Flash Fiction International- Very short stories from Around the World – Edited by James Thomas, Robert Shapard & Christopher Merrill :

உலகநாடுகளில் இருந்து குறுங்கதைகளைத் தொகுத்து அமைக்கப்பட்ட நூல் இது. இலங்கை, பங்களாதேஷ் போன்ற சிறிய நாடுகளில் இருந்தும் பிரதிநித்துவக்கதைகள் வந்திருக்கின்றன. இந்தியாவில் இருந்து ஒரே கதை. குழலி மாணிக்கவேல். இவர் நூலைக் குறித்துப் பல மாதங்கள் முன்பு இரா.முருகன் குறிப்பிட்டிருந்தார். இவருடைய Eating Sugar telling lies ஒரு குழுவில் சிபாரிசு செய்து நான் படிக்காமல் விட்டது. ஆம் இவர் தமிழர்.

ஆயிரக்கணக்கில் கதைகளுக்கு மேல் பரிசீலித்து கடைசியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எண்பத்தாறு கதைகள் இவை. உலகின் சிறந்த கதைகள் என்று குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்டவை. குறுங்கதைகளை விரும்புவோர் தவறாது படிக்க வேண்டிய நூல் இது.

இஸ்ரேலின் Edgar Keretன் கதை, உலகத்திலேயே சிறந்த கதை அது தான் என்கிறது. ஏனென்றால் ஒரு அதிருஷ்டசாலி வாசகர் புது Mazda Lantis பரிசாகப் பெறுவார்.

H.J.Shepardன் அமெரிக்கக்கதை காதல்கதை போல் ஆரம்பித்து வேறுவிதமாக முடிகிறது.

Muna Fadhilன் ஈராக்கியக்கதை போரில் சிறைபிடிக்கப்பட்ட ஒருவன் பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு வெளிவந்தபின் அவன் அந்நியமாவதைச் சொல்கிறது.

Shabnam Nadiaவின் பங்களாதேஷ் கதை
இஸ்லாமிய சமூகத்தில் ஆணுக்கு இருக்கும் அதிகாரத்தையும் பெண் அவளுக்குப் பிடித்ததைச் சாப்பிடுவதில் எல்லாவற்றையும் மறப்பதையும் பேசுகிறது.

Linh Dinhன் வியட்நாமியக்கதை படிக்கத் தெரியாத ஒருவன் பெருமைக்காக தினம் வேறுவேறு புத்தகங்களைச் சுமப்பதும், அமெரிக்க வியட்நாம் போரில் அந்தப் புத்தகங்களே அவன் வீட்டைக் காப்பாற்றுவதையும் சொல்கிறது.

Randa Jarrarஇன் பாலஸ்தீனியக்கதை ஒரு மனைவி, துருக்கிய மாலுமியுடன் ஒருஇரவு கழித்ததை வந்து கணவனிடம் சொல்லி அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளாததில் கோபம் கொள்வதைச் சொல்கிறது.

Kafkaவின் An Imperial Message ஒரு பக்கக்கதை. செய்தி உரியவரைப் போய் சேர்வதற்குள் கடந்த காலத்திலிருந்து, வந்த செய்தியாகிறது. தகவல்தொடர்பு செயல் எப்போதுமே ஒரு இழப்பை உள்ளடக்கியது, ஒரு கணம் முன்பு இருந்த ஒரு உலகத்தை நம் கண்கள் எப்போதும் நமக்குக் காண்பிப்பது போல. உண்மையான நிகழ்உலகத்தை, தகவல் நமக்கு ஒருபோதும் வெளிப்படுத்த முடியாது

Shirani Rajapakseன் Shattered குண்டை மார்பில் கட்டிவந்து வெடிக்கவைத்த பெண்ணின் (பயங்கரவாதி என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்) வெடியில் காயப்பட்டு தெருவில் விழுந்து கிடக்கும் பெண் நான் வேலைக்குத் தானே சென்றேன் எனக்கு ஏன் இது நேர்ந்தது என்று விசனப்படுவது. முதலில் அந்தப்பெண் எதற்காக உயிர்தியாகம் (தற்கொலை) செய்ய வேண்டும்? ஆட்கள் நடமாடும் இடத்தில் சாவதற்கு காரணம் என்ன?கருணையே வடிவான புத்தரின் சீடர்களில் எத்தனை பேர் பயங்கரவாதிகள்? நீங்கள் அத்தனைபேரும் உத்தமர் தானா? எப்படி ஒரு இனத்தைக் குறிவைத்து அழித்துவிட்டு அபலைகள் போல் பேசுகிறீர்கள்?

