம்- ரவி.தி. இளங்கோவன் எலீ வீஸல்: ருமேனியாவில் சிகெட் என்ற ஊரில் பிறந்தார். சிறுவனாக இருந்த போதே வதை முகாமுக்கு (concentration camps) கொண்டு செல்லப்பட்டு, பெற்றோரையும், தங்கையையும் அங்கே இழந்தவர். இவருடைய வதைமுகாம் அனுபவங்களே இந்த நூல். இவருடைய The Beggar in Jerusalem பரபரப்பாகப் பேசப்பட்ட நூல்.1986ல் சமாதானத்துக்கான நோபல் பரிசை வென்றவர். ரவி.தி. இளங்கோவன்: திருவல்லிக்கேணி நடைபாதையில் தற்செயலாக வாங்கிய ஆங்கிலப் புத்தகம் தூங்கவிடாது … Continue reading இரவு- எலீ வீஸல்

Becoming – Michelle Obama

எட்டு வருடங்கள் அமெரிக்காவின் முதல் பெண்மணி, வழக்கறிஞர், எழுத்தாளர், மருத்துவமனை ஒன்றில் Vice President, லாபநோக்கில்லாத நிறுவனத்தின் இயக்குனர் என பலமுகங்கள் இவருக்கு. இந்தநூல் இவருடைய புகழ்பெற்ற சுயசரிதை நூல். "ஒரு ஜனாதிபதியின் மரசாமான்கள் வெளியேற மற்றவருடையது உள் நுழைகின்றன. அலமாரிகள் காலி செய்யப்பட்டு சில மணிநேரங்களில் நிரப்பப்படுகின்றன. புதிய தலைகள் புதுத் தலையணைகளில், புதிய உணர்வுகள், புதிய கனவுகள். எல்லாம் முடிகையில், உலகின் புகழ்மிக்க விலாசத்தை விட்டு நீங்கள் கடைசியாக வெளியேறுகையில், உங்களை மீண்டும் கண்டறிய … Continue reading Becoming – Michelle Obama

என் கடலுக்கு யார் சாயல் – தீபிகா நடராஜன்:

ஆசிரியர் குறிப்பு: நாமக்கல் மாவட்டத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். முனைவர் பட்ட ஆய்வாளராக இருக்கிறார். படைப்பு, புரவி உள்ளிட்ட பல இதழ்களில் கவிதைகள் எழுதிய இவரது முதல் கவிதைத் தொகுப்பு இது. இவரது கடலுக்கு யார் சாயல் என்பது தெரியாது, ஆனால் தீபிகாவின் கவிதைகளுக்கு குழந்தைமையின் சாயல்.சிறுகதைகளோ, கவிதைகளோ ஏதோ ஒன்றில் நம்மைத் தொலைக்க முடிந்தால் போதும், என்றேனும் நம்மாலும் சிறப்பாக எழுத முடியும். வாசிப்பும், பயிற்சியும் தூக்கிச் செல்லும் தூரம் கற்பனைக்கெட்டாதது. எழுத உட்காருமுன் யோசிக்காத பலவும் … Continue reading என் கடலுக்கு யார் சாயல் – தீபிகா நடராஜன்:

India Before Europe – Catherine B Asher & Cynthia Talbot:

இந்த நூல் ஆங்கிலேயர் வருகைக்கு முன்பான காலமான, கி.பி 1200 முதல் கி.பி. 1750 வரையான இந்திய வரலாற்றையும், நாகரீகத்தையும் பற்றி எழுதப்பட்ட நூல். இருவருமே Scholars, Catherine ஒரு Art Historian, குறிப்பாக இஸ்லாமிய பண்பாடுகள், Cynthia ஒரு Historian, ஏற்கனவேயே இஸ்லாமியர் வருகைக்கு முன்பான இந்தியா குறித்து ஆராய்ச்சி செய்தவர், உலகவரலாற்றில் ஆர்வம் கொண்டவர். இருவரையும் Cambridge University Press அணுகி, கிட்டத்தட்ட ஐநூறு ஆண்டு கால வரலாற்றை ஆய்வு செய்து எழுத அணுகியதன் … Continue reading India Before Europe – Catherine B Asher & Cynthia Talbot:

செருந்தி – ரம்யா அருண்ராயன்:

