The Plot – Jean Hanff Korelitz:
ஜீன் நியூயார்க் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர். இதுவரை ஏழுநாவல்கள் எழுதியுள்ளார். அவற்றுள்சில திரைப்படமாக, HBO series ஆக எடுக்கப் பட்டுள்ளன. ஜேம்ஸ் ஜாய்ஸின் The Dead எனும் சிறுகதையை நாடகமாக்கியிருக்கிறார். இந்த நாவல்
2021 May 11ல் வெளியாகியது.
இதே பெயரில் இர்விங் வாலஸின் Political thriller novel ஒன்று இருக்கிறது. ஆனால் அது Plot இன் வேறு அர்த்தத்தில் (சதித்திட்டம்). Irving Wallaceம் Sidney Sheldonம் பெரும்பாலும் கல்லூரி தினங்களில் கடைசி பெஞ்சில் படித்தவை. இர்விங் வாலஸைப் படிக்க விரும்புவர் Second Lady, Seventh Secretல் இருந்து ஆரம்பிக்கலாம்.
நாவலின் முதல்பகுதி Writers creative workshopல் நடக்கிறது. முழுக்கவே எழுத்து யுத்திகள், சவால்கள், சில ஆலோசனைகள், பல வெற்றிகரமான எழுத்தாளர்கள் பற்றிய குறிப்புகள் என்று திரில்லர் நாவலின் ஐந்தில் ஒரு பகுதி முழுக்கவே இலக்கியம் குறித்த விவரங்கள் ஆங்கிலத்தில் சாத்தியமாகியிருக்கிறது.
ஏஜன்ட் மற்றும் எடிட்டரின் பங்கு மிகமிக முக்கியமானது ஆங்கில நூல்களைப் பொறுத்தவரை. ஏஜன்ட் சரியான கைகளில் புத்தகங்களைக் கொண்டு சேர்ப்பதுடன், நாவலாசிரியரின் வெற்றிகரமான எழுத்து வாழ்க்கைக்கு உதவுகிறார். எடிட்டர் நூலில் தவறுகள், முன்பின் முரண்தகவல்கள் இல்லாமல் அவரது சிவப்பு பென்சிலை வைத்துப் பார்த்துக் கொள்கிறார். இத்தனை பேர் இருக்கிறார்கள் என்று எழுத்தாளர்கள் ஆய்வு செய்யாமல் எழுதுவதில்லை. வருடம் ஒரு புத்தகம் வெளியிடும் எழுத்தாளர் குறைந்தபட்சம் அந்த நூலுக்கு சராசரியாக 3000 மணிநேரங்களேனும் செலவு செய்கிறார்.
கதைக்களம் என்பது ஒரு நாவலுக்கு எவ்வளவு முக்கியம்? கதைகளைத் திருடுதல் (தழுவுதல்).கதைகளிலும் நிஜவாழ்க்கையிலும் பலமுறை வந்தவை. இந்தக்கதையில் கதையின் ஒருபகுதியைச் சொன்னவன் இரண்டு மாதத்தில் இறந்து போக, தோல்வியடைந்த எழுத்தாளன் அந்தக்கதையைத் தன் மொழிநடையில் எழுதி அது மிக வெற்றிகரமான நாவலாகிறது.
அமெரிக்கா போன்ற நாட்டில் ஒரு எழுத்தாளர் சந்திக்கும் பிரச்சனையை வைத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. நம் சூழலில் ஒரு பிரபல எழுத்தாளர் என் கதையை திருடி விட்டார் என்று சொல்பவரைத் தான் பைத்தியம் போல் பார்ப்பார்கள். ஆனால் அமெரிக்காவில் குற்றச்சாட்டுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு ஒரளவு உண்மை இருப்பினும் எழுத்துலக வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும். நாவலாசிரியரின் கதையோடு அவருடைய நாவலின் பாகங்களும் Meta-narrative ஆக வருகிறது. அது ஏன் வருகிறது என்பது நாவலை முடிக்கும் போது விளங்கும். சில நேரங்களில் Fiction உண்மைக்கு மிக நெருங்கி விடுகிறது. Oprahவும் Reese Witherspoon இருவரும் பரிந்துரைத்த புத்தகம் இது. Brilliant என்று Stephen King உட்பட பல பிரபல எழுத்தாளர்கள் இந்த நூலுக்கு Feedback கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அவர்கள் திறமை மேல் அசாத்திய நம்பிக்கை இருக்க வேண்டும் இல்லை என்றால் பெண் எழுதியதை Brilliant என்று ஏன் சொல்லப்போகிறார்கள்! நாமெல்லாம் சொல்லவா செய்கிறோம்!
Good writers borrow, great writers steal– T.S.Eliot.
https://www.amazon.in/dp/B08M17L1QS/ref=cm_sw_r_wa_apa_glt_2MAKAW564PJHQJK80T9J