செல்லப்பன்- சுந்தரராமசாமி:
சு.ரா இருந்தபோது அவரது மொத்தக் கதைகள் தொகுப்பிலிருந்து, பலவீனமான கதைகள் என்று நான்கு கதைகளை விலக்குகிறார். அதில் இதுவும் ஒன்று என்று குறிப்பு சொல்கிறது.
தப்புத்தாளங்கள் திரைப்படத்தின் கதை தான் இதுவும். ஆனால் இது கல்கியில் 1959லேயே வெளிவந்து விட்டது. சு.ராவின் ஆரம்பகால கதைகள் வேறுவிதமாக இருக்கும். புளியமரத்தின் கதைக்கும், ஜே ஜே சில குறிப்புகளுக்குமே கடலளவு வித்தியாசம். என்றாலும் இதற்கு முன் வெளிவந்த பிரசாதம், சன்னல் போன்ற கதைகளும் கூட அழுத்தமானவை. சு.ராவின் தொகுப்பில் இல்லாத ஒரு கதையைப் படித்த திருப்தியும், துளிகூட சு.ரா சாயல் இல்லை என்ற ஏமாற்றமும் ஒருங்கே தரும் கதை.
<p class="has-text-color" style="color:#f31520" value="<amp-fit-text layout="fixed-height" min-font-size="6" max-font-size="72" height="80">தோட்டத்தின் அந்தம்- தோட்டத்தின் அந்தம்-மைக்கேல் அய்வாஸ்- தமிழில் எத்திராஜ் அகிலன்:
காமவெறி கொண்ட ராட்சசப்பல்லியைஎதிர்கொள்ளும் ஒருவனின் அகமனப்போராட்டங்களைச் சொல்லும் கதை. பேய்கள் எழுதிய தத்துவப் புத்தகங்களின் நிழல்வடிவம் நடப்பில் வருவது, வினோதமான சம்பவங்களின் நடுவே சாத்தியமில்லாத பயணங்கள் என்று சர்ரியலிசமும், Absurdismமும் கலந்த விசித்திரமான கதை. மொழிபெயர்ப்புக்கு எளிதான கதையல்ல இது. அகிலன் எத்திராஜ் நன்றாக செய்திருக்கிறார்.