நிழற்குடை- கமலதேவி:
கமலதேவியின் வழக்கமான பாணிக் கதை. அங்கங்கே சிதறிக்கிடக்கும் வாக்கியங்களில் கதையின் மர்மமுடிச்சு ஒளிந்திருக்கும். கண்டுபிடிக்க முடியாதவருக்கு கதை கண்ணாமூச்சி விளையாட்டில் கண்டுபிடிக்க முடியாதவகையில் ஒளிந்து கொள்ளும்.
சிறுகதை வாசிக்க Link : நிழற்குடை
இனி- ஸ்ரீரஞ்சனி:
Custody என்ற ஒன்றை மையமாகச் சுற்றி வரும் கதை. கீழைநாடுகளுக்கும் மேலைநாடுகளுக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசமே இது தான். அங்கே எல்லார் மனதிலும் பதிந்த விசயம், தம்பதிகள் பிரிந்ததற்காக பிள்ளைகளைத் தந்தையிடம் இருந்து பிரிக்கும் உரிமையில்லை என்பது மட்டுமல்ல, அவர்கள் சேர்ந்திருக்கும் தினத்தை Encourage செய்வதும், எப்படி Enjoy செய்தார்கள் என்று கேட்பதும் அம்மாக்கள் தவறாமல் செய்வது.
சிறுகதை வாசிக்க Link : இனி
நிழலைத் தின்னும் பூனை- ஹரீஷ் கண்பத்:
கதையை ஆரம்பிக்கும் போது கதைசொல்லியின் மனநிலையும், உடல்நிலையும் சொல்வதில் இருந்து, முடியும் வரை தன்னுடைய முழுக்கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு எழுதிய கதை. பார்வைகளோ, ஸ்பரிசங்களோ புதியதில்லை, காலம் தான் புதிதாகி விடுகிறது. நல்ல கதை. பாராட்டுகள்.
சிறுகதை வாசிக்க Link : நிழலைத் தின்னும் பூனை
சிறிய மனிதரின் உலகம் – ஸிந்துஜா:
சிறிய மனிதரின் உலகம் சிறியதாகத் தான் இருக்கும். அசந்தால் நம் கணவரை/மனைவியையே குற்றஉணர்வு இல்லாமல் கூட்டிப்போகும் காலத்தில் பழையபாணிக்கதைகளை எவ்வளவு காலம் சொல்வார்கள்!
சிறுகதை வாசிக்க Link : சிறிய மனிதரின் உலகம்
ஒரு ஊழியனின் மனசாட்சி – உஷாதீபன்:
திருடன் கையில் சாவியைக் கொடுத்தால் களவு நடக்க வாய்ப்பில்லை. அதிகாரம் கையில் கிடைத்தால் ஒவ்வொரு புரட்சியாளனும் பூர்ஷ்வா தான்.
சிறுகதை வாசிக்க Link : ஒரு ஊழியனின் மனசாட்சி
காணாமல் போன சுருட்டு- நித்யா ஹரி:
அமுதுவும் குமுதுவும் ஒன்றா தெரியவில்லையே. பேய்களை நம்பிய காலம், கடவுளை நம்பாத காலத்தை விட எவ்வளவு நன்றாக இருந்தது! நித்யா ஹரி முயற்சித்தால் YA fiction எழுதலாம். தமிழில் அந்த Genreல் பெரிய Vaccim இருக்கிறது.
சிறுகதை வாசிக்க Link : காணாமல் போன சுருட்டு-