ரச்செல் கனடாவில் பிறந்தவர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வளர்ந்தவர். Creative writing பயிற்றுவிப்பவராகப் பணியாற்றியவர். மூன்று சுயசரிதை நூல்கள் எழுதி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானவர். இவருடைய Outline Triology
மிகவும் பேசப்பட்டது. பத்து நாவல்கள் எழுதியிருக்கும் இவரது இந்த நாவல் 2021 மே மாதத்தில் வெளியாகியது.

Mabel Dodge Luhan தன்னுடைய சுயசரிதையில் D H Lawrenceஐ மெக்சிகோவில் அவர் இடத்தில் இருக்கவைத்ததன் பிரதிபலனாக, D H Lawrence அவரை அழித்துவிடுவேன் என்று மிரட்டியதைத் தூண்டுதலாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. அதில் புகழ்பெற்ற எழுத்தாளர், இதில் ஓவியர்.

பெயரிடப்படாத அல்லது M என்ற முதல் எழுத்தைக் கொண்ட எழுத்தாளர் பாரிஸில் ஒரு ஓவியக் கண்காட்சியைப் பார்த்து, அந்த ஓவியரின் ஓவியங்களில் தனக்கு சுதந்திர உணர்ச்சி பொங்குவதாய் மயங்கி, அவரை தன்னுடைய பண்ணைக்கு விருந்தாளியாக அழைப்பதில் எல்லாமே ஆரம்பிக்கிறது.

கலைஞர்கள் Cynicஆக Egoist ஆக Eccentric ஆக இருப்பதை அவர்களது ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழிலும் கூட இது போல் நிறையப் பார்த்திருக்கிறோம். தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி, ஆனால் அவர்களே அருகில் நெருங்கி தொடர்ந்து தொந்தரவு கொடுக்கையில் இன்னொரு ஐந்துரூபாயும் அழுக்குச்சட்டைக்காரரும் கதையாகி விடுகிறது.

முதலில் இருந்தே தன்மையில் Jeffers என்பவரிடம் Monologue ஆகச் சொல்லப்படும் கதை இது. முழுநாவலிலும் உரையாடலே கிடையாது. கதைசொல்லிக்குப் பெயர் கிடையாது அவளது கோணத்திலேயே முழுதும் நகரும் கதை. அவளது Obsession, சரிவுகள், தோல்விகள், பயங்கள், Infatuation என்று எல்லாமே வெளிவருகின்றன. ரச்செல்லின் மொழிநடை வாசகரை விடாது பிடித்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. மனித மனம் விசித்திரமானது, எல்லாவற்றையும் இழந்து பின் இழந்ததைவிட அதிகம் பெற்று வாழும் வாழ்க்கையிலும் திருப்தி காணாது அலைக்கழியத்தான் அதற்குப் பிடித்திருக்கிறது.
https://www.amazon.in/dp/B08Q33BQW5/ref=cm_sw_r_wa_apa_glt_H40G1WD6V5BJW53SDGDQ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s