அமெரிக்காவின் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். Legal thriller என்றால் உலகில் எல்லோரும் முதலில் சொல்லும் பெயர் இவருடையது. அடிப்படையில் இவர் வழக்கறிஞர். வேலை இடைவெளியில் மூன்று ஆண்டுகளாய் இவர் எழுதிய Time to kill அநேகமாக எல்லாப் பதிப்பகத்தாலும் நிராகரிக்கப்பட்டது. The Firm, Pelican Brief, The Client முதலிய நாவல்களில் இருந்து இவரை இதுவரை வாசிக்காதவர்கள் ஆரம்பிக்கலாம். இந்த நாவல் 2021 April 27ல் வெளியாகியது.
எதில் உலகமெல்லாம் உங்களை சிறந்த எழுத்தாளர் என்று ஒப்புக்கொண்டதோ, அது குறித்த (Courtroom scene) ஒரு காட்சி கூட இல்லாமல் நாவல் எழுத உண்மையில் அடுத்து என்ன என்ற ஒரு தேடலும், எளிதில் சமாதானம் கொள்ளா மனமும் வேண்டும். ஏற்கனவே கால்பந்து குறித்த இரண்டு நாவல்களும், Baseball குறித்த ஒரு நாவலும் இவர் எழுதியுள்ளார். இதுவே Basketball குறித்த இவரது முதல் நாவல்.
இரண்டு விசயங்களில் இவர் Comfortzoneஐ விட்டு இந்த நாவலில் வெளிவந்திருக்கிறார். முதல் விசயம் கூடைப்பந்து. கூடைப்பந்தை லெறியுடன் நேசிக்கும் ஒருவரால் மட்டுமே இவ்வளவு நுணுக்கங்களைத் தர முடியும். அப்படியானால் இவர் ஏன் இத்தனை வருடங்கள் கூடைப்பந்து குறித்து எழுதவில்லை! இரண்டாவது, நாவல் முழுக்க South Sudanஐச் சேர்ந்த ஒரு கிராமத்தின் சிறுவனைப் பற்றிய கதை இது. அமெரிக்கர் ஒருவர் ஏராளமான தகவல்களை சேகரிக்காது தெற்குசூடான் கிராமத்தை, மக்களை, பழக்கவழக்கங்களை, வன்முறையை எழுதுவது கடினம்.
தெற்கு சூடானின் உள்நாட்டுக் கலவரம் கதையில் முக்கிய பங்கை வகிக்கிறது.
சூடானின் கிராமத்திலிருந்து அமெரிக்காவில் தங்கிப்படிக்கும் சிறுவனுக்கு முதலில் எல்லாமே ஆச்சரியமாகத் தான் இருந்திருக்கும். அதில் முதலாவது இவ்வளவு வளமான அமெரிக்காவிலும் நிறையப்பேர் சாப்பாட்டுக்கே வழியில்லாமல் இருப்பது.
படிக்கும் வாசகருக்கு ஏற்படும் ஆச்சரியம்,உகாண்டாவில் அகதிகள் தங்குமிடமின்றி, பட்டினியிலும், நோயிலும் இறந்து கொண்டிருக்கையில் அவர்களுக்கு நடுவே கிரமமாக பாதிரியார் Sunday Mass நடத்துவது.
கூடைப்பந்தைத் தொடர்ந்து நாவலில் எழுதுகையில் அது ஏதோ கமெண்டரியைப் படிப்பது போன்ற உணர்வு வராது கதையைக் கொண்டு செல்வது Grishamன் Craft. பதிமூன்று வயதுப்பெண்ணை புரட்சியாளர்கள் எல்லோர் முன்னும் உடையை அவிழ்த்துத் தூக்கி செல்லுதல், அகதிகளை அவர்கள் நிலத்தில் தங்கவிடாது விவசாயிகள் ஆயுதங்களைக் காட்டி மிரட்டுதல், சாப்பாட்டிற்கே சிரமப்படும் அகதிகளிடம் இருந்தும் அவர்களது சொற்ப உடைமைகளைத் திருடிக்கொண்டு போதல் என்று இன்னொரு கதை Parallell ஆகப் போய்க்கொண்டே இருக்கிறது. Grishamஆல் எந்த விசயத்தையும் சுவாரசியமாக எழுதமுடியும்.
நாற்பது நாவல்கள்- சிறுவருக்கான legal thriller series Theodore Boone மற்றும் நான்கு சிறுகதைத் தொகுப்புகளைச் சேர்க்காமல் , இவர் எழுதியிருக்கிறார். அநேகமாக ஒன்றிரண்டைத் தவிர திரில்லர்கள். அநேகமாக 1993ல் இருந்து இவரது புத்தகங்கள் வெளிவரும் வாரத்திலேயே படித்து வருகிறேன். கூடைப்பந்தின் நுணுக்கங்கள் உங்களுக்குத் தெரிந்திருந்தால் இவர் எவ்வளவு indepthஆகப் போயிருக்கிறார் என்று கண்டு கொள்ளமுடியும். இல்லாவிட்டாலும் ஒரு நல்ல கதையைப் படித்த திருப்தி உங்களுக்கு இருக்கும். முடிவு நீங்கள் எதிர்பாராதது. துளிகூட திரில்லர் அம்சம் இல்லாத Roller coaster ride novel. Another Master Storyteller.
https://www.amazon.in/dp/B08V115QC7/ref=cm_sw_r_wa_apa_glt_V93J5WSN4MRAQN2664G5