ராபென் டச்சு எழுத்தாளர். கவிஞர். நாடகாசிரியர். குழந்தைகளுக்கான கதைகள் எழுதி மிகவும் புகழ்பெற்றவர். 2014ல் பெரியவர்களுக்கான முதல் நாவல் டச்சு இலக்கிய உலகில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த இரண்டாவது நாவல், 2021 புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்றிருக்கிறது.
பதிமூன்று வயது Brian இணைப்புஊர்தியில், மணவிலக்கு பெற்ற, அதிகம் பட்டுக்கொள்ளாத தகப்பனுடன் வாழ்ந்து வருகிறான். அவனது அண்ணன் லூசியன் மனவளர்ச்சி இல்லாதவர்களுக்கான விடுதியில் தங்கியிருக்கிறான். அந்தப்பள்ளிக்கட்டிடம் புணரமைப்பு செய்யப்படுகையில் அப்பா, தம்பியுடன் வந்து சேர்கிறான். அவனுக்கு என்ன வேண்டும் என்று Brianக்கு புரிவதில்லை ஆனால் சகோதரபாசம் அதை எல்லாம் தாண்டியது அல்லவா!
குழந்தை இல்லாததை விடக் கொடுமை மனவளர்ச்சி இல்லாத குழந்தைகள். அவர்களின் தேவைகள் என்ன என்பது யாருக்கும் புரியாது. பத்துவயது வரை பெற்றோரால் கைக்குழந்தையைக் கவனிப்பது போல் கவனிக்க முடியும். பெரும்பாலான மனவளர்ச்சி அடையாத குழந்தைகள் சிறுவயதில் இறந்து விடுகின்றன. ஆனால் முப்பது, நாற்பது வயது வரை உடல் வளர்ந்து மூளை வளராத பிள்ளைகள் பெற்றோருக்கு ஜென்மாந்திரத் தண்டனை. பாவம் என்று சொல்லி நகரும் நம்மால் எவ்வளவு பாவம் என்று ஒருநாளும் புரிந்து கொள்ள முடியப்போவதில்லை.
இந்த நாவல் சகோதரபாசம் தான் கதைக்கரு என சொல்ல முடியாமல் பல்லடுக்குகளைக் கொண்டிருக்கிறது. ப்ரையனுக்கும் அவனது அப்பாவிற்கும் இருக்கும் உறவு, ப்ரையனின் Infatuatiom, ,ஹென்றி சகோதரர்களுடன் ஒரு Love and hate relationship, எமைலுடன் ஒரு நெருக்கம், அம்மா தன்னை எல்லோரும் நல்லவள் என்று சொல்ல மெனக்கெடுவது, எமைலின் Failed marriage என்று கொஞ்சம் கொஞ்சமாக நகரும் கதை முடிவில் எதிர்பாராத திருப்பத்தில் விரைகிறது.
ராபென் வெவ்வேறு உறவுகளுக்கிடையே ஏற்படும் சிக்கல்கள், மோதல்களை snapshots போல தொடர்ந்து எடுத்துக்கொண்டே போகிறார். ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை கதை அவரது இரும்புப்பிடியில் இருக்கிறது. அழகான, தெளிவான மொழிபெயர்ப்பு. தமிழில் மொழிபெயர்க்க Strong candidate இந்த நாவல். Any takers?
https://www.amazon.in/dp/B083L5JLC7/ref=cm_sw_r_wa_apa_glc_9DW5RERGA7038NSA44WY