மும்பையில் காஷ்மீர் முஸ்லீம் குடும்பத்தில் பிறந்தவர். இங்கிலாந்தில் வாழ்ந்த இவர், இஸ்லாமிய பாசிஸ்டுகளின் உயிர் அச்சுறுத்தலுக்குப்பின் அமெரிக்காவில் கடந்த இருபது வருடங்களாக வசித்து வருகிறார். இவரது நூல் Satanic Versesக்காக இவர் மேல் Fatwa (death sentence) தொடுக்கப்பட்டது. இவரது Mid night Children புக்கர் பரிசை வென்றது. பதினான்கு நாவல்களும்,ஐந்து அல்புனைவுகளும் எழுதியுள்ளார். இவரது எழுத்து எல்லாமே Experimental writings. இது இவரது கட்டுரைகளின் தொகுப்பு, 2021 May 27ல் வெளியாகியது.

நான்கு பாகங்களாகப் பிரிக்கப்பட்ட நூல். முதல் பாகத்தில் முதல் கட்டுரை, பேச்சு ஆரம்பிக்குமுன் கதைகேட்டு வளர்ந்த இந்திய சமூகம், இராமாயணம், மகாபாரதம் இரண்டையும் பேசிப்பின் ஆயிரத்தொரு இரவுகளுக்குத் தாவி, உலகின் புகழ்பெற்ற பலநூல்களைத் தொட்டு முடிகிறது. மீதி இருக்கும் மூன்று கட்டுரைகளுமே இவரது பரந்த வாசிப்பிற்கு சான்று. ஆச்சரியத்தை ஏற்படுத்தும் அளவு படித்திருக்கிறார். தெற்கு ஆசியாவில் எழுத்தாளராக இருப்பதற்கு இவர் சொல்வது” ஒன்று செல்வந்தராக இருக்க வேண்டும், அல்லது பெற்றோர் பராமரிப்பில் வசிக்க வேண்டும், அல்லது நல்லவேலையில் இருந்து கொண்டு வார இறுதியில் எழுத வேண்டும்”. ருஷ்டி சிறுவயதில் இருந்தே Big reader. இவருடைய முதல் புத்தகம் Grimus வரவேற்பைப் பெறவில்லை. அதைத் தான் சரியாக எழுதவில்லை என்று உணர்ந்து கொள்கிறார். அதற்கடுத்து ஐந்துவருடங்கள் எடுத்துக் கொண்டு எழுதிய புத்தகம் ‘Midnight Children’. இது புக்கர் பரிசை வென்றதோடு உலகஇலக்கியத்தில் இவருக்கு ஒரு இடத்தையும் வழங்குகிறது.

இரண்டாவது பாகம், Philip Rothன் நூல்களை, குறிப்பாக Portnoy’s Complaint மற்றும் The Plot Against America வைப்பற்றிப் பேசுகிறது. அடுத்த கட்டுரை
Kurt Vonnegutன் Masterpiece, Slaughter House Five குறித்துப்பேசுகிறது. மூன்றாவது கட்டுரை Samuel Beckettன் நாவல்கள் குறித்தான அலசல். அடுத்த கட்டுரை Don Quixote எழுதிய Cervantes மற்றும் Shakespeare குறித்து. அடுத்து Gabriel Garcia Marquez ன் One hundred years of Solitude குறித்து. சுயசரிதைகள் என்ற தலைப்பில் இருக்கும் கட்டுரை புனைவில் சுயசரிதைக் குறிப்புகள் வருவது குறித்தும், அல்புனைவு சுயசரிதைகள் குறித்தும் பேசுகிறது. அடுத்த கட்டுரை Adaptations,;தழுவல்கள். நூலைத் தழுவி எடுக்கப்படும் சினிமாக்கள். சினிமாக்கள் ஒருபோதும் வாசகன் விரித்துக்கொள்ளும் கற்பனை உலகத்தை சிருஷ்டிக்க முடிவதில்லை என்பது என் கருத்து. உதாரணத்திற்கு யமுனா கதாபாத்திரத்தின் அத்தனை Dimensionம் கொண்டுவர குறைந்தபட்சம் மூன்று நடிகைகளாவது வேண்டியிருக்கும். இரண்டாவது பாகத்தில் பதிமூன்று கட்டுரைகள். முதல் இருபாகங்களில் இவர் சிலாக்கியமாகச் சொல்லியதில் படிக்காத நூல்கள் ஏறத்தாழ நாற்பது குறித்து வைத்திருக்கிறேன். ஆயுள் நீள வேண்டும்.

மூன்றாவது பாகம் உண்மை, துணிச்சல்,
The Pen and the Sword (ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம்), தணிக்கை போன்ற பத்து கட்டுரைகள். பின்லேடன் மறைந்திருந்தது பாகிஸ்தானில். இன்னும் ஏன் அமெரிக்கா அதைக் கொஞ்சிக் கொண்டிருக்கிறது?.அதே கேள்வியையே இவரும் கேட்கிறார். ஒவ்வொரு அமெரிக்கரும் இதைக் கேட்காதவரை எந்தபலனும் இல்லை. பாகிஸ்தானின் அணுஆயுத சோதனையே அமெரிக்காவில் இருந்து திருடிய யுரேனியத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கடைசியாக அர்த்தநாரீஸ்வரரையும் மூன்றாம் பாலினம் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரை மூன்றாம் பாலினம் குறித்த கூடுதல் புரிதலின் தேவையைக் கூறுகிறது.

நான்காம் பாகம் பதினோரு கட்டுரைகள் கொண்டது. அக்பரும் ஹம்ஷநாமாவும், Amrita Sher, Bhupen Khakhar, Francesco Clemente, Taryn Simon, Kara Walker, Sebastiao Salgado முதலியோர் குறித்த கட்டுரைகள்.
எழுபத்து இரண்டு வயதில் கொரானா தாக்கிய அனுபவம்.

ருஷ்டியின் நாவல்கள், படிக்க எளிதானவை அல்ல. ஆனால் இந்த கட்டுரைகளின் தொகுப்பு எளிதாக வாசிக்கக்கூடியது. இலக்கிய வாசகர்கள் படித்த, படிக்காமல் விட்ட பல புத்தகங்களுக்கான இவரது பார்வையை அறிந்து கொள்ள உதவும் சிறந்த நூல். எழுத்தாளர்களுக்கு எழுதுவதற்கான ஏராளமான உத்திகளை போகிற போக்கில் சொல்லிக்கொண்டே போகிறார். புத்தகத்தை முடித்த பின்னும் எத்தனை நூல்கள் படித்திருக்கிறார் இவர் என்ற சிந்தனையே தொடர்கிறது.
A must read.
https://www.amazon.in/dp/B093FZ1S9R/ref=cm_sw_r_wa_apa_glt_213A3FWBYSKDYXCCNKTQ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s