டென்மார்க்கைச் சேர்ந்த ஓல்கா அடிப்படையில் கவிஞர். கவிதை நூல்களும், நாவல்களும் டேனிஸ் மொழியில் வெளியிட்ட இவர் டென்மார்க்கின் சிறந்த பெண்படைப்பாளிகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். இந்த நூல் 2021 புக்கர் நீண்ட பட்டியலில் இடம்பெற்ற நூல்.
ஓல்காவின் புதிய futuristic நாவல் இது.,
ஒருவகையில் எச்சரிக்கையுமாகும்.
ஓல்கா தொடர்ந்து அறிவியல் புனைவில் பரிசோதனைகள் செய்து வருபவர். வேலையால், செயல்திறனால் வரையறுக்கப்பட்ட வாழ்க்கையை பணியாளர்கள் கூட்டாக எதிர்க்கிறார்கள்.
ஓல்காவின் இந்த நாவல் கருத்துரு இலக்கியத்தின் (Concept Litetature) மாதிரியை பரிட்சார்த்தம் செய்துள்ளது.
வேறு வேறு குரல்களில் வாக்குமூலங்களின் மூலம் சொல்லும் கதையே இந்த நாவல்.
பூமியை விட்டுப் பல்லாயிரக்கணக்கான மைல்கள் கடந்த விண்கலத்தின் பணியாளர் குழு நினைவுகளால் அலைக்கழிக்கப்படுகிறார்கள். அவர்களுக்குள் மழைபெய்த போது எப்படி இருந்தது? ஸ்டாராபெர்ரி பழங்களின் சுவை, தொலைக்காட்சி நிகழ்ச்சி போன்றவற்றைப் பேசி கடந்த காலத்தைப் பத்திரப்படுத்திக் கொள்கிறார்கள். விண்கலக்குழு மனிதர்களும் மனிதர்களைப் போல தயார் செய்யப்பட்டவர்களும் கலந்தது. ஆனால் இவர்கள் பணியைத் தாண்டிய நினைவு இல்லாதவர்கள். ஒவ்வொரு மூன்று நாட்களிலும் அவர்கள் ஆழ்மனம் துடைத்தாற்போல் சுத்தமாக எதுவுமில்லாது ஆகிவிடும். ஒரு புதிய கிரகத்தின் கண்டுபிடிப்பு அவர்களை மனிதன் செய்யும் விசயங்களுக்கிடையேயான தொடர்புகளை மேற்கொள்ளச் செய்வதும், ஒரு ஒட்டுதலை ஏற்படுத்துதலும், அதைத் தொடர்ந்த நிர்வாகத்தின் விசாரணையுமே இந்த நாவல்.
Alternate Realityஐ உருவாக்கம் செய்வதைப் பற்றிய நாவல் லைனியராகவோ நான்லைனியராகவோ வந்ததுண்டு. ஆனால் 102 ஒப்புதல் வாக்குமூலங்களே நாவல் என்பது புதிய பரிசோதனை முயற்சி. அதற்குள் பணியாளர்களின் வருத்தங்கள், கோபதாபங்கள், நிர்வாகத்தின் எதிர்பார்ப்புகள், நடவடிக்கைகள் என்று மனிதவளத்துறையினர் குறிப்பெடுத்துக் கொள்ள எத்தனையோ விசயங்கள் வந்து போகின்றன. வாசிப்புக்கு எளிதான நாவலல்ல இது. அதிக கவனத்தையும் அதிகமான நினவாற்றலையும் கோரும் நாவல் இது. இந்தப் பிரச்சினையில் மனிதத்துவம் இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதில் சொல்லாமலேயே நாவல் முடிகிறது. ஓல்கா மிகமிகத் திறமை வாய்ந்த எழுத்தாளர். அடுத்த பத்தாண்டுகளில் இவர் நிச்சயமாக உலக இலக்கியத்தில் முன்னணியில் இருப்பார். A highly ambitious but intriguing and stunning Contemporary Literature.
https://www.amazon.in/dp/B08TRVC88N/ref=cm_sw_r_wa_apa_glc_6DBMHMXE6PDMZS3VSWFX
.