Suzukii 1949ல் பிறந்தவர். பள்ளிப்படிப்பை பாதியில் கைவிட்டு மாடலாக, நடிகையாக 70களில் நடித்தவர். இவர் கணவர் போதை மருந்து அதிகம் உட்கொண்டு இறந்தவுடன், எழுத ஆரம்பித்தவர். இலக்கியத்தில் ஆண்கள் உலகம் என்று இருந்த எல்லாவற்றிலும் இவர் முயற்சித்திருக்கிறார். இந்தத் தொகுப்பு கூட அப்போது ஆண்களே அதிகம் எழுதிய Sci fi கதைகளின் தொகுப்பு. 1986ல் தற்கொலை செய்து கொண்ட இவரது முதல்படைப்பாக ஆங்கிலத்தில் இந்த நூல் 2021ல் வெளிவருகிறது.

Women and Women கதையில் ஆண்கள் இல்லாத ஒரு Utopia உலகத்தை இவர் உருவாக்குகிறார். ஆண்கள் சிறையில் யார் கண்ணுக்கும் தென்படாமல் அடைக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து எடுக்கப்படும் sperm, குழந்தை வேண்டுமென்று விரும்பும் பெண்களுக்கு மருந்து என்ற பெயரில் மருத்துவமனைகளில் செலுத்தப்படுகிறது. சிறையில் தப்பிய ஆணை ஒரு பெண் சந்திப்பது குறித்த கதை இது.

You May dream மக்கள் தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைககளை இருதோழிகள் விவாதிப்பதுடன், நம் கனவில் மற்றொருவரை அனுமதிப்பதால்(கூடு விட்டுக் கூடு பாய்தல் போல் கனவுக்குள் வருதல்) ஏற்படும் விளைவுகளையும் சொல்கிறது.

Night Picnic வேற்று கிரகத்தில் இருக்கும் Monsters குடும்பம் வீடியோக்களையும், புத்தகங்களில் படித்ததையும் வைத்து தாங்கள் பூமியில் இருந்த மனிதர்களின் நீட்சி என உறுதியாக நம்புவது. Surreal யுத்தியில் சொல்லப்பட்ட கதை.

That Old Seaside Club கதையில் கடைசிவரை சஸ்பென்ஸ் காப்பாற்றப்படுகிறது. அவ்வப்போது என்ன தேவையோ அந்தத் தகவல்களை மட்டும் சொல்லிக் கடக்கிறார்.
வெவ்வேறு கதாபாத்திரங்களின் உறவுகள், விஞ்ஞானக்கதையின் வடிவம், Fantasyன் கூறுகள் என்று வாசிப்பிற்கு இதமான கதை.
தலைப்புக்கதை, Neuro scienceன் வளர்ச்சி
ஆக்கத்திற்கு உதவாது போதைப் பொருளாக முடிவதைச் சொல்கிறது.

ஏழு கதைகள் கொண்ட தொகுப்பு இது. ஏழுகதைகளை ஆறுபேர் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறார்கள்.
Sci fi dystopia genreஐச் சேர்ந்த கதைகள் எல்லாமே. Suzuki space travelக்குள்ள விவரங்களைத் தேடி அலையவில்லை, Sci fi க்கான சூழலை உருவாக்கவில்லை, 3031ஆவது ஆண்டு அது என்று தொடங்கவில்லை, ஆனால் கதாபாத்திரங்களின் வேதனை, சலிப்பு, தோல்விகள் முதலியவற்றின் ஆழத்திற்கு செல்வதற்கு Sci fi elements, fantasy முதலியவற்றை உபயோகிக்கிறார்.

கொஞ்சம் கொஞ்சமாக தேவைப்படும் தகவல்களைத் தந்து Suspense build செய்யும் யுத்தியை பல கதைகளில் உபயோகித்திருக்கிறார். பெரும்பாலும் பெண்களே கதை சொல்கிறார்கள். கதைகள் பூமியைவிட்டு வேறொரு இடத்தில் அல்லது Alternative Universeல் நடக்கின்றன. That Old Seaside Club போன்ற கதைகளில் Virtual Realityஐ உபயோகிக்கிறார். மூன்று ஆச்சரியங்கள் Suzukiன் கதைகளில், முதலாவது அன்றாட வாழ்க்கையில் கதாபாத்திரங்களை உலவவிட்டு காலமயக்கம் மற்றும் இடமயக்கம் மூலம் Sci fi கதைகள் எழுதியிருப்பது, இரண்டாவது இவர் இறந்து முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து வெளிவரும் தொகுப்பு இப்போது எழுதியது போல் Contemporaryகூறுகளைக் கொண்டுள்ளது. Suzuki நாற்பது வருடங்கள் முன்பு எழுதிய கதை என்று பாரபட்சம் பார்க்காமலேயே இவர் கதைகளை அணுகலாம். மூன்றாவது ஆச்சரியம், இவ்வளவு நல்ல கதைகளை எழுதிய ஒருவர், எப்படி இவ்வளவு காலம் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து கொள்ளமுடியும்? இந்தத் தொகுப்பிற்காக தகவல்கள் தேடிய ஆறு மொழிபெயர்ப்பாளர்கள் சொல்லியிருப்பது “ஜப்பானிலேயே இவரை யாருக்கும் தெரியவில்லை!”

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s