ஆஸ்திரேலிய எழுத்தாளர். Kill Your Darlings என்ற கலை இலக்கிய இதழின் இணைநிறுவனர். Queenslandல் Creative Writingஐக் கற்பிப்பவர். Bad Behaviour என்ற பெயரில் நினைவுக்குறிப்பு நூல் ஒன்றை எழுதியுள்ளார். இது இவரது சமீபத்திய நாவல் June, 1, 2021ல் வெளியாகியது.

Spy நாவல்கள் என்றால் உடன் மனதில் வரும் பெயர்கள் John Le Carre மற்றும் Ian Fleming. Flemingன் spyஐ உலகத்தில் எல்லோருக்கும் தெரியும். Ken Folletன் Eye of the needle, Jack Higginsன் The Eagle has landed, Fredrick Forsythன் The Day of the Jackal, Ludlumன் Bourne Identity, Christopher Reichன் Rules of Deception முதலியவை இந்த Genreல் தவற விடக்கூடாதவை. கமலஹாசனின் வெற்றிவிழா ஆரம்பக் காட்சிகள் Bourne Identityல் இருந்து சுட்டவை.

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் கை ஓங்கிவருகிறது. பிரிட்டனில் வெவ்வேறு உளவுத்துறைகள் வெவ்வேறு தகவல்களைத்
தருகின்றன. சர்ச்சில் ரூஸ்வெல்ட்டுடன் இணைந்து ஜெர்மனிக்கு எதிராக போர் செய்ய ஆயத்தம் செய்கிறார். பிரிட்டனில் நாட்டுப்பற்று மிகுந்தவர் சிலர் ஜெர்மனி வெல்லமுடியாதது, சர்ச்சில் நாட்டை அழிவுப் பாதைக்குக் கொண்டு செல்கிறார் என்று உறுதியாக நம்பி அரசாங்கத்திற்கெதிரான குழுவாக மாறுகிறார்கள். சாதாரணப் பெண் ஒருத்தியை உளவாளியாக்கி M15 அந்தக்கூட்டத்திற்குள் நுழையவிடுவதும், அதன் பின்னர் நடப்பதுமே இந்த நாவல்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த எழுத்தாளர், பிரிட்டனின் ரகசிய உளவாளி ஒருவரின் சுயசரிதையைப் படித்து விட்டு அதன் உந்துதலால் எழுதிய நூல் இது. லண்டனுக்கு சென்று தங்கி பல இடங்களைப் பார்த்து, M15
வெளியிட்ட ஆவணங்களை National Archivesல் வாசித்து எழுதிய நூல். இதில் வரும் கதாபாத்திங்களும் உண்மை நபர்களின் சாயல் கொண்டவை. நிறையவே சரித்திரத் தகவல்கள் கொண்ட, புனைவை நம்பத்தகும் அளவிற்கு எழுதிய Well crafted spy novel இது.
https://www.amazon.in/dp/B08HM1CWNV/ref=cm_sw_r_wa_apa_glt_RCRGQB2ZMAMYR6QD3AE2

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s