பெஞ்சமின் சிலியைச் சேர்ந்த எழுத்தாளர். இதற்குமுன் இவர் எழுதிய இரண்டுநூல்கள் பல பரிசுகளை வென்றிருக்கின்றன. முதல்முறையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது இந்த நாவல் இந்த ஆண்டு புக்கர் இன்டர்னேஷனலின் நீண்ட பட்டியலின் பதிமூன்று நூல்களில் ஒன்று.

ஜெர்மனியின் வீழ்ச்சி உறுதியாகிறது. Red Army ஜெர்மனியின் நகரங்களில் புகுந்து கொள்ளையில் ஈடுபடுகிறது. குடும்பத்தாரின் முன்னிலையில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகிறார்கள். ஹிட்லர் உட்பட பல நாஜிகளின் பாவங்களுக்கு அப்பாவிப் பொதுமக்கள் பலியாகிறார்கள். நாஜியின் முக்கிய தளபதி Goring தன்னை சுட்டுக்கொல்ல விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்படுகிறது. சிறையில் இருந்த Goringக்கு எப்படியோ சயனைடு கிடைத்து அதைக்கடித்து மரிக்கிறார். ஜெர்மனி Gas attack மூலம் French படைகளை, அப்பாவி பொதுமக்களைக் கொல்கிறது. Gas Attackன் மூளையாக செயல்பட்ட Fritz Haber என்ற ஜெர்மன் விஞ்ஞானியின் (இவர் யூதர் என்பது முரண்நகை) மனைவி இந்தப்பாவச் செயலைத் தாங்கமுடியாது தற்கொலை செய்து கொள்கிறார். இவரும் சாதாரண பெண்மணி அல்லர். ஜெர்மனியில் வேதியலில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி இவரே. இதே விஞ்ஞானி நேசப்படையால் போர்குற்றவாளியாக அறிவிக்கப்படுதலும், வேதியலில் நோபல் பரிசு பெறுவதும் வாழ்க்கையின் பெருமுரண்கள்.

நூலின் முதல்பகுதி, அறிவியல் கண்டுபிடிப்புகள் முதல், இரண்டாம் உலகப்போர்களில் நடத்திய பேரழிவுகளைச் சொல்லி விரைகிறது. இயற்பியல், கணித சமன்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட பகுதி. இயற்பியலில் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு பெறாதவர்களால் முற்றிலும் புரிந்து கொள்ள இயலாது. Grothendieck என்ற கணிதமேதையின் வாழ்க்கை ஆச்சரியம் அளிப்பதும், அதிகம் கேள்விப்படாததுமாகும். Schrodinger கதையில் பகவத்கீதை, காளி எல்லாம் வருகிறது. உடன் ஒரு கைக்கிளைக்காதல். உண்மை சம்பவங்கள், இயற்பியல் தியரிகளுடன் புனைவு சிறிது கலந்த இந்த நூலை அல்புனைவு நாவல் என்று வகைப்படுத்தலாம்.

அறிவியல் குறிப்பாக இயற்பியலின் வரலாறு இந்த நூல். ஒருவகையில் இந்த நூல் Dystopian novel. Schrodinger க்கும் Heisenbergக்கும் அறிவுலகத்தில் யார் பெரியவர் என்னும் போட்டியைச் சுற்றி இந்த நூலின் கணிசமான பக்கங்கள் வருகின்றன. இருபதாம் நூற்றாண்டின் முக்கியமான ஐரோப்பிய விஞ்ஞானிகள் எல்லோரும் இந்த நாவலில் வருகின்றனர். இந்த நூலை ஏன் அல்புனைவாக எழுதாமல் புனைவாக எழுத வேண்டும்? ஒரு பேட்டியில் இவர் கூறியது போல Facts மனிதர்களின் மூளையில் ஓடும் சிந்தனைகளைப் படம்பிடிப்பதில்லை எனவே அதன் எல்லை குறுகியது. அடுத்தது தகவல்களின் இடைவெளியை நிரப்ப புனைவை விடப்பெரிய துணையில்லை. மேதைமைக்கும் பைத்தியத்திற்கும் இருக்கும் இடைவெளி எவ்வளவு? கண்டுபிடிப்புகள் அதன் நோக்கத்தைப் பூர்த்திசெய்யாது எதிர்மறை விளைவையும் ஏற்படுத்தும். இது போல் நூற்றுக்கணக்கான விடைதெரியாத கேள்விகள் மனிதஇருப்பு இருக்கும் வரை பூமியில் சுழன்று கொண்டே இருக்கும். If God does not play dice with the world, then certainly Devil does.
https://www.amazon.in/dp/1782276122/ref=cm_sw_r_wa_apa_glc_fabc_Z7Z8KMGY23FSF84QK3D1

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s