ஆசிரியர் குறிப்பு:

சிறுகதைகள், கட்டுரைகள், விமர்சனம் என்று பலதளங்களில் இலக்கியத்தோடு அளவளாவிக் கொண்டிருப்பவர். சிறந்த மொழிபெயர்ப்பாளர். எல்லாவற்றிற்கும் மேலாகத் தொடர் வாசிப்பில் இருக்கும் சிறந்த வாசகர். இந்த நூல் இவர் சென்ற சில இடங்களையும் அதைக் களமாக வைத்து எழுதப்பட்ட புத்தகங்களையும் பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு.

அயல்நாட்டை விடுங்கள், திருவனந்தபுரமோ, மதுரையோ எந்த ஊருக்குச் சென்றாலும் எனக்கு நினைவில் வருவது வேறு விசயம். திருவனந்தபுரம் என்றால் பள்ளிகொண்டபுரம், மதுரை என்றால் குறிஞ்சிமலர் என்று நினைவுகள் புத்தகங்களை இழுத்து வராமல், கடிவாளம் போட்ட குதிரை போல் ஒரு திசையிலேயே பயணிக்கிறது. நல்லவேளை, இவருக்கு அப்படியில்லை, அதனால் தான் இந்தப் புத்தகம் சாத்தியமாகியிருக்கிறது.

ஐரோப்பாவில் பலரும் சொல்வது சுதந்திரம், அது போல் ஆண்பெண் சமத்துவம். பெண்களுக்குப் பேருந்தில் இடம் ஒதுக்குவது அல்ல, அவர்களே பேருந்தை ஓட்டவைப்பதே சமத்துவம். ஒரு பெண்ணாய் இருப்பினும்…… ஒரு பெண் என்றும் பாராமல்….. என்று எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் சமத்துவமில்லை.

வைகைத்தண்ணீரைக் குடிக்க வேண்டாம். அந்தக் காற்று பட்டுக் கொண்டே வளர்ந்தால் போதும். ரசனை தன்னால் வரும்:
” மகள் வீட்டில் மொபைலில் பாட்டுக் கேட்டபடி, கையில் பீர் கேனுடன், சின்ன அரைடிராயர், ஜீன்ஸ்கிளாத் சட்டை, வெள்ளைக்காரப் பொன்னிறமுடியுடன் ஒரு குட்டிப்பெண் வேலைக்கு வந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. தமிழ்ப்பட இயக்குனர்கள் பார்த்தால் எமிஜாக்ஸன் ரேஞ்சுக்குத் தூக்கி விடுவார்கள். இப்போது அவள் இல்லையாம்! ஜேம்ஸ்பாண்ட் படங்களில் அவரது பாஸாக வருவாளே, அது மாதிரியான ஒரு திடகாத்திரமான நடுவயதுப் பெண்மணி.”

Irving Stone நூலொன்றை வைத்து வான்கா கதையை ஹேக்கில் பயணித்துக் கொண்டே சொல்வது சுவை. வாழ்க்கைசரிதம் எழுதுபவர் Irving stoneஐ அவசியம் படிக்க வேண்டும். கல்லூரி காலத்தில் வெறித்தனமாக நான் படித்த Irving Wallaceஐக் குறிப்பிடுகையில் எல்லாம் ஆசான் என்கிறார் இவர். சித்தூரில் சற்று தாமதமாக Wallace இறந்த செய்தி கேட்டு அந்த நாள் முழுதும் மந்தமாக இருந்தது.

பாரிஸ் பயணம் பற்றிய கட்டுரை நல்லதொரு கட்டுரை. Is Paris Burning, Day of the Jackal ( இது Frederick Forsythன் மாஸ்டர் பீஸ். படிக்காதவர் உடனே வாங்கிப் படியுங்கள். உங்கள் பணத்திற்கு நான் காரண்டி). போன்ற நூல்களைப் படித்த ஒருவரின் பார்வையில் விரியும் பாரிஸூம் படிக்காதவர் பார்க்கும் பாரிஸூம் ஒன்றல்ல.

