மீரா இப்போது எழுதிக்கொண்டிருக்கும் திறமைவாய்ந்த இந்திய எழுத்தாளர்களில் முக்கியமானவர்களில் ஒருவர். இவரது சிறுகதைகளும், நாவல்களும் மலையாளத்திலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. சாகித்ய அகாதமி விருது பெற்றவர். இவருடைய Hang Woman மற்றும் Poison of Love தவறாமல் படிக்க வேண்டியவை.

நகசல்பாரிகளை சித்திரவதை செய்து தகவல்கள் வரவழைக்கும் போலீஸ் கான்ஸ்டபிள் அதே முரட்டுத்தனத்துடன் வீட்டில் நடந்து கொள்வதும், அவர் உடல்நிலை சரியில்லாது படுத்தபடுக்கையாகையில் வீட்டிற்குள்ளேயே காதலனைச் சேர்த்துக் கொள்ளும் மனைவியும், அப்பாவால் பலமாகத் தாக்கப்பட்ட நக்சல்பாரி ஒருவனை ஆழமாகக் காதலிக்கும் மகளும்……. மகளின் வழியாகவே ஆரம்பத்தில் இருந்து கதை நகர்கிறது.

பல தீவிரவாதி இயக்கங்களில் சொல்லப்படும் விதி, உயிரோடு மாட்டிக்கொள்ளக்கூடாது. உயிரோடு மாட்டிக்கொள்பவர்கள் சித்திரவதை தாங்காது தங்கள் கூட்டாளிகளைக் காட்டிக் கொடுப்பார்கள். எவ்வளவு சித்திரவதையைத் தாங்குவது என்பது தான் ஆளுக்குஆள் வேறுபடும். காட்டிக் கொடுப்பவர்கள் எல்லாம் யூதாஸ் அல்ல. எந்த சூழ்நிலை, எந்த நோக்கம் என்பதே யூதாஸைத் தீர்மானிக்கிறது. இந்தக் கதையில் வரும் தாஸ் அவனே அவனது பெயரை யூதாஸ் என்று மாற்றிக் கொள்கிறான். குற்றுயிரும் குலையுயிருமாய் தன் தோழர்கள் இருவரை உச்சியில் இருந்து பள்ளத்தாக்கில் வீசியவன் அதற்குப் பரிகாரமாய் ஆற்றில் விழுந்து மூழ்கிய பிணங்களை வெளியே கொண்டு வருவதைத் தொழிலாகக் கொள்கிறான்.

போராட்டங்களில் ஈடுபடுவோர் மொத்த மக்களுக்காகவும், தாங்கள் உறுதியாக நம்பும் கொள்கைகளுக்காகவும் வீதியில் இறங்கிப் போராடுகிறார்கள். அவமானங்களை, அடக்குமுறையை சிலநேரங்களில் மரணத்தைக்கூட சந்திக்கநேரிடும் என்று தெரிந்தே அவர்கள் போராட்டத்தில் இறங்குகிறார்கள். பத்திரமான சூழலில் அமர்ந்து அவர்களை விமர்சிப்போர் எப்போதும் தெரிந்து கொள்ளாதது, போராட்டங்கள் இன்றி பத்திரமான சூழல் யாருக்கும் கிடைப்பதில்லை.

obsession தான் இந்த நாவலுக்கும் இவருடைய இன்னொரு நாவலான Poison of Loveக்கும் மையப்புள்ளி. ஆனால் Obsession பழிவாங்குவதற்கு மட்டுமல்ல தீராக்காதலுக்கும் காரணியாகிறது. வெளியில் இருந்து பார்ப்போருக்குப் பைத்தியக்காரத்தனமாகத் தோன்றுவது காதலிப்போருக்குத் தவமாகக்கூடத் தோன்றக்கூடும். சிறிய நாவலைப் Powerful ஆக்கியது மீராவின் திறமை. காதலையும் குற்ற உணர்வையும் நாவல் முழுதும் சண்டையிடச் செய்கிறார்.
ராமச்சந்திரநாயரின் நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி என்ற நூல் நக்சல்பாரிகள் மீதான அடக்குமுறையை மேசையின் மறுபக்கத்தில் இருந்து அணுகுகிறது. அதைப் படித்தவர் இந்த நாவலின் கதைக்களத்தில் இன்னும் நெருங்க முடியும். மூலமே ஆங்கிலத்தில் எழுதப்பட்டது போன்ற தோற்றத்தை அளிக்கும் செறிவான மொழிபெயர்ப்பு.
Another feather in her Cap.
https://www.amazon.in/dp/B06XXHGW8N/ref=cm_sw_r_wa_apa_glt_MXGAA577YPM8R4YF1ZEZ

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s