அந்திமழை டிசம்பர் 2020 சிறுகதை:
நீலநிறக்கனவு- பாரதிபாலன்:
Freudன் Post Consciousness theoryஐ மையமாக வைத்து எழுதப்பட்ட கதை. பயம், குற்ற உணர்வு போன்ற காரணங்களினால் மூளை ஒரு கற்பனை சித்திரத்தை உருவாக்கி கனவுகள் வாயிலாக வெளிப்படுத்துகிறது. பெரியவரின் வாக்கில் இருந்த நம்பிக்கை நாகவல்லியின் மனச்சித்திரத்தைத் துடைத்துவிடுகிறது.
அந்திமழையின் நூறாவது இதழ் இது. வல்லிக்கண்ணன் குறித்து கி.ரா (கட்டுரையே கதை மாதிரி இருக்கிறது) ரே குறித்து இந்திரன், R.k.Lakshman குறித்து கார்டூனிஸ்ட் பாலா எழுதிய கட்டுரைகள் சிறப்புப் பக்கங்களில் வந்திருக்கின்றன. படிக்க சுவாரசியமானவை.