ஷேக்ஸ்பியர்&Co பற்றிய குறிப்புகள் வாசிக்க ஆச்சரியமாக இருக்கிறது. (ஜீவகரிகாலன் இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்)

Dan Brownன் Inferno நாவலில் வரும் Palazzo Vecchioல் இருக்கும் Dante’s death mask குறித்த கட்டுரையில் இரண்டு விசயங்கள். ஒன்று எழுதியவர் அமெரிக்கர், இது இருப்பது ப்ளாரன்ஸில். அந்த முகமூடியை வைத்துக் கதையில் ஒரு விசயம் கண்டுபிடிக்கப்படுகிறது. ஆனால் அதுவல்ல விசயம். Dan Brown அதைப் போய் பார்க்காமல் அவ்வளவு விளக்கமாக எழுதியிருக்க முடியாது. அவர் எழுதும் ஒவ்வொரு இடத்தையும் பார்க்காமல் எழுதுவதில்லை. இரண்டாவது அந்த முகமூடிக்குப் பக்கத்தில் இவரது நாவலில் வந்த வரிகள் குறிப்பு வைத்திருப்பது. (படைப்பாளிக்கு மரியாதை. Honour goes with research and accuracy) இவர் சொல்வதைக் கேட்கையில் எனக்கே Goosebumps, நேரில் பார்த்த இவருக்கு எப்படி இருந்திருக்கும்!

நாஜிகள் வதைமுகாம் உட்பட பல இடங்களைச் சுற்றிப்பார்த்து எழுதியிருக்கிறார். அந்த வகையில் இது ஐரோப்பா பயணநூல். மற்ற நூல்களில் இருந்து இந்த நூலை வித்தியாசப்படுத்துவது, பயணம் செய்வது தொடர்வாசிப்பில் இருக்கும் ஒரு வாசகன். போப்பைக் கொல்லும் முயற்சி, பிரெஞ்சு அதிபரைக் கொல்லும் முயற்சி, நாட்டின் ஜனத்தொகையில் மூன்றில் இரண்டு பங்கைத் தீர்த்துக் கட்டும் முயற்சி என்ற எல்லா நாவல்களிலுமே, துல்லியமான தகவல்கள் இருக்கின்றன. படித்த இடங்களை மனக்கண்ணில் முதல் பார்த்துப்பின் புறக்கண்ணில் இரண்டாவது முறை பார்ப்பது ஆனந்தம். அப்படியே லிஸி மாதிரி இருக்காடா என்று நண்பன் சொன்னதை மனதில் சித்திரம் வரைந்து கொண்டு பின் போய் பார்க்கும் அதே ஆனந்தம்.

வித்தியாசமான முயற்சி என்பது மட்டுமல்ல இவரது பரந்த வாசிப்பும் இந்த நூலுக்குப் பெருந்துணை புரிந்திருக்கிறது. Holocaust நூல்களைப் படிக்காமல் நாஜி வதைமுகாம்களை நேரில் சென்று பார்ப்பதில் இதைப் பார்த்தோம் என்று ரெக்கார்டு செய்து கொள்வதைத் தாண்டி என்ன இருக்கப் போகிறது? வாசிப்பது வேறு உலகங்களுக்கு நம்மைக் கொண்டு செல்வது மட்டுமல்ல, படித்த இடங்களை முதன்முறை நேரில் பார்க்கையில் கிடைக்கும் கலைடாஸ்கோப் பார்வை வாசிப்பனுபவம் இல்லாதவருக்குக் கிடைக்கப்போவதில்லை. தொடர்ந்து இவர் நிறைய எழுதட்டும். வாசிப்பில் நேசம் உள்ளோர் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்.

பிரதிக்கு:

பாரதி புத்தகாலயம் 044- 24332424
இரண்டாம் பதிப்பு டிசம்பர் 2020
விலை ரூ. 140/-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s