ஆசிரியர் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வீரபாண்டியன் பட்டணம் எனும் கடலோர கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். இயற்பியல் முதுகலை பட்டதாரி ஆசிரியையாகப் பணிபுரிகிறார். இது இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. இயற்பியலுக்கும் எனக்கும் நான் திருமணம் செய்யும் வரை ஸ்நானப்ராப்தி கூட இல்லை. இப்போது இயற்பியல் முப்பது வருடங்களுக்கு மேலாக என்னுடன் குடும்பம் நடத்தி வருகிறது. இலக்கியம் படித்தவர்களே நல்ல கவிதை எழுத முடியும் என்று ஒரு கற்பிதம், சொன்ன வரிகளின் சுடுகாற்று ஆறுமுன்னே நமக்குமறந்து போகும் … Continue reading செருந்தி – ரம்யா அருண்ராயன்:

மீராசாது – கே.ஆர்.மீரா – தமிழில் மோ.செந்தில்குமார் :

கே.ஆர்.மீரா: இந்தியாவில் இப்போது எழுதிக் கொண்டிருக்கும் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். பெண்ணியத்தைப் பிரச்சாரத் தொனி சிறிதுமின்றி இலக்கியமாக்கும் வித்தை தெரிந்தவர். சாகித்ய அகாதமி விருது உட்பட பல விருதுகளை வென்றவர். மோ.செந்தில் குமார்: தமிழ் பேராசிரியர். பெயல் என்னும் ஆய்விதழின் ஆசிரியர். மீராவின் புகழ்பெற்ற நூலான The Hangwoman நாவலை 'ஆராச்சார்' என்ற பெயரில் மொழிபெயர்ப்பைத் தொடங்கிய இவரது பயணம், குறுகிய காலத்தில் மீராவின் நான்கு நாவல்களை மொழிபெயர்க்க வைத்திருக்கிறது. இந்த நாவல் மீராவின் மற்றொரு முக்கிய … Continue reading மீராசாது – கே.ஆர்.மீரா – தமிழில் மோ.செந்தில்குமார் :

கண்மாய்க்கரை நாகரீகம் – சமயவேல்:

ஆசிரியர் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டம், வெம்பூர் கிராமத்தில் பிறந்தவர். கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், மொழிபெயர்ப்பாளர். ஏழு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவரது எட்டாவது கவிதைத் தொகுப்பு இது. சமயவேல் சிறந்த வாசகரும் கூட. இவர் மொழிபெயர்ப்பில் நாவலும், கவிதைத் தொகுப்புகளும் வந்திருக்கின்றன. சுயசரிதைக் கூறுகள் கொண்ட நூல் ஒன்றை எழுதியிருக்கிறார். என்றாலும், ஒருவரை முதன்முதல் பார்த்த போது நாம் பேசிய மொழியிலேயே தொடர்வது போல, இவரை கவிஞர் என்றே என்னால் உடன் அடையாளம் … Continue reading கண்மாய்க்கரை நாகரீகம் – சமயவேல்:

சிருங்காரம் – மயிலன் ஜி சின்னப்பன்:

ஆசிரியர் குறிப்பு: தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகிலுள்ள சூரப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர். அறுவைசிகிச்சை நிபுணர். ஒரு நாவல், ஒரு குறுநாவல், இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் ஏற்கனவே வெளிவந்தவை.இது இவரது மூன்றாவது சிறுகதைத் தொகுப்பு. அநேகமாக எல்லா சிறுகதைத் தொகுப்பிலுமே இவர் அசோகமித்திரன், ஆதவன் இருவரையும் நினைவுகூர்வதாக ஞாபகம். அதைத் தனியாகக் குறிப்பிட வேண்டுமா என்ன? இவரது எழுத்தில் அவர்கள் எங்கோ ஒளிந்திருக்கிறார்கள். இருவரிடமிருந்தும் விலகிய கதைக்களங்கள் மயிலனுடையவை, மொழிநடையும் இவருடைய தனித்துவம் தொனிப்பது, ஒருவேளை வார்த்தைகளின் நுட்பங்களில் … Continue reading சிருங்காரம் – மயிலன் ஜி சின்னப்பன்:

ஒரு பிடி நிழல் – ஜி.பி. இளங்கோவன்:

