ஃபாரா காஷ்மீரில் பிறந்து வளர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தைப் பட்டபடிப்பாகப் படித்தவர். Reuters Singaporgeல் Photo Journalist ஆகப் பணிபுரிந்தவர். தற்போது தகவல் தொடர்பு ஆலோசகராகப் பணிபுரிந்து வருகிறார். இவருடைய முதல் நூல் இது. நினைவுக்குறிப்பு.

காஷ்மீரில் போராளிகளுக்கும் ராணுவத்திற்கும் நடக்கும் தீராத போரில் சிறுமியிலிருந்து பெண்ணாக மாறும் ஒரு பெண்ணின் வாழ்க்கைப் பதிவாகியிருக்கிறது. நூலின் ஆரம்பத்தில் அக்காவுடன் ஈத் பண்டிகைக்கு முதல்நாள் தலை அலங்காரம் செய்ய சலூனுக்குப் போய் திரும்பி வருவதற்குள், தெருவில் கண்டதும் சுட உத்தரவு அமுலாக உயிரைக் கையில் பிடித்து வந்த பன்னிரண்டு வயதுச்சிறுமி அவளுடைய குழந்தைப் பருவத்தைத் தொடர்ந்து சொல்கிறாள்.

பத்துவருடங்களுக்கும் மேலாக இரவில் ஊரடங்கு, எந்த நேரமும் எல்லா திசையிலும் பாயும் தோட்டாக்கள், திடீர் மரணங்கள், காணாமல் போகும் சொந்தங்கள் ( இந்தக்கதை நடக்கும் 1989ல் தான் இந்தியாவின் உள்துறை அமைச்சரின் பெண் கடத்தப்பட்டார்) என்ற சூழலில் வளரும் பெண்ணின் கதை இது. பள்ளிவிட்டு வருகையில் குடும்பத்தினர் எல்லோரும் பத்திரமாக இருப்பார்களா என்ற பயத்துடனேயே வரும் சிறுமியின் உலகத்தைப் பாதுகாப்பான சூழலில் வளரும் நாம் புரிந்துகொள்ளல் சிரமம்.

காஷ்மீரில் வளரும் பெண் குழந்தைகள்
இந்தியாவின் மற்ற பகுதிகளை விட வீட்டினரால் அதிக கட்டுப்பாட்டுடன் வளர்க்கப்படுகிறார்கள். Dukhtaran-e- Millat போன்ற பெண்கள் அமைப்பு பெண்களுக்கு Islamic Code of conductஐக் கற்பிக்கிறார்கள்.Crack down என்ற பெயரில் ராணுவம் படுக்கையறை வரை வந்து சோதனை செய்கிறது.ஜீன்ஸ் அணிந்து தலையை மூடாது தெருவில் வந்த பள்ளிப்பெண் மீது திராவகம் வீசப்படுகிறது.

பாகிஸ்தானின் Pop song கேட்டு வீட்டில் இரகசியமாக இடுப்பை ஆட்டி நடனம் ஆடுவது, மேலுதட்டின் மேல் இருக்கும் பூனைமுடிகளை இரகசியமாக எடுப்பது, ஆண்களுடன் பேச முடியா சூழலிலும் Puppy loveம், கடிதப் பரிமாற்றமும், பாவம் செய்த குழந்தைகளை இரவில் தூங்குகையில் கடவுளின் தூதன் நெஞ்சில் காலை வைத்து மூச்சித்திணறடிப்பார் என்று பயப்படுவது, அக்கா செய்வதை எல்லாம் தானும் செய்ய நினைப்பது என்று குழந்தை உலகம் அழகாகப் பதிவாகி இருக்கிறது.

ஆண் குழந்தைகளுக்கு probability மற்றும் Random theoryகளின்படி தோட்டா காத்திருக்கிறது. சிறுமிகள் அழகாக இருப்பது அதிகஆபத்து. இவரே பலநாள் குளிக்காது தன் தோற்றத்தை மோசமாக்கிக் கொள்கிறார். வாய்பேசத் தெரியாத, காது கேட்காத சிறுவன் அடையாள அட்டை இல்லாத காரணத்தால் துப்பாக்கியின் பின்பாகத்தால் பலமாகத் தாக்கப்படுகிறான். அவனது அக்கா துப்பட்டாவை கழற்றி ராணுவத்தினரின் கால்களில் வைத்து அவனை மீட்க வேண்டியதாகிறது.

இந்த நூலில் அரசியல் கிடையாது. காஷ்மீர் வரலாற்றுத் தவறுக்கு யார் காரணம் என்ற ஆராய்ச்சி கிடையாது. ராணுவத்தின் அத்துமீறல்களைச் சொல்வது போலவே, போராளிகள் நன்கொடை கொடுக்கா விட்டால் கடத்திப் போவதையும் சொல்கிறார். இந்திய வெறுப்பும் இவரது எழுத்தில் இல்லை. இவர் சொல்வதெல்லாம் ஒரு குழந்தைப்பருவம் முழுவதும் பயங்களில் கரைந்து போனது குறித்தே. தனக்காக மட்டுமல்ல, இது போன்ற ஏராளமான குழந்தைகள் காஷ்மீரில் வாழநேரிட்ட வாழ்க்கையின் உரத்தகுரல் இது.

பெண்ணியப் பார்வையில் காஷ்மீரை உலகுக்குத் தெரியவைக்கும் முயற்சியே இந்த நூல். Menstrual crampsல் துடிக்கும் சிறுபெண், வலி மாத்திரையைக் கீழே எடுக்கச் சென்றால், மரப்படிகள் கிறீச்சிட்டு வெளியில் Patrol செய்யும் ராணுவத்திடமிருந்து தோட்டாக்கள் பறந்து வரும் என்ற பயத்தில் படுக்கையில் புரண்டதை எந்த ஆணும் எழுதவும் முடியாது, முழுமையாக உணரவும் முடியாது.

HarperCollins publisher
First Print April, 23,2021
Price Rs.499.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s