முள்ளும் மலரும் – நட்சத்திரன் செவ்விந்தியன்:
பிரபாகரனையும் பொட்டம்மானையும் ஒரு கற்பனைப் பாத்திரத்தையும் வைத்து மனம் போன போக்கில் எழுதப்பட்ட கதை. கெட்ட வார்த்தைகள் கதையில் பொருந்தாமலே தொங்கி நிற்கின்றன. கதையின் முதலிலேயே இந்தக் கெட்ட வார்த்தைகளை வைத்திருந்தாலும் பெரிய மாற்றம் ஒன்றும் நேர்ந்திருக்காது. அகழ் ஆசிரியர் குழு திறமை வாய்ந்தவர்கள் சேர்ந்த குழு, அவர்களுக்கு இந்தக்கதையின் தரம் பற்றி தெரியாமல் இருக்க முடியாது, பிரசுரிக்க வேறு காரணம் இருந்திருக்க வேண்டும் என்று நம்புவதில் எனக்கு ஒரு ஆசுவாசம் எழுகிறது.
https://akazhonline.com/?p=3450
வெப்ப சூத்திரம்- சக்கரவர்த்தி:
சிறார்கள் இயக்கத்தில் சேர்ந்து சீரழிக்கப்பட்டதையும், தப்பியதையும் பதிவுசெய்யும் கதை. இடையில் புலிகள் செய்யும் கொலைகள், மலையக-யாழ்ப்பாண அரசியல், சிறுவர்கள் மேல் நடத்தும் பாலியல் வல்லுறவு என எல்லாம் சேர்ந்திருக்கின்றன.
சண்டையில் எந்த சம்பந்தமும் இல்லாத சிறுவர்கள் இயக்கத்தில் சேர்வதும், அலைக்கழிக்கப்படுவதும் இந்தக் கதையில் நன்றாகப் பதிவாகி இருக்கின்றன.
புத்தரின் மௌனம்- நெற்கொழுதாசன்:
புலம் பெயர்ந்தவர்கள் எழுதுவதற்கு மற்றவர்களை விட அதிக விசயங்கள் இருக்கும். பங்களாதேஷ் Garment துறையில் எல்லா நாடுகளுக்கும் போட்டியாக இருப்பதைப் பார்த்ததுண்டு. அடுத்த வேலை சாப்பாட்டின் விலையை மட்டும் லாபமாக வைத்து Price Quote கொடுப்பது போல் குறைவாக இருக்கும். அவர்களது அந்த போட்டி இங்கே சரியாகப் பதிவாகி இருக்கிறது. பிற்சேர்க்கை முதலில் வருவது நல்ல யுத்தி. அதே போல் கதையின் முதல்பகுதி ஒரு புறப்பின்ணணியைச் சொல்லிக் கொண்டு போகையில் சட்டென்று தடம் மாறுவதும். கதை நன்றாக வந்திருக்கிறது.
https://akazhonline.com/?p=3443
வாசோ.ச.துரை:
ஒரு catastrophic deathக்குப் பிறகு வரும் PTSD பற்றிய கதை. அசோகமித்ரனின் ரிக் ஷா கதை நினைவுக்கு வந்தது. கடைசிப்பத்தி கங்கா சந்திரமுகி ஆவது. Simple but a very neat story.
https://akazhonline.com/?p=3436
நித்தியம்- ஜி.எஸ்.எஸ்.வி.நவீன்:
ஜி.எஸ்.எஸ். வி.நவீன் வித்தியாசமான கதைக்களங்களைத் தொடர்ந்து அமைத்து வருகிறார். ஆங்கிலேயர் காலத்தில் நடக்கும் கொலை, மீனாட்சி அம்மன் கோயில் பின்னணியில் ஒரு கதை, திருநெல்வேலி சென்ட்ரல் தியேட்டரை வைத்து ஒரு கதை என்று வித்தியாசமானவை. காதல் நித்தியமா இல்லை மரணம் நித்தியமா? உடன்கட்டை ஏறுவதைப் பற்றிய புதுப் பார்வையை அளித்தது Chitra Divakaruniன் Last queen. இது சுவாரசியமாகச் செல்லும் கதை. முதலில் உடன்கட்டை ஏற முடியாது எனப் போராடிய சுப்புலட்சுமி இறுதியில் அமைதியானது ஏன் என்று யோசித்துப் பாருங்கள். இந்தக் கதையின் ஜீவன் அதில் ஒளிந்து இருக்கிறது.
https://akazhonline.com/?p=3430
தேன்கூடு – தீபு ஹரி:
லாவண்யா சுந்தரராஜனின் புறாக்களை எனக்குப் பிடிப்பதில்லை கதை நினைவுக்கு வந்தது. இரண்டு கதைகளிலுமே கதைசொல்லி பெண்கள் (எழுத்தாளரல்ல).ஆனால் இந்த இரண்டு பெண்களுக்கிடையே எவ்வளவு வித்தியாசம். இப்படித்தான் தலைமுறை இடைவெளி வருகிறது போலிருக்கிறது. விரைந்து செல்லும் மொழிநடை இதில் சிறப்பு. இன்னொன்று ஒரு பக்க நியாயங்களை, தனக்கென வரும்போது மாறும் கோணங்களை, வாசகர்களின் புரிதல் எவ்வாறு இருக்கும் என்ற கவலையில்லாமல் அப்படியே கொடுப்பது. இடையில் ப்ரபாவுடன் உரையாடல் ஒரு நல்ல யுத்தி.
https://akazhonline.com/?p=3427
அழைப்பு- கார்த்திக் பாலசுப்பிரமணியன்:
எளிமையான கதைக்கரு ஆனால் சொல்லிய விதம் இதை நல்ல கதையாக மாற்றி இருக்கிறது. கார்த்திக் பாலசுப்பிரமணியன் எதிர்கால நம்பிக்கைகளில் ஒருவர். இந்தக் கதையிலேயே விஸ்வநாதன் ஆராய்ச்சியில் வெற்றி பெற்றிருந்தால் அந்த எண்கள் வந்திருக்க வாய்ப்பில்லை. இல்லை எண்கள் வந்ததால் வெற்றி பெறவில்லையா! மொத்தக் கதையில் உமா ஒரு வார்த்தை கூட பேசவில்லை, ஆனால் எவ்வளவு தெளிவாக அவள் கதாபாத்திரம் வாசகர் மனதில் பதியும்? அதே போல் அவரது இரு மகள்கள் குறித்த குறிப்புகளும் கூர்மையாக வந்திருக்கின்றன. தோல்வி+தனிமை=அழைப்பு