Brevity – David Galef
டேவிட் அமெரிக்க எழுத்தாளர், விமர்சகர், கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர். இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். எழுத்தாளர் பட்டறையில் ஆசிரியராக இருந்தவர். மிசிஸிபி பல்கலையில் இலக்கியம் கற்பித்தவர். பல நூல்களை எழுதிய இவரது இந்த நூல் குறுங்கதைகள் (Flash Fiction).குறித்து வந்த நூல்களில் முக்கியமானது.
1500 வார்த்தைகளுக்குக் கீழ் வருவதெல்லாம் குறுங்கதைகளா? அப்படி என்றால் குமுதம் ஒருபக்கக் கதைகளும் அந்த வரையறைக்குள் வரும் இல்லையா? நல்ல குறுங்கதை ஒரு அறிக்கை போல் கதையை சொல்லாது, அது வாசகருக்கு ஏற்படுத்தும் தாக்கத்தை
நம்பியிருக்கிறது. குறுங்கதைக்கு ஆரம்பம் வேண்டியதில்லை, நேரடியாக விசயத்திற்கு செல்லலாம். முழு விளக்கம் தேவையில்லை. கூர்மையான ஒரு வரிசொல்லாததை பக்கங்கள் சொல்லப் போவதில்லை (For Sale; baby shoes, never worn).முடிவை விளக்க வேண்டியதில்லை. ஒரு செயல், ஒரு பிம்பம் போதுமானது.
கதாபாத்திரங்கள் குறித்து சாண்டில்ய விளக்கம் குறுங்கதைகளில் வராது. அவள் உயரம் என்று சொல்ல அதிக வரிகள் வேண்டாம், எதன் மேலும் நிற்காமல் ரெப்ஜிரேட்டரின் மேல்தள தூசியை அவளால் எளிதாகத் துடைக்க முடியும் என்று சொல்லலாம். சுஜாதா “அலமுவிடம் ஏழ்மை தோற்றிருந்தது” என்று ஒரு வரியில் சொல்லியிருப்பார்.
நம்முடைய வாய்மொழிக்கதைகளில் குறுங்கதைகள் இருந்திருக்கின்றன. குரு ஆற்றைக் கடக்கத் தவிக்கும் பெண்ணை தோளில் ஏற்றி உதவுகிறார். சீடன் மண்டபத்தை அடைந்ததும் நாம் துறவிகள், பெண்ணைத் தொடலாமா என்கிறான். குரு நான் அவளைக் கரையிலேயே இறக்கிவிட்டேன் நீ இன்னும் அவளை இறக்கவில்லை என்கிறார். நிச்சயமாக இது ஒரு குறுங்கதை.
துணுக்குகள் (Anecdotes) ஒரு போதும் குறுங்கதை ஆவதில்லை
உன் முதல் கணவர் எப்படி இறந்தார்?
காளான் சாப்பிட்டு.
இரண்டாவது கணவர்?
காளான் சாப்பிட்டு.
மூன்றாவது கணவர்?
மண்டை உடைந்து.
எப்படி?
காளான் சாப்பிட மறுத்ததனால்.
இது துணுக்கு வகையில் சேர்த்தி.
வெட்டுதல் (Cut). சீவுதல் (Slashing).நுண்அறுவைசிகிச்சை (Microsurgery).திருத்துதல், மீண்டும் திருத்துதல் (Edit and reedit) எல்லாமே கவிதைகளுக்குத் தேவைப்படுவது போல குறுங்கதைகளுக்கும் தேவைப்படுகிறது. கவிஞர்கள் குறுங்கதைகளை எழுதுகையில் மொழிநடை கச்சிதமாக அமைவது தற்செயலான விசயமல்ல.
போர்ஹேல்லின் பல கதைகள் குறுங்கதைகள். A dialogue about a dialogue கதையில் இரண்டு குரல்கள் விவாதம் செய்கையில் ஆத்மாவின் அழிவின்மையைப் பேசிப்பின் முதல்குரல் அவை இன்னும் உயிரோடிருக்கிறோமா என்ற வினாவை எழுப்பும். அதே போலவே The two kings and the Labyrinths குறுங்கதை இலக்கணத்தில் கச்சிதமாகப் பொருந்துவது.
Genre என்பது குறுங்கதைக்கு உண்டா என்றால் கண்டிப்பாக உண்டு. Poeவின் Gothic கதைகள் குறுங்கதைகள். சிவன் வந்து வரம் தந்துதந்து போவார் பதிவிரதைக்கு இன்னல் வரும் பழையபடி தீரும் என்ற ஸ்டீரியோடைப் கதைகள் எந்த Genreல் எழுதப்பட்டாலும் குறுங்கதைகள் இல்லை.
காட்சி அமைப்பு குறுங்கதைகளில் வரலாம் ஆனால் பல காட்சி அமைப்புகள் ரெய்னீஸ் ஐயர் தெரு கதை மாந்தர்கள் போல் வந்தால் அது குறுங்கதை ஆகாது.
திடீர் திருப்பங்கள் (Twists).குறுங்கதைகளின் கடைசியில் வரலாம் ஆனால் அது அதிர்ச்சிமதிப்புக்காக இல்லாமல் கதையின் அழுத்தத்தை அதிகரிக்க இருக்க வேண்டும். Shirley Jacksonன் Lottery ticket குறுங்கதை அல்ல ஆனால் கடைசியில் அந்த டிவிஸ்ட்!
உரையாடல் மிகக்கூர்மையாக குறுங்கதைகளில் வரவேண்டும். சுற்றி வளைத்து அம்மா வந்தாளில் இந்து அத்தை இல்லாத அன்று அப்புவிடம் பேசுவது நாவலுக்கு நன்றாக இருக்கும். குறுங்கதைகளில் வரக்கூடாது.
கதைச்சுருக்கம் ஒருநாளும் குறுங்கதை ஆவதில்லை. கதைச்சுருக்கம் தமிழில் நூல் விமர்சனம் என்ற பெயரில் சொல்லி அடுத்தவர் படிக்கவிடாமல் செய்வது. அதற்கும் குறுங்கதைக்கும் சம்பந்தமேயில்லை.
Meta fiction என்றால் எளிதாக எழுத்தைப் பற்றி எழுதுவது என்று சொல்லலாம். மீண்டும் போர்ஹேலைத் துணைக்கழைப்போம். Borges and I கதையில் கதாபாத்திரமா இல்லை போர்ஹேலா அந்தப் பக்கத்தை எழுதியது?
She raised the glass and downed the love potion. Soon, she would love him back.
அவள் கண்ணாடிக்குவளையை உயர்த்திக் காதல் பானத்தை அருந்தினாள். விரைவில் அவனை மீணடும் காதலிப்பாள்.
இதை நாம் Twitter fiction என்று சொல்லலாம் Flash fiction இல்லை.
இந்த நூல் Flash Fiction Handbook என்றே சொல்லலாம். குறுங்கதையின் ஒவ்வொரு கோட்பாடுகளும் விளக்கப்பட்டு, அதற்குப் பொருத்தமாக ஒன்றோ அல்லது இரண்டோ கதைகள் கொடுக்கப்பட்டு, அதன் கீழ் பாடநூல்களில் வருவதைப் போல் பயிற்சிக்கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை படிப்பதற்கு குறுங்கதை எழுதுலதற்கு ஒரு வழிகாட்டலாக இருக்கும், அதை விட முக்கியமானது எவையெல்லாம் குறுங்கதைகள் இல்லை என்பதைக் கண்டுகொள்ளலும் எளிதாக இருக்கும்.engli