அரூ இதழ் 11- அறிவியல் சிறுகதைகள்:

94 சிறுகதைகள் போட்டிக்கு வந்ததில் 12+6 என மொத்தம் பதினெட்டுக் கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியாகியுள்ளன. யுவன் சந்திரசேகர் நடுவராக இருந்திருக்கின்றார்.

100 நலன்கள் – முரளிதரன்:

மரணதண்டனைக்கு எதிராகப் பலகாலமாக படைப்புகள் வந்திருக்கின்றன. குறிப்பிட்டுச் சொல்லும் படி To Kill A Mocking Bird and Crime and Punishment. இந்தக் கதையில் அறிவியல் புனைவு அந்தத் தண்டனை வழங்கப்படும் விதத்தில் இருக்கிறது. Morality என்பதைத் தாண்டி, அகிலாவும் அவள் அப்பாவும் மரணதண்டனை குறித்து முன்பு பேசியதற்கும் இந்தக் கதைக்கும் ஒரு பொருத்தமின்மை இருப்பது போல் தோன்றுகிறது.

https://aroo.space/2021/05/10/100-%e0%ae%a8%e0%ae%b2%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/

அ-சரீரி- பிரபாகரன் சண்முகநாதன்:

அசரீரி மனம் பழகிய தடத்தில் பாசத்தைத் தேடுவதையும், நிதர்சன வாழ்க்கை இயந்திரமயமானதையும் சொல்கிறது. இயந்திரங்களுக்கும் கோளாறுகள் ஏற்படும் இல்லையா?

https://aroo.space/2021/05/10/%e0%ae%85-%e0%ae%9a%e0%ae%b0%e0%af%80%e0%ae%b0%e0%ae%bf/

இறுதி யாத்திரை – சுசித்ரா:

நல்ல கற்பனை. எதிர்பாராத முடிவு.
நடப்பு உலகில் சந்திக்கும் பிரச்சனைகள், வருத்தங்கள், ஆசாபாசங்கள் இவற்றின் மேல் அறிவியல் புனைவு கலக்கையில் அது நம் மண்ணின் அறிவியல் கதையாகிவிடுகிறது. பாராட்டுகள்.

https://aroo.space/2021/05/10/%e0%ae%87%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%af%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%88/

உளதாய் இலதாய் – சிவகுமார் கிருஷ்ணமூர்த்தி:

நல்ல முயற்சி. கொஞ்சம் Fantasy கதையாக ஆனது போல் தோன்றுகிறது. ஏராளமான கதைகள் வேறு கிரகத்தில் இருந்து மனிதர் வந்ததாய் காலங்காலமாக வந்திருக்கின்றன. எல்லாமே பால்வெளியில் சுற்றுவதால் எப்போதும் Mars தான் அருகிலிருக்கும் என்று சொல்ல முடியாது. அறிவியல் கதைகளுக்கேயுரிய பரபரப்பு கிளைமேக்ஸ் இந்தக்கதைக்கு.

https://aroo.space/2021/05/10/%e0%ae%89%e0%ae%b3%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%a4%e0%ae%be%e0%ae%af%e0%af%8d/

என்றூழ்- விஜய ராவணன்:

ரோபோக்கள் மனிதர்களை விட செயல் திறனில் பன்மடங்கு திறமை வாய்ந்தவை. ஆனால் அவற்றிற்கு தனிப்பட்ட உணர்ச்சிகள் கிடையாது. ஒருவேளை இருக்குமானால்……. Ishiguroவின் புதியநாவல் Klara and the Sun அதைவைத்தே எழுதப்பட்டது. இந்தக்கதையும் கூட அதே தீம் தான். நன்றாக வந்திருக்கிறது.

https://aroo.space/2021/05/10/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%af%82%e0%ae%b4%e0%af%8d/

கார்தூஸியர்களின் பச்சை மது- வளன்:

