டெல்லியில் வசிக்கும் இந்திய எழுத்தாளர். Patna Roughcut,
Day Scholar, A Patna Manual of Style முதலியவை ஏற்கனவே வந்த இவருடைய முக்கியமான நால்கள். இது 2021 பிப்ரவரியில் வெளிவந்து பரபரப்பாகப் பேசப்படும் நாவல்.

தமிழில் பதிப்புத்துறையைப் பற்றிய நாவல் வந்திருக்கிறதா தெரியவில்லை. நீலபத்மனாபனின் தேரோடும் வீதி இந்தக் கணக்கில் வராது. இந்த நாவல் இந்திய ஆங்கிலப் பதிப்புலகத்தை
அப்படியே சித்தரிக்கிறது.

வருடத்திற்கு நான்கு அல்லது ஐந்து மொழிபெயர்ப்புகளை அநேகமாக எல்லாப் பெரிய பதிப்பகங்களும் பதிப்பிக்கின்றன. முதலாவது காரணம், குறைந்த விலைக்குக் கிடைப்பது. கையைக் கடிக்காது. இரண்டாவது ஏற்கனவே வேறுமொழியில் பிரசுரமானதால் முதல் நூலுக்கு எடுக்கவேண்டிய நிறைய வேலைகள் குறைந்துவிடும். கடைசியாக மார்க்கெட்டில் நாவல் போகாவிட்டாலும் பதிப்பகத்தாருக்கு பழி வராது.

பொது விழாக்கள், புத்தகத் திருவிழாக்கள், Book promotions போன்றவற்றில் தவறாமல் கலந்து கொள்வது, நம் பெயரை மறக்காதிருக்கவும், அடுத்த புத்தக விற்பனைக்கும் உதவும். நநதைக்கூடுக்குள் தலையை இழுத்துக் கொள்பவரின் திறமை குறித்து யாரும் கவலைப்படப் போவதில்லை. ஆங்கிலத்திலும் முழுநேர எழுத்தாளர் என்பது வறுமைக்கான பாதை. சேதன் பகத் பணக்காரராகி பின் எழுத்தாளரானதால் பணம் பணத்தைக் கொண்டுவருகிறது போலும்.

மூன்று பகுதிகளாக நாவல். பதிப்புத்துறையில் வெற்றிகரமாக செயல்படும், காஷ்மீர்முஸ்லீம் பெண்ணை மணந்து ஒரு மகனையுடைய ஜான் நாயர் நூலின் முதல்பகுதியைச் சொல்கிறார். அவருடைய அரசியல் கருத்துகளும் அதில் இடம்பெறுகின்றன. இரண்டாவது பகுதி ஒரு பெண் எழுத்தாளர். அவருடைய அம்மா பிராமின் அப்பா தாழ்த்தப்பட்ட ஜாதியாக சொல்லப்படுபவர். அப்பா இறந்ததும் அம்மா தன் சமூகத்திற்குத் திரும்பிவிடுகிறார். இவரை தலித் எழுத்தாளர் என்கிறார்கள். இவருக்கும் அதில் ஆட்சேபணை இல்லை. மூன்றாவது மோடி அரசாங்கம் இரண்டாம் முறை பதவியேற்றிருக்கும் நேரத்தில் RSSஐ விமர்சித்து நாவல் எழுதி அது பிரசுரத்துக்கு ஏற்கப்படாமல் Deadendல் நிற்கும் ஆண் எழுத்தாளர்.

ஆகவே ஆங்கிலப்பத்திரிகை உலகம், அரசியல், ஜாதி மூன்றின் மீதான விமர்சனம் அல்லது நிதர்சனமே இந்த நாவல். முதல் இருவரது கதையையும், கோணத்தையும் தன்மையில் சொல்லிவிட்டு மூன்றாமவரின் கதை Third personல் சொல்லப்படுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. முதல் அத்தியாயத்தில் Hindu Fundamentalist wife குண்டர்கள் சாலையில் வழிமறிக்கையில் கத்துகிறாள் ” நாங்கள் முஸ்லீம்கள் இல்லை”. இவ்வளவிற்கும் ஆதிகாரணமாகிய ஆங்கிலேயர்கள் Martinisம் ஒயினும் குடித்துக்கொண்டு அவர்கள் நாட்டில் நிம்மதியாக இருக்கிறார்கள்.

Aleph Book Company
First Print February 2021
Price Rs. 499/-

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s