Love- Edgar Omar Aviles- story from Mexico- Originally written in Spanish- translated in English by Toshiya Kamei- ஆங்கிலத்திலிருந்து தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:

“நான் இப்போது மிகவும் உறுதியாக இருக்கிறேன் அம்மா” அந்த சிறுமி விசும்பியவாறே கூறினாள். “கடவுள் நிச்சயமாக இருக்கிறார். அவர் அன்பானவர்.”

“நீ ஏன் இவ்வளவு உறுதியாக இருக்கிறாய் ?”

“நான் அவரைப் பார்த்திருக்கிறேன். அவர் சொர்க்கத்தில் இருந்து என்னோடு பேசினார். சொர்க்கம் இந்த உலகத்திலேயே மிகவும் அருமையான இடம்’ அவள் உறுதியாகவும ஆர்வத்துடனும் பதிலளித்தாள்.

வெங்காயம் நறுக்க உபயோகிக்கும் கத்தியால் அவளை வெட்டுவதை தவிர, அவளுடைய தாயாரால் வேறெதுவும் செய்ய முடியவில்லை. அவள் இளம்பெண்ணாக இருந்தபோதிலும், களங்கமற்றவளாக இருந்தாள். தெருவில் பிச்சையெடுத்து வாழும் கேவலமான வாழ்க்கை அவளுடையது. நிச்சயமாக இன்னும் கொஞ்ச நாட்களுக்குள் அவள் தன் உடலை விற்கத் தொடங்கிவிடுவாள். பிறகு, மகிமை வாய்ந்த சொர்க்கமும் அன்பால் நிறைந்த அவளது கடவுளும் அவளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் பத்தாவது முறையாக கத்தியால் குத்திக் கொண்டிருக்கும் போது, தாயார், தான் நிச்சயம் நரகத்திற்குத்தான் போவோம் என நினைத்தாள்.

Fire. Water எனும் இஸ்ரேல் கதை Perfect Flash Fiction. ஒரு புறம் Incest relationshipக்கு போகின்றதா? இல்லை Siblings விளையாட்டா என்று பல கேள்விகள் கேட்கவைத்து பேரழிவிற்கு நகர்கிறது. ஒரு பக்கத்தில் இது போன்ற கதை எழுதுவது சிரமம்.

Lord of the Flies அர்ஜெண்டினாக்கதை. சொர்க்கம் நரகம் பற்றிப் பேசுவது. ஈக்களுக்கு சொர்க்கம் அழுகிய மாமிசம், இருள், குப்பைகள் இருக்கும் இடம். நரகம் முழுவெளிச்சத்துடன் தூய்மையான இடம். அரைப்பக்க கதை இது. எல்லாமே subjectivity தான். இதை அப்படியே மனிதருக்குப் பொருத்திப் பாருங்கள்.

Honor Killing தென் கொரியக்கதை, அந்நாட்டில் பெண்கள் அழகாக இருந்தால் தான் வேலையில் இருக்க முடியும் என்ற நிலையைப் பேசுகிறது.

Yasunari Kawabata வின் கதை ஆணுக்கும் பெண்ணுக்கும் காலம் செல்ல உடல்களில் விலகல் நேர்வதைச் சொல்கிறது. Night Drive எனும் பிரேசில் கதை, தன் வேலையில் ஏற்படும் இறுக்கத்தை இரவில் ஆள்நடமாட்டமில்லா தெருக்களில் தனியாக நடந்து செல்லும் ஏழைமக்களைக் கார் ஏற்றிக் கொல்வதில் தணிப்பதைச் சொல்கிறது.