ஆசிரியர் குறிப்பு: கும்பகோணம், அம்மாசத்திரத்தில் பிறந்து வளர்ந்தவர். இளங்கலை வணிகம் பயின்றவர். தீவிர வாசகர். இது இவரது முதல் கவிதைத் தொகுப்பு. தொடர்ந்து கவிஞர்களுடன் தொடர்பில் இருப்பவர்கள், கவிதைகளை வாசிப்பவர்கள், கவிதைத் தொகுப்பு கொண்டு வர விரும்புதல் இயல்பு. ஆனால் அதற்காகக் கிட்டத்தட்ட ஐம்பது வயது ஆகும் வரைக் காத்திருப்பது இயல்பான விஷயமில்லை. காத்திருப்பு, அனுபவம் இரண்டும் மொழியை பண்படுத்தி, கூர்மையாக ஆக்கியிருக்கின்றன என்றே சொல்ல வேண்டும். தொகுப்பின் மொத்தக் கவிதைகளில் ஒரு பக்கத்தைத் தாண்டிய கவிதை … Continue reading ஒரு பிடி நிழல் – ஜி.பி. இளங்கோவன்:

கோசலை – தமிழ்ப்பிரபா:

ஆசிரியர் குறிப்பு: சென்னை சிந்தாதிரிப் பேட்டையைப் பூர்விகமாகக் கொண்டவர். ஆனந்தவிகடனில் சிலகாலம் பணிபுரிந்து பின் தற்போது திரைப்படங்களில் கதாசிரியராக, வசனகர்த்தாவாகப் பணிபுரிகிறார். 'பேட்டை' நல்ல வரவேற்பு பெற்ற இவரது முதல்நாவல். அசடு நாவலின் கணேசனை யாரும் மறக்க முடியாது. ஒட்டுமொத்த சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, சகல அவமானங்களையும் சந்தித்து, அநாதையாய் இறந்து போகிறவன். இந்த நாவலின் மையக்கதாபாத்திரம், கோசலை மூன்றடி உருவம், போறாததுக்கு முதுகில் கூன். கணேசனைப் போலவே பெற்றோர், உறவினர், உடன் பிறந்தான், சமூகம் என எல்லோராலும் … Continue reading கோசலை – தமிழ்ப்பிரபா:

கற்றாழை – ஐ. கிருத்திகா:

ஆசிரியர் குறிப்பு: திருவாரூர் மாவட்டம், திருப்பேருவேளூர் என்கின்ற மணக்கால் அய்யம்பேட்டை இவரது சொந்த ஊர். இருபது வருடங்களுக்கு மேலாக எழுதி வருகிறார். ஏற்கனவே இவரது மூன்று சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. இது சமீபத்தில் வெளிவந்த நான்காவது சிறுகதைத் தொகுப்பு. கிருத்திகாவின் கதைகள், பெண்களின் உலகை, குறிப்பாக நடுத்தரவயதுப் பெண்களின் உலகைத் திரைவிலக்கிக் காட்டுபவை. பெண்கள் அவர்களுக்குள் பேசும் பேச்சுகள் மட்டுமன்றி அவர்களது அகஉணர்வுகளை, அலைபாய்தல்களை துல்லியமாகச் சித்தரிப்பவை. இவரது இன்னொரு பலம் விவரணைகள். எடுத்துக் கொண்ட கதையை … Continue reading கற்றாழை – ஐ. கிருத்திகா:

மானசா – லஷ்மி பாலகிருஷ்ணன் :

ஆசிரியர் குறிப்பு: சென்னையில் பிறந்து தஞ்சையில் வளர்ந்தவர். மென்பொருள் துறையில் பணிபுரிந்தவர். சிறப்புக் கல்வி ஆசிரியராகவும், மனநல ஆலோசகராகவும் இயங்கி வரும் இவர் ஏற்கனவே எழுதாப்பயணம், ஆனந்தவல்லி ஆகிய நூல்களை எழுதியுள்ளார். ஆனந்தவல்லி சிறந்த வரவேற்பைப் பெற்ற வரலாற்று புதினம். இது இவரது இரண்டாவது நாவல். நூலிலிருந்து: " காலச்சக்கரம் மாயத்திறன் கொண்டது. அழிவை அறியாதது. அனைத்து உயிரினங்களின் செயல்களுக்கான பலனை முடிவு செய்வது அந்தக் காலச்சக்கரமே. ஒரு போதும் அயராமல் சுழலும் அந்தச் சக்கரத்தின் சுழற்சியே … Continue reading மானசா – லஷ்மி பாலகிருஷ்ணன் :