Hercule Poirot’s Christmas- Agatha Christie:

சஸ்பென்ஸ் கதைகளின் ராணி எனச் சொல்லப்பட்டவர். எண்பது சஸ்பென்ஸ் நாவல்களை எழுதிய இவரது நூல்கள் பைபிளுக்கும் ஷேக்ஸ்பியருக்கும் அடுத்து அதிகம் விற்றவை.

பணக்கார Cynic கிழவர் தன்னுடைய நான்கு மகன்களையும், இறந்து போன ஒரே மகளின் மகளையும் கிறிஸ்துமஸ்ஸுக்கு அழைக்கிறார். ஒரு மகன் அவரை கடவுளாய் நினைப்பவன். ஒரு மகன் அரசியலில் காலெடுத்து வைத்து, தன்னைவிட இருபது வயது குறைந்த பெண்ணை மணந்தவன். ஒருவன் தந்தையை வெறுத்து ஓவியம் படிக்கச்சென்றவன். ஒருவன் பணத்தைத் திருடிக்கொண்டு இருபது வருடம் முன்பு வீட்டைவிட்டு சென்றவன். இவர்கள் எல்லோருக்குமே இந்த கிறிஸ்துமஸ் வித்தியாசமாய் இருக்கப் போகிறது.

கதையின் நடுவில் ஒரு பாத்திரம் சொல்கிறது, அவள் மட்டுமே என் கண்ணுக்கு அழகாகத் தெரிகிறாள், ஆனால் உறவு முறையில்லை, உடன்பிறந்த சகோதரியின் மகளாகிப் போனாள்.

ஒரு கொலை நடக்கிறது. அறை உட்புறம் பூட்டப்பட்டு இருக்கிறது. அறையில் இரண்டு ஜன்னல்கள். இரண்டின் வழியாகவும் கொலையாளி தப்பியிருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தற்கொலையா! அப்படியானால் கழுத்தை அறுக்க உபயோகப்படுத்திய ஆயுதம் பூட்டிய அறையில் அல்லவா இருக்க வேண்டும்.

1938ல் வந்த கதை இது. இங்கிலாந்தில் பிறந்து அவருடைய எண்பத்தாறாம் வயதில் இறந்தார். கதை நடுவில் ஒரு வரி. ” பெண்கள் இளமையிலேயே அவர்களுக்கு என்ன வேண்டுமோ செய்து கொள்ள வேண்டும், வயதான பிறகு அவர்கள் சொல்வதை எந்த ஆணும் கேட்கப் போவதில்லை”.

வழக்கமான ACயின் கதை. மெதுவாக ஆரம்பிக்கும் கதை வேகமெடுத்ததும் கொஞ்சமும் அதன் வேகம் குறையாது அடுக்கடுக்காய் நிகழ்வுகள். Hercule Poirotக்கென்று சில Traits உண்டு. அவை முழுவதும் இந்த நூலில் வரவில்லை. AC மற்றும் Arthur Conan Doyle இருவருமே தங்கள் பிரதான கதாபாத்திரத்தின் அபரிதமான புகழால் எரிச்சல் அடைந்தவர்கள்.

என்னுடைய Teenகளில் AC, Chase, Sydney Sheldon நிரம்பியிருந்தார்கள். ACக்கு Queen of Crime பட்டம் கச்சிதமாகப் பொருந்தும். இந்தக் கொலை நடத்தியவிதத்திலும் ஒரு Brilliance இருக்கிறது. யாராலும் இப்போது கூட யூகம் செய்ய முடியாது.
ACஐ நினைக்கையில் இருவர் நினைவுக்கு வருவர். ஒருவர் Mary Higgins Clark. இரண்டாவது Crime ராணி. இன்னொருவர் Jane Austen. ஒரு நூற்றாண்டுக்கு முன் அதே இங்கிலாந்தில் பிறந்தவர் எனினும் இவர்கள் இருவருக்கிடையே கதைசொல்லலில் எவ்வளவு வித்தியாசம்! இருவரையும் இணைக்கும் ஒரு புள்ளி Snobbery. ஒருவேளை பெரும்பாலான ஆங்கிலப் பெண்களிடம் இருக்கும் Traitஓ அது!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s