Isaka ஜப்பானில் பிறந்து வளர்ந்தவர். இப்போது ஜப்பானில் எழுதிக் கொண்டிருக்கும் எழுத்தாளர்களில் உலகஅளவில் கணிசமான எண்ணிக்கையுள்ள வாசகர்களைக் கொண்டவர். இவரது நூல்களுக்குப் பல பரிசுகளை வென்றவர். பல திரைப்படங்களாக எடுக்கப்பட்டுள்ளன.
2010ல் ஜப்பானிய மொழியில் இவர் எழுதிய இந்த நாவல் 2021ல் ஆங்கிலத்தில் வெளியாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய நூல்களில் ஒன்றாக முன்னணியில் இருக்கிறது.

Toyoவில் இருந்து Morioka செல்லும் புல்லட் டிரெயின் அது. இடையில் ஆறு நிறுத்தங்கள்.
தன் மகனை கட்டிடத்தின் உச்சியில் இருந்து தள்ளிவிட்ட டீன்ஏஜ் சிறுவனைப் பழிவாங்கத் துப்பாக்கியுடன் ஏறிய தந்தை, கடத்தப்பட்ட Gangsterன் மகனை மீட்டுவிட்டு, மீட்புத்தொகையுடனும் பயணம் செய்யும் இரண்டு அடியாட்கள், அந்த மீட்புத்தொகையைத் திருடவந்த Professional திருடன். எல்லாமே எளிதாக முடிந்தது போல் தோன்றி சிக்கல்களுக்கு மேல் சிக்கலாகிறது. Agatha Christieயின் Murder on the Orient Express போல் இந்தக்கதையும் டிரெயினில் தொடங்கி அதிலேயே முடிகிறது.

வித்தியாசமான கதாபாத்திரங்கள் எப்போதும் திரில்லரில் சுவை சேர்க்கும். பதின்வயதில் Saddist ஆக இருக்கும் சிறுவன், நம்மால் கற்பனை கூட செய்ய முடியாத வகையில் சிந்திக்கிறான், நடந்து கொள்கிறான். அடுத்து குடியில் மூழ்கியதால் குழந்தையைக் கிட்டத்தட்ட இழந்த குற்ற உணர்வில் குடியை உடன் நிறுத்திய தந்தை.
ஐந்துநிமிடம் தாமதமாக வந்த பெண்ணின் கையை வெட்டும் கண்டிப்பான முதலாளி.
எவ்வளவு திட்டம் போட்டாலும் Badluck கட்டிப்பிடித்துக் கொண்டே இருப்பதால் சிரமப்படும் ஒருவன். Dostoevskyயின் வரிகளை Quote செய்யும் கிரிமினல் என்று சுவாரசியத்திற்குப் பஞ்சமேயில்லை.

இந்த நாவலிலும் Bullying முக்கியமான பங்கை வகிக்கிறது. உடன் படிக்கும் சிறுவர்களுக்கு Electric shock கொடுப்பது என்பது Bullyingல் உச்சகட்ட விளையாட்டு.
இவர்களைக் கண்டிக்கும், உடன் படிக்கும் மாணவனின் தந்தை என்னிடம் அத்துமீறி நடந்தார் என்று மாணவியை மிரட்டி சொல்லவைப்பது. ஜப்பானில் Bullying இல்லாது புத்தததங்களே வராது என்று சொல்லும் அளவிற்கு அது அங்கே பெரிய பிரச்சினையாக இருக்க வேண்டும்.

ஜப்பானியத் திரில்லர்கள் வலுவான கதைப்பின்னலை மையமாகக் கொண்டிருப்பவை. இந்த நாவலும் அப்படித்தான். நானூறு+ பக்கங்கள் புல்லட் டிரெயினின் வேகத்திலேயே ஓடிக் கடக்கின்றன. அந்த வேகம் தான் அமெரிக்காவில் இந்த நாவலை Brad Pitt, Sandra Bullock நடிக்கும் படமாக உருவாக்க ஊக்குவித்திருக்கக்கூடும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s