ஆசிரியர் குறிப்பு:

தஞ்சாவூரில் பிறந்தவர். உளவியல் ஆலோசனையில் முதுநிலைப்பட்டம் பெற்றவர். மனநலம், வாழ்வியல் குறித்து இவர் எழுதிய கட்டுரைகள் பத்திரிகைகளில் வெளியாகியுள்ளன. ஈஸ்ட்ரோஜன் என்ற பெயரில் இவரது கவிதைத் தொகுப்பு ஏற்கனவே வெளியாகியிருக்கிறது. இது இவரது முதல் மொழிபெயர்ப்பான அராபிய பெண்ணியச் சிறுகதைகள்.

மொழிபெயர்ப்பு என்பதே காரைக்குடிக்காரர்கள் போல் வளர்ந்த பிள்ளையைத் தத்து எடுப்பது தான். எவ்வளவு கவனமாக வளர்த்தாலும் சின்ன இடறலுக்கு பெற்றபிள்ளை என்றால் இப்படி வளர்ப்பார்களா என்பார்கள். பணக்காரப்பிள்ளை சுட்டித்தனமாக வளர்ந்தாலும் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு சமத்து என்பார்கள். Jhumpa Lahiriக்கு நன்கு தெரிந்தது ஆங்கிலம். இத்தாலி மொழி கற்று அதில் எழுதிய நாவலை அவரே சமீபத்தில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறார். அவர் சொல்வது : ” I discovered my tics, word choices, and ways I was arranging things that I was partial to. Translating is a form of literary criticism as well. You begin to understand the text in a much more distanced and nuanced way”.

இந்தத் தொகுப்பில் வரும் கதைகளில் பெண்கள் மார்பு அரும்ப ஆரம்பித்ததும் படித்தது போதும் என்று வீட்டுக்காவலில் வைக்கப்படுகிறார்கள், சிறுவனுடன் விளையாடிய குற்றத்திற்குக் கொல்லப்படுகிறார்கள், கணவனின் மணவினை தாண்டிய உறவுகளைக் கேள்வி கேட்கத் தயங்கிப்பின் முழுங்கிக் கொள்கிறார்கள். ஆனால் ஆண்கள் வயதான காலத்திலும் பணிப்பெண்ணுடன் கள்ள உறவு கொள்கிறார்கள், சகோதரர்கள் தங்கள் உடன்பிறந்த பெண்களிடம் இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும் என்று சட்டம் விதிக்கிறார்கள், கணவர்கள், மனைவி குழந்தைகளைத் தவிக்கவிட்டு வேறுமணம் செய்கிறார்கள், பெண்களை அடிப்பது அவர்கள் உரிமை என்று நினைக்கிறார்கள். முழுக்க முழுக்க ஒரு ஆணாதிக்க சமூகத்தில் வாழ்வதன் இன்னல்கள் குறித்த பல பெண்களின் உணர்வே இந்தக்கதைகள். Fadia Faqir தொகுத்த In the House of Silence அராபிய பெண் எழுத்தாளர்களின் சுயசரிதைக்குறிப்புகள். அதிலும் எல்லாப் பெண்களும் சுதந்திரம் இல்லாததன் Suffocation குறித்தே முக்கியமாக எழுதியிருக்கிறார்கள்.

இந்தக்கதைகள் அநேகமாக ஒரு நூலில் இருந்து எடுக்கப்பட்டிருக்க வேண்டும். கடையில் ஆசைப்பட்டு வாங்கும் பிடித்த பாடகரின் CDல் இதுவரை கேட்காத அறுவைப் பாடல்கள் இருப்பது போல ஒரு தொகுப்பிற்குள் நம்மை சுருக்கிக் கொள்கிறபோது, அராபிய இலக்கியத்தின் முழுவீச்சு என்பது சாத்தியமேயில்லை. Inaam Kachachi, Hoda Barakat, Fadia Faqir, Naguib Mahfouz போன்ற குறைந்தபட்சம் இருபது பெண்களேனும் அராபிய இலக்கியத்திற்கு பங்களிப்பு செய்திருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலும் நாவல்கள். இதில் வரும் ஒரு சிறுகதை எழுதிய லேலா பாலபக்கியும் அடிப்படையில் நாவலாசிரியர். கடைசியில் நல்லா பாடுகிறவரைக் கூப்பிட்டு வந்து ஆட வைத்த கதை.

அந்தக்கோடை விடுமுறை போல கூர்மையாக வந்த கதைகள் வெகுசிலவே தொகுப்பில் இருக்கின்றன. மீண்டும் மீண்டும் ஒரு சின்ன வட்டத்திற்குள் கதைகள் சுற்றுகையில் அதன் தாக்கம் பெரிதாக உணர வாய்ப்பு குறைவு. மொழிபெயர்ப்பு செய்வதை விட எதைச் செய்கிறோம் என்று தேர்ந்தெடுப்பது முக்கியமானது. ஜான்சி செய்த மொழிபெயர்ப்புகளை ஆரம்பத்தில் இருந்தே கவனித்து வருகிறேன், முழுஈடுபாட்டுடன் செய்யும் நல்ல மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர் இவர். தொடர்ந்து செய்யவேண்டும். அரபிப் பெண்களின் கதைகள் தொகுப்பாக எனக்குத் தெரிந்த வரை தமிழில் வருவது இதுவே முதல்முறை. அந்த வகையில் இந்த நூல் முக்கியமானது.

பிரதிக்கு:
எதிர்வெளியீடு 99425 11302
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ 160.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s