சிமாமந்த நைஜீரிய பல்கலை வளாகத்தில் வளர்ந்தவர். இவரது நூல்கள் முப்பது மொழிகளுக்கு மேல் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன. இவர் நடத்தும் நைஜீரியாவின் வருடாந்திர எழுத்துப் பட்டறைக்கு உலகமெங்கிருந்தும் புதிதாக எழுத வரும் எழுத்தாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இவரது சமீபத்திய We Should All Be Feminists உலகமெங்கும் பேசப்பட்ட நூல். இவருடைய Purple Hibiscus மற்றும் Half of the Yellow Sun, Americanah முதலிய நூல்கள் இவருக்குப் பெரும்புகழை ஈட்டித் தந்தன. இந்த நூல் ஒரு மகளின் இழப்பையும் துயரத்தையும் வடிகாலாக்கும் எழுத்து. May 2021, 11ல் வெளியாகியது.

முட்டாள் என்று எல்லோருக்கும் தெளிவாகத் தெரியும் ஒருவரை அவரது மகள் ஹீரோவைப் பார்க்கும் வியப்புடன் பார்ப்பதைப் பார்த்திருக்கிறேன். உலகத்தில் எங்கிருந்தாலும் பெண்களின் முதல்காதல் அப்பாவிடம் தான். சிலர் வெளிப்படுத்துகிறார்கள், சிலர் கணவன்/காதலன் வருத்தப்படக்கூடாது என்று மறைத்துக் கொள்கிறார்கள். அவ்வளவு தான். Zoom Callல் உலகத்தின் வெவ்வேறு நாடுகளில் இருக்கும் பிள்ளைகளும் பெற்றோரும் அடிக்கடிப் பேசிக்கொள்கிறார்கள். கடைசிக்காலில் அப்பா மருத்துவமனையில் பிணமாக, மற்ற எல்லோரும் அழுது கொண்டு.

காமெரா முன் நெற்றிமட்டும் தெரிவது போல் வருவது, சுடுநீர் குடித்தால் கொரானாவிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம் என்று நம்புவது என்பது போல் அப்பாவின் நினைவுகள் பெண் மனதில் அலைமோதுகின்றன. அப்பா பல்கலையில் துணைவேந்தராக இருந்தவர், அவரது வாழ்க்கைசரிதை நூலாக வந்திருக்கிறது. இருந்தாலும் மகளின் பார்வையில் அப்பா பாவம்! அவருக்கு ஒன்றும் தெரியாது!

இந்தியாவிற்கும் நைஜீரியாவிற்கும் பல ஒற்றுமைகள் தொடர்ந்து தெரிய வருகின்றன. இவரது அப்பா அம்மாவின் Arranged marriage, கணவன் இறந்தால் மனைவி தலையை மழித்துக் கொள்வது, Land grabbing, அண்டை நாடுகள் Pandemicல் விமானநிலையங்களைத் திறந்தபிறகும் நைஜீரியா முடிவு எடுக்காமல் இருப்பது என்பது போல.

இது முழுக்கமுழுக்க ஒரு மகளின் துக்கத்தை எழுத்தில் எழுதி குறையவைக்கும் முயற்சி. சிமாமந்த உலகப்புகழ் பெற்ற, நல்ல எழுத்தாளர்.
கடைசியில் இப்படி முடிக்கிறார். ” நான் அப்பாவைக் குறித்து இறந்தகாலத்தில் எழுதுகிறேன் (Past tense என்பதை விட இறந்தகாலம் என்று தமிழில் சொல்வது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது!) , என்னால் நம்பமுடியவில்லை என் அப்பாவைக் குறித்து இறந்தகாலத்தில் எழுதுவதை”. புகழ்பெற்ற மகள்கள் அப்பாவின் இறப்பின் வலியை உலகமெங்கும் சொல்ல முடிகிறது. இந்திரா, பெனாசிர், சிமாமந்த…………….There is always an endless queue of girls, Daddy’s Girls. இதுவரை படிக்காவிடில் Sylvia Plathன் Daddy Poem படித்துப் பாருங்கள்.
https://www.amazon.in/dp/B08W9DHZ57/ref=cm_sw_r_wa_apa_glt_9K9BC4Y6BPGSC3HM6EYF

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s