ஆசிரியர் குறிப்பு:

திருநெல்வேலியில் பிறந்தவர். தனியார் நிறுவனமொன்றில் பொறியாளர். 2018ல் இருந்து இலக்கிய இதழ்களில் சிறுகதைகள் எழுதி வருகிறார். இது இவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு.

பத்து சிறுகதைகள் கொண்ட தொகுப்பு. ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதைகள் இவை. சவப்பெட்டி dystopian story மாயயதார்த்த யுத்தியில் எழுதப்பட்டது. மார்ட்டின் ஓ கைனின் வசைமண் நாவலை நினைவுபடுத்துவது. மொட்டை மாடி Perfect YA fiction story. பேசும் தேநீர் கோப்பைகள் அழகியல் படிமங்களைக் கொண்ட கதை. நிழற்காடு மீண்டும் மாய யதார்த்தம், தமிழில் இந்த யுத்தி பயன்படுத்திய நல்ல கதைகளில் இதுவும் ஒன்று. அநாமதேய சயனம் Sleeping apnea கதை. போதிசத்வா தொன்மக்கதை பாணியில் முயற்சி செய்யப்பட்ட கதை.

சிட்டுக்குருவி முதுமையில் தனிமையைப் போக்க வடிகாலாக ஆரம்பிப்பது பின் Obsession ஆக மாறுகிறது. மொட்டை மாடி, காகிதக்கப்பல், உதைக்கப்படாத கால்பந்து, அநாமதேய சயனத்தின் பகுதி சிறுவர் உலகம். குறிப்பாக காகிதக்கப்பலில் சிறுவனின் உலகம் கச்சிதமாக வந்திருக்கிறது. இவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக அது எப்போதும் இருக்கும்.

மொழிநடையை எடுத்துக் கொண்டால், அதுவும் கதைகளுக்கேற்றாற்போல் மாறுகிறது. குறிப்பாக சவப்பெட்டி, பேசும் தேநீர் கோப்பைகள், போதிசத்வா ஆகிய மூன்று கதைகளையும் எழுதியவர் ஒருவரே என்று கண்டுபிடித்தல் கடினம். வளரும் எழுத்தாளருக்கு மிகமுக்கியமான Positive trait அது. எல்லாக்கதைகளுமே தொய்வில்லாது வேகமாக நகரும் கதைகள், உத்தியில், நடையில் மாறியிருந்த போதிலும்.

அநாமதேய சயனம் கதையில், அவன் வேலைமுடிந்து வருகையில் மனைவி வீட்டில் எந்த அறையிலும் இல்லை, பின்னர் சேகர் வீட்டில் பழகியவனாய் கோப்பைகள் எடுத்து வருகிறான் என்பது ஒன்றுக்கொன்று தொடர்புடைய விசயமாக எழுதியிருந்தால் Ok. இல்லையென்றால் இல்லாத ஒன்றை வாசகர் யூகித்துக்கொள்ளும்படியாகிவிடும்.

அடுத்து இத்தொகுப்பின் சிலகதைகளில் endingஐ அழுத்தமாகப் பதிந்திருக்கலாம் என்று தோன்றியது. உதாரணமாக முகங்கள் கதையை எடுத்துக்கொண்டால், பையன் காணாமல் போய் பன்னிரண்டு வருடங்கள், பல வீடுகள் ஊர் மாற்றிவிட்டார். இப்போது அவனே இவர்களைப் பார்க்க அவரது அலுவலகத்தில் விசாரித்திருந்தால் நேரே வீட்டுக்கு வரப்போகிறான்! இதே கதையை
” அந்தப் பையன் அணிந்திருந்த முகமூடி குரங்கு முகமூடி போல் தெரிந்தது. பயத்தில் பார்வையை விலக்கிக் கொண்டு அவசரமாக அந்த இடத்தைக் கடந்தார்’ என்பது போன்ற முடிவு கதையின் அழுத்தத்தைக் கூட்டுவதுடன் லாஜிக்கல் Error இல்லாமல் இருந்திருக்கும். அதே போல் உதைக்கப்படாத கால்பந்து கதையும் ஒரு செயற்கை முடிவில் முடிகிறது.
இவர் கவனம் செலுத்த வேண்டியது இது போன்ற விசயங்களில் மட்டுமே. இவரே போதிசத்வா கதையை பிரமாதமாக முடித்திருக்கிறார். அப்பா ஏன் அப்படி செய்தார்? அம்மா பொய் சொன்னாளா? செய்நன்றி எவ்வளவு காலம் வற்றாது போன்ற பல கேள்விகளோடு விடைசொல்ல முடியாத கேள்வியும் இறுதியில் அமைந்த நல்ல கதை அது. நல்ல எதிர்காலம் இருக்கும் எழுத்தாளர்.

பிரதிக்கு :

சால்ட் பதிப்பகம்
விற்பனை உரிமை தமிழ்வெளி 90940 05600
முதல்பதிப்பு டிசம்பர் 2020
விலை ரூ 200.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s