வவ்வால்கள்- நொய்யல் நடேசன்:
Imposter Syndromeஆல் பாதிக்கப்பட்ட பெண்ணைப் பற்றிய கதை. அந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிலநேரங்களில் Mental illness கொண்டவராய் இருப்பதும் உண்மை. அந்தக் கதாபாத்திரம் குறித்த சித்திரம் தெளிவாக வடிக்கப்பட்டிருக்கிறது. அதே போல் Veterinary Hospital குறித்த விவரணைகளும் நன்றாகப் பதிவாகியிருக்கின்றன. இந்த Plus pointsகளுடன் ஒரு நல்ல கதைக்கரு இருந்திருந்தால் இது நல்ல கதையாக இருந்திருக்கும். இந்த Plotற்கு எத்தனையோ நல்ல வாய்ப்புகள் இருந்திருக்கும். அத்தனையும் தவறவிடப்பட்டு பத்திரிகைசெய்தி படித்த உணர்வே மேலிடுகிறது.
வாணவேடிக்கை – வண்ணநிலவன்:
ஆயிரத்தொரு இரவுகளில் அல்நாசர் கதை என்று உண்டு. கண்ணாடி பாத்திரங்களை விற்க எடுத்து சென்றவன், மரத்தடியில் பகல்கனவு காண்பான். பெரிய பணக்காரனாகி, அழகான பெண்கள் பலரை மணந்து, பல அடிமைகளை வேலைக்கு வைத்துக்கொண்டு, காலை அமுக்கும் அடிமைக்கு உதைவிடுவதாக கண்ணாடி பாத்திரங்கள் வைத்த பையை உதைத்து முதலுக்கே மோசமாகிவிடும். வண்ணநிலவன் அதே கதையை அவருடைய மொழியில் சொல்கிறார். கலைஞர்கள் அக்கப்போர் வளர்ப்பதில்லை, அக்கப்போர் வளர்ப்பவர்களிடம் கலை சற்று தள்ளிநின்று வேடிக்கை பார்க்கிறது.