வியூகம் காலாண்டிதழ் ஆறு மே 2021:

ஜே.கே யின் திருமதி.பெரேராவிற்கான விரிவான விமர்சனம், நாற்பதுகளில் எழுதப்பட்ட மடோல் தூவ என்னும் சிங்களநாவல், Kite Runner, அந்நியன், மெர்சோ மறுவிசாரணை,Swamy and Friends போன்ற நூல்களுக்கும் இதில் ஒரு கதைக்குமுள்ள பொதுமைப்பண்பைக் கூறி, இசூரு எவ்விதம் மற்ற சிங்கள இலக்கியவாதிகளிடம் இருந்து வேறுபடுகிறார் என்பதையும் விளக்குகிறது.

லேகா ராமசுப்பிரமணியன் அவருக்கேயுரிய பிரத்தியேக பாணி விமர்சனத்தால் “Never rarely sometimes always” என்ற படத்தைப் பார்க்கும் ஆவலை அதிகப்படுத்துகிறார்.

ஃபஷ்றி கவிதைகள் இரண்டும் இயற்றை அழகை வர்ணிக்கின்றன.

நபீல் கவிதைகள் மூன்று

” முன்பே எண்ணெய் தடவி வழவழப்பாக்கி
உச்சியில் முத்தமிட்டது போக
திறந்திருக்கும் கதவின் வழியே வரும்
மஞ்சள் வெளிச்சச்சூடு
உன் புருவங்களுக்கிடையில்
நெளியும்
சுருக்கங்கள்மீது விழுந்துகொண்டிருக்கிறது.”

கீதப்பிரியனின் தன்மாத்ரா மலையாளத் திரைப்பட விமர்சனம், அவர் ரசனை அனுபவங்களாக படத்தில் ரசித்த காட்சிகளைப் பகிர்ந்து இது எப்படி அவரைப் பாதித்தது என்றும் சொல்கிறது.

ஜே.வஹாப்தீன் கவிதை

” சிட்டுக்குருவி
பட்டுப்பூ
ஒரு குட்டிக்கடிதம்
எழுத முடியாமல்
கண்களை ஏன்
நீர்தொட்டியாக்கினாள்?”

கவிதையின் கடைசியில் தெரியவரும்.

சேரனின் வலியை சுமந்து வரும் ஒன்பது கவிதைகள். இந்தக் கவிதை புன்னகை செய்யச் செய்கிறது:

” கண்ணா மரக்காடு
கால் விட்டுச் சேறாடும்
நெட்டைக்குருவி
நெருங்காத காதலுளம
வெட்டிப்பேச்சால் இந்த
வெயிலைப் பழிக்கின்ற
பல்லாயிரம் குருவிக்கூட்டம்
மின்கயிற்றில் சொண்டாட்டம்
வேறென்ன வேண்டும் இந்த
நாளுக்கு?”

சேரனின் மொழி, கவிதையின் அழகியலைத் தாண்டி, ஒரு வலியை ஏற்படுத்துகிறது.

” நினைவழிப்பின் சின்னம்
காலோடு மரித்த காலங்கள்”

” எல்லோருக்கும் ஒரே இறைவன்
எல்லா இறைவருக்கும் ஒரே களப்பலி”

“முற்றுகைக்குள் படிமம் சிறைப்படாது
மேலைக்காற்றில் மிதக்காது
காலடியற்றவர்களுக்குப் போதும்
கடலும் கவிதையும்”

“அன்பின் பரிசல்ல விரல் நுனி
அது நம்பிக்கையின் துளிர் இலை”

முழுதும் ரசிக்க முழுக்கவிதைகளைப் படியுங்கள்.

சோலைக்கிளியின் மெல்லிசைப் பாடல்கள் கட்டுரை மதுரை போன்ற நகரில், இலங்கை வானொலியின் துல்லியமான சேவையைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு ஒரு Nostalgic பயணம். என்னால் இன்றும் P. Leela, T.A.Periyanayakiன் குரல்களை அடையாளம் கண்டுபிடிக்க முடிவதன் Total credit இலங்கை வானொலிக்கே செல்ல வேண்டும். இந்தக்கட்டுரை மெல்லிசை பாடல்களின் தேக்கம் (சின்ன மாமியே உன் சின்ன மகள் எங்கே) குறித்த ஆதங்கத்தைத் தெரிவிக்கிறது.

இந்தியாவில் இருப்போர் இந்தியாவைத் தாண்டினால் தான் பயணம் செய்த உணர்வு கொள்வது போன்ற மனப்பான்மைதான் இலங்கையிலும் போலிருக்கிறது. நின்னோஸாவின் கரவென்னல்ல பயணக்கட்டுரை(சாகச?)
படிப்பதற்கு சுவாரசியமாக இருக்கிறது. அங்கே ” கோப்பி மரங்காவின் கொட்டைகளைப் பறித்துக் காயவைத்து அரைத்து புதுமணம் மாறாத காப்பி தயாரிக்கிறார்கள்”. ஆஹா சொல்லும் போதே நாக்கில் காபி சுவை தட்டுகிறதே.
(ஆனால் இவர் குடிப்பது நெஸ்டமோல்ட்)

கோ.நாதனின் கவிதை நீள் இரவின் தனிமை

” இரவை சிகரெட் புகையின் நீளத்தில்
கடத்துகின்றேன் அந்த
குளிர்ந்த பொழுது உடலை இழுத்து
விலங்கு உருவில்
ஒருக்களித்துக் கொண்டிருந்தது”

சுதந்திர பொம்மை-காஞ்சனா பிரியகாந்த- தமிழில் பிரியதர்ஷினி சிவராஜா:

ஒரே எழுத்தாளர் அதே மொழிபெயர்ப்பாளர் இருப்பினும் ஒரே மாதத்தில் படித்த இருகதைகளின் தரத்தில் எவ்வளவு வித்தியாசம்! தண்டவாளம் இவ. எழுதிய நல்ல கதை. இந்தக்கதை அறுபதுகளில் ரசித்திருக்கக்கூடிய கதை.