Spirit என்று மோகன்லால் படம் ஒன்றில் அவருக்கு விவாகரத்து செய்த மனைவியுடன் சிலநொடிகள் மீண்டும் ஒரு Intimate moment கிடைக்கும். Edward Mullanyஇன் Reunion விவாகரத்து செய்த இருவரின் தற்செயல் சந்திப்பும் ஒரு Intimate momentம் புதுமனைவியின் சந்தேகமும் பற்றி சொல்கிறது.

குழலி மாணிக்கவேலின் கதை இருவர் இரகசியங்களைச் சொல்வதில் இருக்கும் வித்தியாசத்தையும் இருவரின் மன ஓட்டத்தையும் சித்தரிக்கிறது.

The Baby- Maria Negroni- originally written in Spanish translated into English by Anne Twitty- ஆங்கிலத்தில் இருந்து தமிழில் அனுராதா கிருஷ்ணசாமி:

என் குழந்தை குளியல் தொட்டியில் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறான். நான் அவனது தலையை நிதானமாக கழுவத் தொடங்குகிறேன். உடனே அவன் விளையாட்டை ஆரம்பித்து விடுகிறான். அவனுடைய முடியை அலச ஆரம்பிக்கையில், அவனை காணவில்லை. திரும்பிப் பார்த்தால், அவன் மறுபுறம் வருகிறான். என்ன நடக்கிறதென்றே எனக்குப் புரியவில்லை. நான் கண்டிப்பானவளாக மாறுகிறேன். நான் அவனை கடிந்து கொள்கிறேன். அவன் செய்வது எனக்குக் கொஞ்சம்கூட பிடிக்கவில்லை. குழந்தை, மகிழ்ச்சியில் இன்னும் அதிகமாக சிரிக்கிறான். கண நேரம் மின்னல்போல் மின்னி விட்டு மறுபடியும் மறைந்து விடுகிறான். என்னுடைய பொறுமையின்மை, குழப்பத்தை மேலும் அதிகப்படுத்துகிறது. அவன் வேக வேகமாக மறைகிறான், ஆட்சேபிக்கக்கூட எனக்கு நேரம் கொடுப்பதில்லை. சங்கடத்தின் அடுக்குகளின் ஊடாக, நான் அவனது குறும்புப் பார்வையை கணநேரம் யூகிக்கிறேன். என் பார்வையற்ற தன்மையே அவனது வெற்றி. என் பொறாமையே அவனது வேட்கை. கொஞ்ச நேரம் நான் தவிர்க்க முயற்சி செய்கிறேன். கையாளாகாத்தன்மையை எப்படி வரவேற்பதென்று எனக்குத் தெரியவில்லை. குழந்தை விளையாட விரும்புகிறது. இந்த விளையாட்டு திகைப்பூட்டுவதாகவும், ஆயுள் முழுவதும் தொடரக்கூடியதாகவும் இருக்கிறது.

இரண்டு நிமிடத்திலிருந்து ஐந்து நிமிடங்களுக்குள் படித்து முடிக்கக்கூடிய கதைகள். மேலே உள்ள Love கதை போல் தாண்டவிடாமல் ஆழ்ந்து சிந்திக்க வைக்கும் கதைகள். சில Metaphor அல்லது Analogyஐ நம்பி எழுதிய கதைகள். உணர்வைத் தூண்டும் கதைகள். Open ended stories. fables, prose poems, fun stories என்று பல வகைகளில். மொத்தமாகப் படிப்பது ஒரு இனிய அனுபவம்.

