சித்ரா இந்தியாவின் பிரபல, அதிகவிற்பனையாகும் நூல்களை எழுதும் எழுத்தாளர்களில் ஒருவர். ராமாயணத்தை சீதையின் பார்வையில் சொல்லும் நாவல், மகாபாரதத்தை திரௌபதியின் குரலில் சொல்வது என்ற இவரது இரண்டு நாவல்கள் மிகப் பிரபலமானவை. தன் நூல்களுக்காக ஏராளமான ஆராய்ச்சி செய்யும் இவர் Houston பல்கலையில் Creative writingஐக் கற்பித்து வருகிறார். இந்த நாவல் 2021 ஜனவரியில் வெளியாகியது.

ஜிந்தன் ஒரு சிறுகிராமத்தில், அண்ணனுடன் சேர்ந்து Tomboy போல், அடுத்தவர் தோட்டத்தில் ஏறிக்குதித்து கொய்யாக்களை திருடி ஊர்வம்பை விலைக்கு வாங்கிக் கழிக்கிறாள். அவளது அப்பா லாகூர் அரண்மனையில் நாய்களைப் பயிற்றுவிப்பவர். அவளையும் அண்ணனையும் அவர் லாகூருக்குக் கூட்டி வருகையில் இருவரும் லாகூர் லீதிகளில் சுற்றுகின்றனர். ஜிந்தனின் அழகுக்கு நல்ல மாப்பிள்ளை கிடைக்கும் என்பது அவளது அப்பாவின் அனுமானம். ஆனால் யாருமே கனவிலும் எதிர்பாராதது அவள் மகாராஜா ரஞ்சித் சிங்கின் இளையராணி ஆகி ஒரு ராஜகுமாரனைப் பெறப்போகிறாள். மகாராஜாவின் மறைவுக்குப்பிறகு அத்தனை ராணிகளையும் கடந்து இவள் அரசாளப் போகிறாள். பிரிட்டிஷ்காரர்களைத் தன் இறுதிக்காலம் லரை எதிர்த்து அவர்களுக்கு நெருக்கடியை உண்டு பண்ணப்போகிறாள். கிராமத்தில் யாரோ ஆடுமேய்ப்பவனை மணந்து பிள்ளைகள் பெற்று, முதுமையில் மறைய லேண்டிய ஜிந்தன் சரித்திரத்தில் இடம் பெறப்போகிறாள்!

எல்லோரும் பக்கத்தில் செல்வதற்கே பயப்படும் நிலையில் இருக்கும் ஒருவரிடம், எதிர்த்துப் பேசுவதும், முழுகவனத்துடன் அவர்கள் சொல்வதைக் கதை கேட்பது போல் கேட்பது எல்லாமே உளவியல்ரீதியாக அவரைக் கவரக்கூடியது. ரஞ்சித்சிங் ஒரு சுவாரசியமான காரெக்டர். போர்க்களத்தில் எல்லோரும் அஞ்சும்படியான வீரமும், பத்துவயதில் இருந்து சதிகளில் தப்பிக்கும் புத்திக்கூர்மையும் இருந்தாலும் பெண்களிடம் அடிக்கடி காதலில் விழுவது. மோரன் என்ற முஸ்லீம்பெண்ணை எல்லோருடைய எதிர்ப்பையும் தாண்டி மணமுடித்துப் பின் சீக்கியர் வழக்கப்படி பொற்கோவிலில் நூறுகசையடி வாங்கிக் கொள்ள தானாகவே மனமுவந்து போய் நிற்கும் வசீகரக்காதலன்.

