Cyprusல் பிறந்து வளர்ந்தவர். லண்டனில் வசிப்பவர். முதுகலை ஆங்கில இலக்கியத்தை காம்பிரிட்ஜ் பல்கலையில் பயின்றவர். இவரது முதல் நாவல் The Silent Patient ஐம்பது நாடுகளில் விற்பனையில் சாதனை புரிந்தது. கடந்த பத்து வருடங்களில் நான் வாசித்த சிறந்த பத்து திரில்லர் நாவல்களில் அது தவறாமல் இடம்பெறும். இது இவருடைய இரண்டாவது
நாவல், ஜூன் 2021ல் வெளியாகியது.

மரியானாவின் கணவன் இறந்து ஒருவருடம் ஆனபின்பும் அவளுக்கு சோகம் தீரவில்லை. அவனது ஷுவை நெஞ்சில் சேர்த்து வைத்துக்கொண்டு அழத்தோன்றுகிறது. அவளது உளவியலாளர் பணியில் முழுமையாக ஈடுபடமுடியாது இழப்பின் பாரம் அவளை அழுத்துகிறது. அவளது அக்காவின் பெண், இவளது வளர்ப்பு மகள் அவளது தோழி கொலை செய்யப்பட்டிருப்பாள் என்று சந்தேகப்படுகையில், வளர்ப்பு மகளை ஆற்றுப்படுத்தி வரலாம் என்று தான் படித்த அதே காம்பிரிட்ஜூக்கு செல்கிறாள். அவளால் உடனே திரும்ப முடியப்போவதில்லை. இந்த கேஸ் அவளது நேரத்தை முழுமையாக எடுத்துக் கொள்ளப் போகிறது.

Whodunnit நாவல்களில் ஏதேனும் ஒன்றைச் சேர்க்காவிட்டால், கும்பலில் தனித்துத் தெரியாது. இந்த நாவலில் Greek mythology கொலைகளில் ஒருவகையில் சம்பந்தப்படுகிறது. இன்னொரு வகையில் சொன்னால் கொலைகாரன் Greek mythology மூலம் உலகத்திற்கு ஏதோ தகவல் தெரிவிக்க விரும்புகிறான். Greek mythology படித்த எழுத்தாளர், Greek mythology படித்த கொலைகாரன். Maiden என்பதே Greek mythologyல் வருவது தான். Persephone, பூபோன்ற முகம்கொண்ட முதல் Maiden.

முன்னுணர்வும் ( Premonition) இந்த நாவலின் கடைசிபகுதியில் முக்கியபங்கு வகிக்கிறது.
அதே போல் பிரதான கதைசொல்லி உளவியலாளர் என்பதால் Group theraphy மற்றும் தனிப்பட்ட Theraphy அடிக்கடி வருகின்றது. இவர் படித்த காம்பிரிட்ஜ் காம்பஸில் தான் பெரும்பகுதி கதை நடக்கிறது. Alfred Tennisonன் கவிதைகள் மட்டுமன்றி, அவர் படித்த காம்பிரிட்ஜில் இருக்கும் அவரது புகைப்படமும் கூட டான்பிரவுன் கதைகளில் வருவது போல் ஒரு புதிய கோணத்தைத் தருகிறது.

முதல் நாவல் மாஸ்டர்பீஸாக, உலகத்தில் அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் அமைந்த பிறகு, எதிர்பார்ப்பு அதிகமாகிவிடுகிறது. இதை வேறு ஒருவர் எழுதியிருந்தால், சுவாரசியமான திரில்லர் என்று கூட சொல்லி இருக்கலாம். அதில் பயன்படுத்திய யுத்தி ஒன்றை திரும்பவும் இதில் உபயோகித்திருக்கிறார். ஆனால் Silent Patient was more than perfect. வாசகர் தான் ஏமாந்தேன் என்று அவர் வாயாலேயே சொல்ல வைப்பது. அடுத்த நாவலை இவர் அவகாசம் எடுத்துக் கொண்டு கவனமாக எழுத வேண்டும். இல்லை என்றால் One Book Wonder என்ற பெரிய பட்டியலில் இவரும் சேர்ந்துவிட நேரிடும்.
https://www.amazon.in/dp/1409181677/ref=cm_sw_r_wa_apa_glt_fabc_34N63DBBFAVX3Q3DACBT?_encoding=UTF8&psc=1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s