டோக்கியோவில் வசிக்கும் ஜப்பானிய எழுத்தாளர். உலகில் அதிகமான வாசகர்களைக் கொண்ட வெகுசில எழுத்தாளர்களில் ஒருவர். இவரது படைப்புகள் ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன. சர்வதேச விருதான Hans Christian Anderson Literature Award இவருக்குப் புதுவரவு. இதற்குமுன் Salman Rushdie, Isabel Allende போன்றோர் இந்த விருதைப் பெற்றிருக்கின்றனர். வாசகர்கள் முரகாமியைப் படித்ததில்லையா என்று அதிர்ச்சியோடு கேட்கும் முகபாவமே இவர் பெற்றதில் ஆகச்சிறந்த விருது.

வாழ்க்கையில் நிறைய “ஏன்”களுக்கு விடை கடைசிவரை தெரிவதில்லை. சில ஏன்கள் நாள்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் நிம்மதியைக் குலைக்கின்றன. வட்டத்தின் எல்லைக்கோடுகள் வரையறுக்கப்படுகையில் மையப்புள்ளி ஒன்று. Centre of attraction. மனதிலும் வட்டம் வரைந்து கொள்வதால் ஒரே பிரச்சனை மையப்புள்ளியாகிறது. அதைத்தான் Cream கதை சொல்கிறது. ஆனால் வட்டத்தின்எல்லைக்கோடுகளை அழித்தல் அவ்வளவு சாதாரண காரியமில்லையே!

முரகாமி எழுபது வயதைக் கடந்து விட்டார். இந்தத் தொகுப்பில் இருக்கும் பல கதைகளில் ஞாபகமறதி வந்து கொண்டே இருக்கிறது. Tanka poem முழுக்கவே வரும் Stone Pillowவில் அவள் அந்த நேரத்தில் அவன் பெயரைச் சொல்லாதிருந்தால் கவிதைகள் இன்னும் நினைவில் இருந்திருக்க வாய்ப்பில்லை. Seventh Secretல் Adolf Hitler இறந்து சில வருடங்கள் கழித்து கட்டப்பட்ட கட்டிடத்தின் Sketches ஹிட்லரின் Signature drawing இருப்பதால் சந்தேகம் எழும்ப ஆரம்பிக்கும். அது போலவே சார்லி பார்க்கர் இறந்து பல வருடங்கள் கழித்து வந்த ஆல்பத்தில் அவர் வாசிப்பதாக வரும் கதை. MLV கண்ணோடு காண்பதெல்லாம் பாடக்கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

With the Beatles போன்ற கதைகள் முரகாமி எவ்வளவு சிறந்த சிறுகதை எழுத்தாளர் என்பதற்கு சான்று. ஒரு கதையில் Layer மேல் Layer எழுப்பிக்கொண்டே சென்று கடைசியில் குற்றஉணர்வா, Beatles தான் கதையா இல்லை யார் Suicide candidateஓ அவர் கடைசிவரை வாழ்வதில் உள்ள முரணா என்பது போல் பல கேள்விகளை எழுப்பும். தொடர்பில்லாதது போல் தோன்றும் வரிகள் முரகாமியின் கதைகளிலும் நாவலிலும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தும். இந்தக் கதையின் தமிழ்மொழிபெயர்ப்பு கனலியில் வந்தது. ஆர்வமுள்ளோர் தவறாது படிக்க வேண்டிய கதை. அடுத்த கதையான Confessions of a Shinagawa Monkeyயும் கனலியில் மொழிபெயர்ப்பாக வந்திருக்கிறது.

Carnaval கதையில் இவரது அசிங்கமான தோழி ஒவ்வொரு முகமும் மேலே ஒரு முகமூடியை வைத்துக்கொண்டு கீழே ஒரு முகத்தை வைத்திருக்கிறது என்ற வரியை மனதிலிறுத்தி அந்தக்கதையை மீண்டும் வாசித்துப் பாருங்கள். First Person Singular ஒரு Mistaken identityக்கும் Memory lossக்கும் இடையில் பயணம் செய்யும் கதை.

முரகாமியின் வழக்கமான JassMusic, musicன் மற்ற ஆல்பங்களான Beatles, Carnaval, Free sex, Base ball எல்லாமே ஜப்பானின் அமெரிக்கக் கலாச்சாரத் தழுவலின் கூறுகள். ஜப்பானின் அசல் கலாச்சாரத்தை காவப்பேட்டா போல் முரகாமி எழுதியிருந்தால் அவருக்கு இவ்வளவு உலகளாவிய வாசகர்கள் சந்தேகத்துக்குரியதே.

எட்டு கதைகள் கொண்ட தொகுப்பு இது. முரகாமியைப் படிக்க ஆரம்பிப்பவர்கள் இதிலிருந்து கூடத் தொடங்கலாம். தொலைத்தவற்றைத் தேடுவது, நினைவடுக்குகளில் இருந்து பழைய சம்பவத்தை உருவி எடுப்பது, சில ஏன்களை Deliberareஆகவே கதையில் விட்டுவிட்டு வாசகர்களை கோடிட்ட இடங்களை நிரப்பிக்கொள்ளச் செய்வது போன்ற விசயங்கள் இவரது பாணி என்றே சொல்லலாம்.

தலைப்புக்கு ஏற்ப எல்லாக் கதைகளுமே First person singularல் சொல்லப்படும் கதைகள். புனைவுக்கும் அல்புனைவுக்கும் இடையிலிருக்கும் மெல்லிய கோட்டைக் கடந்து அப்புறமும் இப்புறமும் செல்லும் கதைகள். அம்பையின் சமீபத்திய சிறுகதைத் தொகுப்பில் கதாபாத்திரங்கள் எல்லோருமே வயதானவர்கள். இந்தத் தொகுப்பிலும் கதைசொல்பவர் எல்லோருமே வயதானவர்கள். எழுத்தாளரின் வயதின் நிழல் கதாபாத்திரங்கள் மேல் படிவதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
https://www.amazon.in/dp/1787302601/ref=cm_sw_r_wa_apa_glt_fabc_TMH4F4SMW495VJ36G7YZ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s