காயகற்பம் தான் கார்தூஸியர்களின் பச்சை மது. இதில் அறிவியல் புனைவு எதுவுமில்லை. Fantasy தான் இருக்கிறது. இவரது மொழிநடை நன்றாக உள்ளது.
அமிர்தம், ஔவையின் நெல்லிக்கனி என்று நம்மிடையே சாகாவரம் வேண்டி நிற்கும் கதைகள் ஏராளம்.

https://aroo.space/2021/05/10/%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%82%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%88-%e0%ae%ae/

சனிபகவான்- விஜய் வேல்துரை:

அறிவியலுக்கும் பிரமைக்கும் இடையில் நடக்கும் கதை. இரண்டுக்குமே தீர்க்கமான முடிவு எப்போதும் இல்லை என்பதால் கடைசிவரை குழப்பம் தான். இடையில் ஜெமோவின் கதையும் வந்து போகிறது. ஆமாம் அறிவியல்? அது தான் FBAI Mark V

https://aroo.space/2021/05/10/%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%95%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d/

சொல்லாழி வெண்சங்கே- கமலதேவி:

கமலதேவியின் கதை சொல்லலும், மொழிநடையும் இந்தக்கதை அறிவியல் கதை என்று யாரும் சொன்னால் அதற்கான Justice செய்யவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. பெண்களின் அகஉணர்வுகளைச் சிறப்பாகக் கதைகளில் வடிப்பவர் இவர்.

https://aroo.space/2021/05/10/%e0%ae%9a%e0%af%8a%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b4%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87/

நோய் முதல்நாடி- வேணு தயாநிதி:

வித்தியாசமான கதை சொல்லல். கி.பி 3011 க்கும் பிறகு நடக்கும் கதை. இப்போது இந்தியாவில் இருக்கும் ஒருவிசயத்தை மையக்கருவாகக் கொண்டு, புதியபூச்சோடு கதை சொல்லப்பட்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்து அனாவசியமான வார்த்தைகளே இல்லாமல் நேர்க்கோட்டில் நகரும் கதை.

பாஞ்சஜன்யம்- லோகேஷ் ரகுராமன்:

நல்ல கதை. அறிவியல் அம்சத்தை விட உணர்வு பூர்வமான விசயங்கள் அதிகம். கதையின் முடிவு Hallucination இல்லை என்பதை முடிவு செய்கிறது. சில நம்பிக்கைகளை அறிவியலினால் நிரூபிக்கவே முடியாது. கதையின் தலைப்பும் அவ்வளவு பொருத்தம்.

பூர்ணகும்பம் -சுசித்ரா:

பூர்ணகும்பம் மாயயதார்த்தத்தின் சாயலில் முடிகிறது. கால்கள் குறித்த மாதவியின் இரண்டு விளக்கங்களுக்கும், Breast removalக்குப் பிறகான மாதவிக்கும் சம்பந்தமேயில்லை. உணர்ச்சிகள் தான் எப்போதும் அறிவை வெல்கின்றன.

வலசை- விஸ்வநாதன் மகாலிங்கம் :

பல தலைமுறைகளின் கதை இது. பட்டாம்பூச்சிகளுக்கும் வைட்ஹெட்டின் பரம்பரைக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
வீடியோ கேமில் அமெரிக்காவில் வேண்டுமென்றால் சம்பாதிப்பார்கள். இங்கே அழிந்தவர் தான் அதிகம். அறிவியல் கதை இல்லை இது ஆனால் நல்ல கதை.

அது- கு.அசோக்குமார்:

எல்லோருக்கும் தெரிந்த ஒரு துணுக்கை வைத்துக் கதை எழுதும் பொழுது அது ஒரு Passing cloud போல் இருந்தால் பரவாயில்லை, முழுவதும் அதையே சுற்றி வருவது என்பது…… அது சிந்திக்க இவ்வளவு நேரமா?

