டேனியல், தூதரக அதிகாரியின் மகன். சிறுவயதில் Middle East மற்றும் ஆப்பிரிக்காவில் வளர்ந்தவர். அடிப்படையில் வழக்கறிஞர். பின்னர் போர் சூழ்ந்த பிரதேசங்களில் மத்தியஸ்தராக அரசாங்கங்களுக்கும், தனிநபர்களுக்கும் இருந்திருக்கிறார். ஏற்கனவே இரண்டு நூல்களை எழுதியிருக்கும் இவரது இந்த மூன்றாவது நூல், சிரியாவில் காணாமல் போன நபரைத் தேடி இருபது நாட்கள் அலைந்த உண்மைக்கதை. 2021 May 18ல் வெளியாகியது.
சிரியா ஒரு புராதன தேசம். மெசபடோமியா நாகரீகத்திற்கும் முந்தையது. உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் தோன்றுமுன் தோன்றிய நாகரீகம். ஆங்கிலேயர்களும், பிரஞ்சுக்காரர்களும் கால்வைத்த பாவம் இன்றும் அந்த நாட்டில் தொடர்கிறது. மூன்று குழுக்களாகப் பிரிந்த சிரியாவில், ஒவ்வொரு குழுவையும் வெவ்வேறு நாடுகள் ஆதரிப்பதால் கடந்த பத்து வருடங்களாக அங்கே உள்நாட்டுப்போர் தொடர்ந்து நடக்கிறது. சுற்றுலாப் பயணிகளுக்கே அங்கே பாதுகாப்பில்லை, இந்தப் பின்னணியில் அமெரிக்காவைச் சேர்ந்த, அதுவும் யூதவம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் அங்கே காணாமல் போன ஒருவரைத் தேடுவது என்பது தற்கொலை முயற்சி.
Captagon என்ற போதை மருந்து தயாரிப்பில் சிரியா முன்னணியில் இருக்கிறது. உள்நாட்டுப் போர் வீரர்களிடம் அதிகமாக உபயோகப்படுவது மட்டுமின்றி அதில் வரும் பணம் ஆயுதங்கள் வாங்க பயன்படுகிறது. இம்மாத்திரையை சாப்பிடுபவர்களுக்கு பசி, தூக்கம் இரண்டுமே தெரியாது. மாணவர்கள் பரிட்சைக்கு முன் இதை உபயோகிப்பது சமீபகாலங்களில் அதிகரித்து வருகிறது.
இது போன்ற வேலைகள், தெரிந்தவர், தெரிந்தவருக்குத் தெரிந்தவர் செய்யும் உதவிகள் மூலமே நடக்கும். அரசாங்கங்கள் இதில் நுழையும் போது கடத்தப்பட்டவரின் உயிர் உடனே பறிக்கப்படும். இரகசிய வழியில் டேனியல் முயற்சிக்கையில் பயங்கரமான மனிதர்களை, போதைப்பொருட்கள், வசதியில்லாத சிரியன் பெண்களைக் கடத்துபவர்கள், கொலைகாரர்களைக் கடக்க வேண்டியிருக்கிறது. இவரது உயிருக்கும் ஆபத்து வருகிறது. இந்த நூலை எழுத பிழைத்து வந்திருக்கிறார்.
உண்மை பெரும்பாலான நேரங்களில் புனைவைக் காட்டிலும் நம்பகத்தன்மை குறைந்தது. உண்மைக்கதையை திரில்லர் நாவல்களுக்கு இணையாக எழுதியது இவருடைய திறமை. கடத்தலுடன் பாதிக்கப்பட்ட Gangsterன் Exwife மற்றும் பாதிக்கப்பட்ட சகோதரிகள் கதையும் இதயபலவீனமானவர்கள் படிப்பதற்கு உகந்ததல்ல. சிரியா மற்ற எல்லா நாடுகளையும் போலவே அந்நியநாடுகளின் ஆயுத உதவியுடன் பத்துவருட உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. சிரியாவின் பழைய சரித்திரத்தைப் பார்க்கையில் இந்த அமைதி தொடரும் என்று தோன்றவில்லை.
https://www.amazon.in/dp/B08GFX6P5G/ref=cm_sw_r_wa_apa_glt_M2DTEH9SKQV8PGJN11ES