அமெரிக்க நாவலாசிரியர். இதற்கு முன் ஆறு நாவல்கள் எழுதியுள்ளார். இவரது The Seven Husbands of Evelyn Hugo மிகுந்த வரவேற்பை உலகமெங்கும் ஏற்படுத்தியது. அதன் பிறகு வந்த Daisy Jones & The Six நாவலும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நாவல் 27 May 2021ல் வெளியாகியது. இவருக்கு இது Hat trick வெற்றியா என்பது சிலமாதங்களில் தெரியும்.

Taylor ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதைகளுடன் வருகிறார். Seven Husbands…..
ஒரு கற்பனை ஹாலிவுட் நடிகையின் பல திருமணங்கள் குறித்த கதை. Daisy Jones….. எழுபதுகளின் கற்பனை Rock &Roll டீம் பற்றிய கதை. இது ஒரு குடும்பத்தின் கதை.1956க்கும் நடப்புக்குமாக மாறிமாறி போய் வருகிறது. இந்த மூன்றுமே Hostorical fiction வகையில் facts இன்றி முழுதும் Fictionஆக எழுதுவது.

Riva family பற்றிய கதை இது. Mick Riva மிகப் பிரபலமான பாடகர். எல்லா பிரபலங்களையும் பெண்கள் மொய்ப்பது போல் Mickஐயும் மொய்க்கிறார்கள். மற்றவர்களுக்கும் Mickக்கும் உள்ள வித்தியாசம் Mick எப்போதும் No சொல்வதில்லை. June Riva , Mick பிரபலமாகாத போது காதலித்து மணந்த பெண்மணி. அவனது ஒரே கனவு அவள் அப்பா அம்மா நடத்தி வந்த Restaurant தொழில் இருந்து தப்பித்து இரண்டு Sink கொண்ட பாத்ரூம் உடைய வீட்டில் வசிப்பது. அவளது சின்னக்கனவும் நிறைவேறப் போவதில்லை. இது இவர்கள் இருவரின் கதை மட்டுமல்ல. இவர்களுடைய நான்கு குழந்தைகளின் கதையும் கூட.

முதல் பாகம் முழுக்க குடும்பத்தினர் குறித்து, அவர்களது பிரச்சனைகள் குறித்து வாசகர்களுக்கு ஒரு Clear insight கொடுத்து விடுகிறது. இரண்டாவது பாகம் முழுக்க Riva familyன் மூத்தபெண் Nina கொடுக்கும் Partyயில் நடக்கும் விசயங்கள். பிரபல மாடலான, பத்து Grand slam titles வென்ற டென்னிஸ் வீரரின் மனைவி Nina கொடுக்கும் பார்ட்டி ஹாலிவுட் பிரபலங்கள், டி வி பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் என்று பலதுறை நட்சத்திரங்கள் கலந்து கொள்ளும் வருடாந்திரப் பார்ட்டி. இந்த முறை பார்ட்டி வழக்கம் போல் இருக்கப் போவதில்லை.

மிகச்சரியாக முதல் நாள் காலை ஏழுமணிக்கு ஆரம்பிக்கும் கதை, விடியவிடிய பார்ட்டி நடக்கும் இரவோடு மறுநாள் காலை ஏழு மணிக்கு முடிகிறது. குடும்ப வரலாறு தெரிந்ததால் இந்த பார்ட்டியில் என்ன நிகழும் என்ற பரபரப்பில் இரண்டாம்பாகம் ஓட்டமாக ஓடிவிடுகிறது.
Taylor Jenkins Reid உலகமெங்கும் உள்ள வாசகர்களுக்கு பரிட்சயமான பிரபல எழுத்தாளர். அவருடைய Acknowledgementன் முதல்வரி ” நான் இரண்டு வருடங்களுக்கு முன்னால் இந்த நாவலை ஆரம்பித்தபோது இருந்ததில் இருந்து வித்தியாசமான எழுத்தாளர் இப்போது. ஏனெனில், எனக்கு பரிசாகக் கிடைத்த என்னுடைய மிகத்திறமைசாலியான எடிட்டர் ஜெனிபர் எனக்களித்த அகநோக்கும், வழிகாட்டுதலும்”. இவரது 2017ல் வெளியான Seven Husbands…….. நாவல் ஆங்கிலப்பிரதி மட்டும் மில்லியன் காப்பிகளுக்கு மேல் விற்றிருக்கிறது, பதினைந்து மொழிகளில் விற்பனையான மொழிபெயர்ப்பு நூல்களைக் கணக்கில் எடுக்காமல்.
https://www.amazon.in/dp/B08HWGBKQJ/ref=cm_sw_r_wa_apa_glt_T4QJ7NFFVQGHXD6P6ZH4

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s