அரூ அறிபுனைப் போட்டி #500- நகுல்வசன்:

அறிவியலும் புனைவும் ஒன்றாகப் பயணிக்கும் கதை. புனைவின் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக கதைக்குள் கதையாய் அரூ போட்டிக் கதைகளும், எல்லோருக்கும் தெரிந்த நடுவர்களும். Softwareன் நிறைய Terminologies தமிழில் வந்திருப்பதால் படிப்பதற்கு சற்றே சிரமத்தை ஏற்படுத்துகிறது. நல்ல முயற்சி.

சக்கரவியூகம் – கே.பாலமுருகன் ;

மகாபாரதக்கதை மீட்டுருவாக்கம். Brain wash செய்து lucid dream போன்ற ஒன்றில் பயிற்சியளித்து அசல் வேளைக்கு அனுப்புவது அறிவியல் கதையா!

செம்புலப்பெயல்- பார்கவி:

கதை பால்வெளியில் நடப்பதால் அறிவியல் கதை போலிருக்கிறது. சமூகச்சாடல் கதை என்ற பிரிவில் நன்றாகப் பொருந்தும்.

பகுதாரி – கிஷோர் ஸ்ரீராம்:

Beautiful Story. இசையை உருவாக்கும், Finetune செய்யும் மென்பொருட்கள் ஏற்கனவே இருக்கின்றன, ஆனால் இந்தக் கதையில் இருக்கும் உயிரோட்டம் எல்லாவற்றையும் புதிதாக்குகிறது. குறிப்பாக Audience ரசிக்கத் தொடங்கியதும் பகுதாரியின் எதிர்வினை, Venture Capitalistன் அவசரம் போன்ற இடங்கள் ரசிக்க வைத்தன.

முன்னத்தி- ரஃபீக் இஸ்மாயில்;

2400 களில் சூரியக்குடும்பங்களை விட்டு விலகும் முயற்சியில் செலுத்தப்பட்ட விண்கலத்தில் இருக்கும் விஞ்ஞானியின் கதை. அப்போதும் பூமியில் அரசாங்கங்கள் மாறினால் கொள்கைகளும் மாறுகின்றன.

அறிவியல் கதைகள் எழுதுவதற்கான நல்ல முன்னெடுப்பை அரூ செய்திருக்கின்றது. அறிவியல் கதைகளில் மிகப்பழையதும் புகழ்பெற்றதும் என்று E.M. Forster இன் “The Machine Stops” என்ற கதையைச் சொல்லலாம். 1909 ல் எழுதப்பட்டது. இன்றும் படிக்கையில் ஒரு பதற்றத்தையும், என்றாவது இது உண்மையாகலாம் என்ற பயத்தையும்
ஏற்படுத்துவது. ஆங்கிலத்தில் Sci fi தனியாக ஒரு Genre, அதற்கான வாசகர்வட்டம் தனியானது.

அறிவியல் கதைகள் எந்த காலகட்டத்தில் எழுதினாலும் அது Speculative fiction. ஆனால் அதற்கும் Fantasyக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. குறிப்பாக அது கருத்துருவம் ஒன்றைக் கதையாக்கும் முயற்சி. அங்கே தவளையை முத்தமிட்டால் அழகான இளவரசன் வருவதில்லை. இந்தக் கதைகளில் கூட சில நல்ல Ideaக்கள் இருக்கின்றன. அதை Develop செய்து நல்ல கதையாக மாற்றும் முயற்சி தான் முழுதும் வெற்றிபெறவில்லை. அடுத்தது மொழிநடை. தி.ஜா வின் மொழிநடையில் ஒருநாளும் Sci fi கதை எழுத முடியாது. கடைசியாக நாம் அறிவியல் கதைகளில் ஒரு Alternate கதையுலகத்தை உருவாக்குகிறோம், அங்கேயும் கதாபாத்திரங்களை, நல்ல கதைகளை வடிவமைப்பது முக்கியமானது. அரூ ஆசிரியர் குழுவிற்கு பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் நற்பணி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s