மரியா மாஸ்கோவில் பிறந்தவர். கவிஞர், கட்டுரையாளர், பத்திரிகையாளர். இணைய நாளிதழ் ஒன்றின் தலைமை ஆசிரியர். கவிதைத்தொகுப்புகளும், நாவல்களும் ஏற்கனவே வெளியிட்டுள்ள இவர் ரஷ்யா மற்றும் பன்னாட்டு விருதுகளைப் பெற்றுள்ளார். இந்த நாவல் புக்கர் 2021 நீண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
உங்கள் பெற்றோரின் பெற்றோரைத் தாண்டிய முன்தலைமுறை குறித்து உங்களுக்கு எவ்வளவு தெரியும். புகைப்படங்கள், வேறு ஆவணங்கள் அவர்கள் குறித்து? பெரும்பாலும் இருக்காது. மரியாவின் அவரது முன்னோர் குறித்த நினைவுப் பயணமே இந்த நாவல். பத்துவயது சிறுமியாய் இருந்ததில் இருந்து இந்த நாவலுக்கு முப்பது வருடங்கள் வேலைபார்த்திருக்கிறார். (1972ல் பிறந்தவர்). ரஷ்ய யூதர்களை முன்னோர்களாகக் கொண்ட இவர், வீட்டில் இருந்த ஆவணங்களைத் தாண்டியும் ஆதாரங்களுக்காக பல இடங்களுக்கு, USன் Holocaust Museum உட்பட சென்றிருக்கிறார்.
நூலிலிருந்து :
” நினைவுகள் கடந்தகாலத்தையும் நிகழ்காலத்தையும் நீதிகேட்டு மோத விடுகின்றன. நீதிவேட்கை, அரிப்பின் மேல் சொரியும் அதிவிருப்பம் போன்றது, உள்ளே புரையோடியவற்றை கிழித்து வெளிக்கொணர்வது, அநீதிக்கான தண்டனையைத் தேடுவது, விழைவது, குறிப்பாக இறந்தவர்களின் சார்பாக- நாமில்லை எனில் யார் அவர்களுக்காகக் குரல்கொடுப்பது?”
நாவலின் ஆரம்பத்தில் அப்பாவின் சகோதரி (அத்தை) எண்பது வயதுக்கு மேல் இறந்து போகிறார். எல்லாவற்றிலும் Perfection, beauty எதிர்பார்க்கும் அன்றைய நிகழ்வுகளை டயரியில் பதிவுசெய்யும் பெண்மணி. அவர் வீட்டில் இருந்த ஏராளமான புகைப்படங்கள், டயரிகள், கடிதங்கள்,பிறபொருட்கள் சொல்லும் செய்திகள் இந்த நாவலில். முன்னோர்கள் எல்லோரும் சாதாரணமானவர்கள், சரித்திரத்தில் இடம்பெறாதவர்கள் என்று ஆரம்பத்திலேயே சொல்கிறார். ஒரு குடும்ப வரலாற்றின் மூலம் ஒரு தேசத்தின் வரலாறும் உடன் நகர்கிறது. சாதாரண மனிதர்கள் சரித்திரமுக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளின் பார்வையாளராய் இருந்திருக்கிறார்கள்.
சர்ரா (Sarra) மற்ற எழுத்தாளர்களின் நாவலில் முக்கிய கதாபாத்திரமாக கண்டிப்பாக வந்திருப்பவர். இவரது கொள்ளுப்பாட்டி. Tsar காலத்தில் அனுமதிக்கப்படாத சுற்றறிக்கைகளை விநியோகம் செய்ததற்காகச் சிறைவைக்கப்பட்டுப் பின்னர் மருத்துவராகப் பணிசெய்த பெண்மணி. பல்கேரிய மருத்துவரை விரும்பியவர். சர்ரா குறித்த சிதறல் நினைவுகள் மழையில் நனைந்த ஓவியம் போல் மங்கி இருந்தாலும் அதிகம் கவனத்தை ஈர்க்கும் பெண்மணி.
வியன்னா மியூசியம், Josephinum மியூசியம், பெர்லின், அம்மாவை அடக்கம் செய்த Wurzberg Jewish Cemetery, Holocaust Memorial Museum, Washington போன்ற பல இடங்களுக்குச் செல்வதைக் குறிப்பிடுவதால் இந்த நாவலின் பகுதி Travelogue.
October 1914ல் எழுதிய கடிதத்தில் துருக்கியின் மீது போர்தொடுப்பு அறிவிக்கப்பட்டிருப்பதாக வருவது போல் சரித்திர சம்பவங்கள் நாவல் முழுதுமே வந்து Historical novel போல் தோற்றமளிக்கிறது.
அடிப்படையில் கவிஞர் என்பதால் கவிதைகள் இடைவருவது மட்டுமன்றி அங்கங்கே உரைநடையே கவிதையாக மாறுகிறது. இதை Verse Novel என்றும் சொல்லலாம்.
Plato, Tolstoy, Proust, Nobokov நூல்களிலிருந்து வரும் Quotes இதை அல்புனைவு படிக்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.
தொடர்ந்து கடிதங்கள் அப்படியே நாவலில் கொடுக்கப்பட்டிருப்பதால் இதை Epistolary novel என்றும் சொல்லலாம்.
Strong romance நாவல் முழுதும் பயணம்செய்து குடித்துமுடித்த பின்னும் நாவில் தங்கிய சுவை போல, Romance தங்குவதால் இது Romantic Novel.
நான்கு தலைமுறைக்கதையை எழுதுவது என்பது புனைவில் மட்டுமே எளிது. பலர் இவர் பிறக்கும் முன்னரே இறந்து விட்டனர். ரஷ்யாவின் Iron Curtain காலத்தில் இருந்து 1991ல் Soviet Regime உடைந்த பின்னும் நாவல் தொடர்கிறது. நிறைய நிறுவனங்களுக்கு சென்று அவர்கள் நூலகத்தில் தகவல் சேகரிப்பு செய்ததுடன், தகவல்கள் குறித்த விவாதமும் நடத்தியிருக்கிறார். இத்தனைக்கும் பின்னரே இந்த நூல் வடிவமைப்பு கொண்டிருக்கிறது. மரியா லைனியர் முறையைக் கையாளாமல் Bits and pieces ஆகத் தொடர்வதற்கு தேசத்தின் வரலாறும் சேர்த்து சொல்வது கூட காரணமாக இருந்திருக்கும். நூறுவருட குடும்ப சரித்திரத்தை எழுதுகையில், ஒவ்வொருவரைப் பற்றி எழுதும் போதும் ஆசிரியர் தான் அங்கிருப்பார். குஷ்வந்த் சிங் தன் சுயசரிதையில், அவரது சிறுவயதில் தந்தை தாயிடம் பலவந்தமாக உறவு கொண்டதைப் பார்த்தது, மனைவியின் திருமணம் தாண்டிய உறவுகள் தாண்டி மணஉறவு பிழைத்துக்கொண்டது போன்றவற்றை எல்லாம் ஒரு ஆசிரியராகவே எழுதி இருக்க வேண்டும். தந்தை தாயின் நிர்வாணத்தைப் பற்றிப் பேசுவது மகனல்ல, கதாசிரியர். ஏற்கனவே கூறியது போல கவிதை கலந்த சக்திவாய்ந்த உரைநடை. Maria is another Master story teller from Russia.
https://www.amazon.in/dp/B08TGZW56Y/ref=cm_sw_r_wa_apa_glc_Z0RKDRQ6XXTB6RHWHDAW