ஜப்பானின் Yamanashiல் பிறந்தவர். பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் எழுதுபவர். ஜப்பானின் பல பரிசுகளை வென்றவர். இவருடைய இந்த நாவல் ஜப்பானில் பலத்த வரவேற்பைப் பெற்றது. இந்த ஆங்கில மொழிபெயர்ப்பு ஜூன் 2021ல் வெளியாகியது.

பன்னிரண்டும், பதிமூன்று வயதுமான ஏழு குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை. அதற்கு பெரும்பாலும் Bullying அல்லது தனிப்பட்ட காரணங்கள். அவர்கள் அறையில் இருக்கும் கண்ணாடி மின்னும் நேரங்களில் கண்ணாடிமேல் அவர்கள் கைவைக்கும் போது கண்ணாடி வழியாக ஒரு மாளிகைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். அந்த மாளிகையில் இருக்கும் ஓநாய் முகமூடி அணிந்த பெண் இவர்களுக்கு அந்த மாளிகையின் சட்டதிட்டங்களைச் சொல்கிறாள். அந்த மாளிகையில் வரம்தரும் அறையின் சாவி எங்கோ ஒளிந்திருக்கிறது. அதைக் கண்டுபிடிக்கும் எழுவரில் ஒருவருக்கு அவர்கள் கேட்கும் வரம் எதுவானாலும் கிடைக்கும். இந்த ஏழுபேரும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிருஷ்டசாலிகள். அவர்கள் பள்ளிக்குச் செல்லாதது மட்டுமல்ல, அவர்களுக்கு இடையே பொதுவான மற்றொரு விசயமும் இருக்கிறது. அவர்களுக்கு அது என்ன என்று புரியும் போது நாவல் முடிந்து விடுகிறது.

சிறார் நாவல் போல் தோற்றமளிக்கும் இது சிறார் நாவல் மட்டும் அல்ல, சிறார் குறித்த நாவல்.சமீபத்திய UNICEFன் அறிக்கையின்படி, முப்பத்தெட்டு வளரும், வளர்ந்த நாடுகளில் எடுத்த கணக்கெடுப்பில், ஜப்பானியக் குழந்தைகள் மனவளத்தில் கடைசிக்கு முந்தைய இடத்தில் வருகிறார்கள். உடல்நலத்தில் முதலாவதும், பொருளாதார வசதிகளில் முதல் ஐந்து இடத்திற்குள்ளும் வரும் குழந்தைகள், மனவளத்தில் கிட்டத்தட்ட கடைசியாக வரும் காரணம் என்ன? பள்ளியில் நடக்கும் Bullyingம் மற்றும் சிக்கலான குடும்ப உறவுகளும் காரணமாகச் சொல்லப்படுகிறது. இந்தத் தகவல்களை வைத்துக்கொண்டு நாவலை அணுகுகையில் நாம் இன்னும் நெருக்கமாக உணரமுடியும்.

Kokoro என்னும் பன்னிரண்டு வயதுப் பெண்ணின் கோணத்தில் சொல்லப்படும் இந்த நாவல் ஜப்பானியப் பள்ளிகளில் நடக்கும் எல்லா விசயங்களையும் பேசுவதோடு ஜப்பானிய குடும்ப உறவுகள் குறித்தும் பேசுகிறது. YA fictionக்குரிய கதையில் Fantasy மற்றும் Mystery மற்றும் மேற்கத்திய Fairy tales கலந்த கலவை இந்த நாவல்.

நாவலில் யாரைக் கண்டு Kokoro பயப்படுகிறாளோ, அந்தப்பெண் Bullyingன் இடையே அழுவாள். அவளது தோழிகள் அவளை ஆறுதல்படுத்துவார்கள். பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களும் கூட யார் Victimமோ அவளையே குறை சொல்வார்கள். Bullying ஒரு Art போல நடத்தப்படுகிறது. 350 பக்கங்களுக்கு மேல் இருக்கும் நாவல் விரைந்து ஓடி முடிவதில் மூல ஆசிரியருக்கும், மொழிபெயர்ப்பாளருக்கும் சமபங்கு இருக்கிறது. Tsujimura சமகால ஜப்பானிய எழுத்தாளரகள் இடையே தன் இடத்தை மீண்டும் வலுவாக உறுதிசெய்து கொள்கிறார்.

பிரதிக்கு:

Penguin Random House
First Print June 2021
Price Rs.699.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s