பல கதைகள் வாசகரின் பங்களிப்பையும் கோருபவை. அவர்கள் பங்கு இல்லாது கதைகள் பூர்த்தியாவதில்லை. எத்தனை கதைகள் உலகத்தில்! கலாச்சாரங்களுக்கேற்ப மாறுபடும் கதைகள், அவர்கள் நாட்டின் பிரச்சனையைச் சொல்லும் கதைகள், பெயரை மாற்றினால் உலகத்தின் எந்த நாட்டுக்கும் பொருந்தும் கதைகள் என்று கதைகள் பலவிதம். இவை எல்லாவற்றையும் ஒன்றிணைப்பது குறுகிய இடத்தில் நிறைய விசயங்களை சொல்ல வேண்டிய நிர்பந்தம் (சிறுகக்கட்டி பெருக வாழ்), அது தான் இந்தக் கதைகளின் அழகைக் கூட்டியிருக்கிறது. வழமை போல் அமெரிக்க, லத்தீன் அமெரிக்க பிரதிநித்துவம் கதைகளில் அதிகம் இருந்தாலும் மிகப்பெரிய தேடல் இல்லாது உலகநாடுகள் முழுவதிலும் இருந்து கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்க முடியாது.
.
Contents:
The story, victorious / Etgar Keret — Please hold me the forgotten way / H.J. Shepard — Prisoner of war / Muna Fadhil — The waterfall / Alberto Chimal — Eating bone / Shabnam Nadiya — Esse / Czetaw Mitosz — The gospel of Guy No-Horse / Natalie Diaz — Man carrying books / Linh Dinh — The attraction of asphalt / Stefani Nellen — Barnes / Edmundo Paz Soldan — A sailor / Randa Jarrar — The voice of the enemy / Juan Villoro — An Imperial message / Franz Kafka — Trilogy / Antonio Lopez Ortega — Shattered / Shirani Rajapakse — Bruise / Stuart Dybek — Love / Edgar Omar Aviles — First impressions / Ricardo Sumalavia — Fire. Water. /Avital Gad-Cykman — The snake / Eric Rugara — An ugly man / Marcela Fuentes — The lord of the flies / Marco Denevi — Honor killing / Kim Young-ha — Signs / Bess Winter — Idolatry / Sherman Alexie — Lost / Alberto Fuguet — The extravagant behavior of the naked woman / Josefina Estrada — Sleeping habit / Yasunari Kawabata — Night drive / Ruben Fonseca — Truthful lies / Frankie McMillan — The tiger / Mohibullah Zegham — Everyone out of the pool / Robert Lopez — The baby / Maria Negroni — Aglaglagl / Bruce Holland Rogers — The five new sons / Zakaria Tamer — The vending machine at the end of the world / Josephine Rowe — The past / Juan Carlos Botero — Everyone does intergral calculus / Kuzhali Manickavel — Little girls / Tara Laskowski — Ronggeng / Yin Ee Kiong — Butterfly forever / Chen Qiyou — Labyrinth / Juan Jose Barrientos — The light eater / Kirsty Logan — Late for dinner / Jim Crace — Volcanic fireflies / Monica Lavin — Insomnia / Vigilio Pinera — Four hands / Margarita Meklina — Engkanto / Peter Zaragoza Mayshle — Without a net / Ana Maria Shua — Appointment in Samarra / W. Somerset Maugham — The Hawak / Brian Doyle — The egg pyramid / Nuala Ni Chonchuir — An ouroboric novel / Giorgio Manganelli — The color / Jon McGregor — Like a family / Meg Pokrass — The madonna round Evelina’s / Pierre J. Mejlak — My brother at the Canadian Border / Sholeh Wolpe — Skull of a sheep / James Claffey — Arm, clean off / Cate McGowan — Finished symphony / Augusto Monterroso — When a dollar was a big deal / Ari Behn — Amerika street / Lili Potpara — Joke / Giannis Palavos — Heavy bones / Tania Hershman — Dream #6 / Naguib Mahfouz — Daniela / Roberto Bolano — Sovetskoye Shampanskoye / Berit Ellingsen — Consuming the view / Luigi Malerba — Reunion / Edward Mullany — The interpreter for the tribunal / Tony Eprile — The gutter / Ethel Rohan — Three-second angels / Judd Hampton — The lament of Hester Muponda — Petina Gappah — Farewell, I love you, and goodbye / James Tate — The most beautiful girl / Peter Stamm — The ache / Elena Bossi — The young widow / Petronius — Fun house / Robert Scotellaro — Squeegee / James Norcliffe — From the roaches’ perspective / Qiu Xiaolong — Not far from the tree / Karina M. Szczurek — Family / Jensen Beach — Honey / Antonio Ungar — Hotel room / Juan Jose Saer — The nihilist / Ron Carlson — Stories / Natasza Goerke.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s