அலறியின் இரண்டு கவிதைகள்.

இளங்கோவின் காதலின் பழகியதடத்தில் மீண்டும் ஒரு சிறிய நடைப்பயணம்.

அபாரின் கவிதைகள் இரண்டு.

கல்லோயா கறுத்தப்போத்தல்- தமிழ்க்கவி;

Arranged marriage என்பதே லாட்டரி வாங்குவது போன்ற நம்பிக்கை. பேப்பரில் நம்பர் இல்லாவிட்டால் ஒரு நம்பர் தான் மாறியிருக்கிறது, அதிருஷ்டம் பக்கத்தில் வந்து லிட்டது, கொஞ்சம் பொறுமை காத்தால் போதும் என்று நமக்கு நாமே சொல்லிக்கொள்ள வேண்டியது தான்.

பாட்டு வேண்டுமா- உமா வரதராஜன்:

பழைய பாடல்களில் முழ்கி எழுந்து வந்த உணர்வை அளிக்கும் கதை. மணமாலை PBS பாடலைக்கூட விடவில்லை இவர். பழைய பாடல்களின் பக்தர்கள் இளையராஜாவை வியந்து நோக்குவதில்லை. தொழில்நுட்பம் வளராத காலத்தில் ஒரு பெண்ணைப் பார்த்து பாடல் ஆரம்பிக்குமுன் இரட்டையரின் Bongo உருட்டல்கள் போல் எத்தனையோ நூறு அதிசயங்களைக் கடந்து வந்தவர்கள். முழுக்கவே பாடல்கள் பற்றி வரும் கதையில் அனு வந்து போவது, ராதை கண்ணனைப் பிரிந்தே போகிறாள் பாடல் என்பது போல் வழக்கமான உமா வரதராஜன் Touchம் மெல்லிய நகைச்சுவையும் இந்தக்கதையில் நிறையவே இருக்கிறது.

றஷ்மியின் அடைவுகாலத்தின் பாடல் ஆரம்பமும் முடிவும் வேறுவேறு உணர்வைத் தருபவை.

” அலைபுரண்டு திரும்பிய மணலில்
காரீயமும் மண்ணிறமுமாய்
ஈரம் இருக்கும்
ஒற்றைக் கொலுசு அணிந்த உன்
பாதங்களை ஒட்டி அகலாது கூடவரும்
தடங்கள் நீர் சுரந்து கலையும் பிறகும் கடல் உன்னைக்காணக் கரையேறும்.”

வியூகம் சென்ற இதழை விட நேர்த்தியாக வந்திருக்கிறது. இதழ் விலை இலங்கை ரூபாய் 200.

வியூகம் – 6வது இதழ் பின்வரும் இடங்களில் தற்போது கிடைக்கும் .

யாழ்ப்பாணத்தில் :
திரு.அ .யேசுராசா , இல.1, ஓடைக்கரை வீதி , குருநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி இலக்கங்கள் 0777678257/ 021 2224532

கொழும்பில் :
பூபாலசிங்கம் புத்தகசாலை ,202 ,செட்டியார் தெரு, கொழும்பு -10
தொலைபேசி 0112435713

இஸ்லாமிக் புக் ஹவுஸ், 77 , தெமட்டகொட வீதி , மருதானை
கொழும்பு -09 -செல்பேசி இல.0755447122

மட்டக்களப்பில் :
பேராசிரியர் செ.யோகராசா , பெய்லி குறுக்குத் தெரு
செல்பேசி 0772343896

ஏறாவூரில் :
ஃ பாத்திமா புக்ஸ் சென்டர், 219, A .K .M . குறுக்கு வீதி ,ஏறாவூர்
செல்பேசி இலக்கங்கள் 0775494977 / 0770807787

கல்முனையில் :
உமா வரதராஜன் ,பிரதான வீதி ,பாண்டிருப்பு -1
செல்பேசி 0772852572

சிவ வரதராஜன் , வைத்தியசாலை ஒழுங்கை ,கல்முனை
செல்பேசி 0773484852

சோலைக்கிளி , பள்ளிவாசல் வீதி ,கல்முனை -04
செல்பேசி 0771607056

அக்கரைப்பற்றில் :
பேஜஸ் புக் ஹவுஸ் , 117, நகர்ப் பள்ளிவாசல் வீதி
அக்கரைப்பற்று-2 -செல்பேசி 0773595111

சம்மாந்துறையில் :
பேராசிரியர் .றமீஸ் அப்துல்லாஹ்
செல்பேசி 0774805646

மன்சூர் ஏ காதர் , குலிஸ்தான் ,54, அலி வன்னியார் வீதி
செல்பேசி 0777561638

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s