ஜிந்தன் வித்தியாசமான ராணி. சரித்திரத்தில் அவள் பெயர் இடம்பெறக் காரணம், அவள் சாகும்வரை ஆங்கிலேயருக்கு அவள் தீராத தொல்லை. எத்தனை எத்தனை பேர் தோல்வியை ஒத்துக்கொண்டு கப்பம் கட்டினர்! A real tigress. சிறுவயதில் அவளுக்குள் இருந்த சண்டைக்காரியை அவள் கடைசிவரை மறையாமல் பார்த்துக் கொண்டாள். ராணியின் வார்த்தைகள் இவை ” I may be injured; I may be even wounded to the heart; but I am not defeated yet”. பேரழகி என்று எல்லோராலும் போற்றப்பட்ட ராணி ஜிந்தன் பார்வையை இழந்து, தோற்றப்பொலிவை இழந்து தன்னுடைய நாற்பத்து ஆறாவது வயதில் அந்நியமண்ணில் இறக்கிறாள்.

ஆங்கிலேயர் குறித்து எத்தனையோ சரித்திர நூல்கள் இந்தியாவில் மட்டுமல்ல, வேறுநாடுகளிலும் வந்திருக்கின்றன. ஆங்கிலேயர் இன்னொரு ஆங்கிலேயருக்கு கனவான்கள், மற்றவர்களுக்கு அல்ல. நாட்டிற்காக அத்தனை கொலைகள் நடக்கின்றன. யாருக்கும் தோன்றாதது ஆங்கிலேயருக்குத் தான் தோன்றியிருக்கிறது! உங்கள் ராணி விபச்சாரி என்ற அவதூறு பரப்ப. அது மட்டுமல்ல அவர்கள் எவ்வளவு கீழ்தரமானவர்கள் என்பதை இந்த நூலில் மட்டுமல்ல, எந்த நாட்டின் Post colonial இலக்கியத்திலும் பார்த்துக் கொள்ளலாம்.

சித்ரா அவருக்கு கிடைத்த பஞ்சாப் சரித்திர நூல்கள் எல்லாவற்றையும் படித்திருக்கிறார். ராணி ஜிந்தனின் கடிதங்கள், ஜிந்தன் மகனுக்கு வளர்ப்பு பெற்றோராக இருந்த Lady Leninன் டயரிக் குறிப்புகள், எண்ணற்ற புகைப்படங்கள், ஓவியங்கள், கொரானா பேரிடர் காலத்திலும் Houston நூலகர் உட்பட எண்ணற்ற நண்பர்கள் அனுப்பிய புத்தகங்கள் போன்றவற்றை இந்த புத்தகத்தின் ஆராய்ச்சிக்காக எடுத்திருக்கிறார். சித்ரா எப்போதும் இந்திய புராண கதாபாத்திரங்களைப் பற்றி எழுதியதால் உலகஅளவில் வாசகர்கள் அவருக்கு குறைவு. ஆனால் அதற்காக ஏற்கனவே அவர் நிர்ணயித்த அவரது தரத்தில் இருந்து இறங்கி அவரால் புத்தகம் எழுத முடியாது. Chitra can’t afford to write substandard material like her tamilian counterparts as far as the historical fiction is concerned.

லாகூர் மண்ணுக்கு அடியில் இன்றும் கூட சீக்கியரத்தம் கலந்து இருக்கும். சுதந்திரத்திற்கு சற்றுமுன்னர் லாகூரில் 40% சீக்கியர்கள் மொத்த ஜனத்தொகையில். இன்று 0.60% மொத்த ஜனத்தொகையில். லாகூர் இந்தியாவுடன் சேரும் என்று எல்லோரும் நம்பிக்கொண்டிருந்த போது, அதைப் பாகிஸ்தானுடன் சேர்த்தது ஆங்கிலேயரின் குயுக்தி. சரித்திரத்தில் மறக்கப்பட்ட ராணியை மீண்டும் உயிருடன் நடமாட வைத்த சித்ராவிற்கு இந்தியர்கள் எல்லோரும் நன்றிசொல்ல வேண்டும்.
https://www.amazon.in/dp/B08MZ84CRK/ref=cm_sw_r_wa_apa_glt_H0ETKMRWTV2A4YH3YM77

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s