எலிகளின் அவஸ்தை – சித்துராஜ் பொன்ராஜ்:

ஆணின் ஆதிக் கவலையே கதைக்கரு என்ற போதிலும் சித்துராஜின் கதை சொல்லிய யுத்தியும், மொழியும் சிறப்பு. வியட்நாம் போனாலும் சனீஸ்வரன் விடாவிட்டால் என்ன தான் செய்வது! அழகிய இளம்மனைவியைக் கொண்ட வயதான கணவனுக்கு லோகம் முழுதும் சத்ரு தான்.
பெருச்சாளி அப்படித்தான் ஏளனமாக பார்க்கும். நல்ல கதை.

எலிகளின் அவஸ்தை

மாங்கனிகள் – மணி எம்.கே.மணி:

மணியின் வழக்கமான பாணிக்கதை. திரையுலகத்தின் போலித்தனத்தை எழுத்தில் கொண்டு வருபவர். வனிதா சொல்லும் மாந்தோப்புக் கதை போல் எத்தனை பேர் எத்தனை கதைகள் சொல்லி இருக்கிறார்கள். காமம் எளிதில் கிடைக்கும் சமாச்சாரம் ஆகிப்போகையில் ஊர்வம்பைத்தான் அதிகம் பேசமுடியும். மணியால் இது போல் ஏராளமான கதைகளை எழுதமுடியும்.

மாங்கனிகள்

வாழ்விலே இரண்டு நாள் – குமாரநந்தன்;

குமாரநந்தனின் கதை ஆணின் அலைபாயும் மனதைச் சொல்லும் கதை. எவ்வளவு பேரழகியாக இருந்தாலும் மனைவி என்று வந்தபின் மாற்றுக்குறைவு தான் பெருவாரியான ஆண்களுக்கு. கடைசியில் பிள்ளையார் பிடிக்க குரங்காய் முடிந்த கதை

வாழ்வினிலே இரண்டு நாள்

மனம் – காலத்துகள்:

.முதுமையும் அல்சைமரும். காலத்துகளின் கதை வழக்கமான பார்வையாளர் பார்வையில் இருந்து விலகி நோயாளியின் கோணத்திலேயே சொல்லப்படுகிறது. உடல் முதுமையில் எவ்வளவு பாரமாகிவிடுகிறது! அதே உடல் நைந்நு நொந்தாலும் ஆணுடல் என்று மருமகள் காணச்கூசுவதாகி விடுகிறது. மகனின் இரண்டு மூன்று வார்த்தை கேள்விகள் Statementல் அவனைப் புரிந்து கொள்ள முடிகிறது. தளர்ச்சியை Step by step ஆக காட்சி விவரணைப்படுத்துகிறது. Beautifully written Story.

மணம்

ஜனனம் – சூ.ம.ஜெயசீலன்:

இது போன்ற கதைகளை ஆண்கள் எழுதும் போது minimum Research அவசியமாகிறது. பனிக்குடம் உடைந்தால் என்ன ஆகும்? கூகுளைப் பார்ப்பதை விட வயதான பெண்களிடம் கேட்கலாம். Normal delivery எப்படி நடக்கிறது? அதில் குழந்தையின் பங்கு எவ்வளவு இருக்கும்? தலையை அது எப்படி முதலில் வருவது போல் செய்து கொள்கிறது? சுகப்பிரசவத்தில் பிறந்த குழந்தை ஐந்து நாட்களில் இறக்கும் என்று சொல்ல மருத்துவர் என்ன சோதிடரா? பெருவாரியான பெண்களுக்கு இயல்பாகத் தெரியும் விசயங்களை நாம் கதைக்காக
மெனக்கெட்டு கற்றுக் கொள்ள வேண்டும்.

ஜனனம்

ஆண்ட்ராய்ட் வெர்ஷன் – லட்சுமிஹர்:

கடைசிப்பத்தியில் தான் கதை புரியும். எனக்கெல்லாம் காதுக்குப் பக்கத்தில் வந்து சுசிலா ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்று திருத்தமாகப் பாடினார். வேறு தொந்தரவு ஏதுமில்லை.

ஆண்ட்ராய்ட் வெர்ஷன்

யாவரும் இம்மாத இதழ் திருப்திகரமாக இருக்கிறது. கவிதைகள், கட்டுரைகளுடன் ஜீவகரிகாலன் Fictionல் இருந்து Nonfictionக்குத் தாவியிருக்கிறார் இந்த இதழில். அவருக்கு மனதுக்கு நெருக்கமான ஓவியக் கண்காட்சி குறித்த கட்டுரை.

கலை எனும் பெண்டுலம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s