பின்னோட்டத்தில் நண்பர் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க சிறந்த நாவல்கள் தமிழில் ஐந்தை சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தார். சிறந்த என்பதே எப்போதும் Subjective ஆகையால் பெரும்பான்மையான Serious readers பரிந்துரைக்கும் நாவல்களைத் தான் சொல்ல முடியும்.

எனக்குப் பிடித்த ஐந்து நாவல்கள் என்றால் நான் மோகமுள், காகிதமலர்கள், தலைமுறைகள், பசித்த மானிடம், நாகம்மாள்/அபிதா என்று சொல்லலாம். இதில் மோகமுள்ளை ஆங்கிலத்தில் அப்படியே கொண்டுவர முடியாது. பசித்தமானிடம் தமிழில் ஒரு Path breaking novel. அதை ஆங்கிலத்தில் 2021ல் மொழிபெயர்த்தால் இருபத்தைந்து வயது வாலிபனை Kgயில் கொண்டு போய் உட்கார வைத்தது போல் ஆகிவிடும். நாகம்மாள் இந்த மண்ணின் மணம். அதை ஆங்கிலத்திற்கு மடைமாற்ற முடியாது. அபிதா ஆங்கிலத்தில் வெறும் Electra complex நாவலாகி விடும். காகித மலர்கள் ஆங்கிலத்திற்கு ஏற்ற நாவல் ஆனால் அங்கே அது சராசரி ஆகிவிடும். Alex Haleyயின் Roots படித்தவர்களுக்கு ஆங்கிலத் தலைமுறைகள் எந்த பாதிப்பையும் அளிக்காது. எனவே நம் மொழியில் சிறந்தவை என்று நாம் சொல்வது ஆங்கிலத்திற்கு சிறந்த படைப்பாக மாறுவது கடினம்.

பழைய நாவல்களை விட்டுவிடுவோம். இப்போது சமீபத்தில் வந்த சிறந்த சிறுகதைகள் என்று நான் நம்புவதைப் பார்க்கலாம். சு.வேணுகோபாலின் கார்காலம்தொகுப்பின் சொல்லமுடிந்தது அழகான கதை. படித்துப்பின் நீண்டநேரம் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். சு.வேணுகோபாலின் இதுபோன்ற கதைகள் அவருடைய craftsmanshipஐ தன்னகத்தே கொண்டவை. அவருடைய மொழியை ஆங்கிலத்தில் கொண்டு வருவது சிரமமில்லை. ஆனால் தமிழ்சூழலில் இருக்கும் அம்மா- மகன் உறவை அல்லது மோதலை Virginiaவில் பிறந்து வளர்ந்த ஒரு வாசகரால் எப்படி உணர்ந்து கதைக்குள் உட்புக முடியும்! இஸுரு சாமர சோமவீரவின் திருமதி பெரேரா சிறுகதையை உலகின் எந்த மூலையில் வாசிக்கும் வாசகரும் ரசிக்க முடியும். அதே போல் லதாவின் இளவெயில். பெண்கள் மிக அதிகமாக உணரக்கூடிய ஆண்கள் Empathize செய்யக்கூடிய Beautiful story. தக்‌ஷிலா ஸ்வர்ணமாலியின் ஒரே திடல் கதையை ஆங்கிலத்திற்கு கொண்டு வருவதும் எளிது. அது ஆங்கில வாசகர்களை பெருவாரியாக ஈர்க்கும். இந்த எல்லாக் கதைகளிலுமே ஒரு Globalness மற்றும் Contemporaryness இருக்கின்றன. பழைய தமிழ் சிறுகதைகளில் இவை இல்லையா? 1941ல் தமிழின் தலைசிறந்த சிறுகதை எழுத்தாளர் புதுமைப்பித்தன் எழுதிய மகாமாசானம் போன்ற கதைகளில் இன்னும் இருக்கிறது. தமிழில் மட்டுமல்ல ஆங்கிலத்திலும் அதே அதிர்வைக் கொண்டுவர முடியும். ஆனால் புதுமைப்பித்தனைக் காதலிக்கின்ற பெருந்தேவி போன்றவர்கள் மொழிபெயர்ப்பு செய்யவேண்டும். அதே போல் ஏராளமான தமிழ் சிறுகதையாசிரியர்கள் தங்கள் படைப்புகளை ஆங்கிலத்துடன் போட்டியிடும் தகுதியுடையதாக்கி இருக்கிறார்கள்.

சென்ற புக்கரில் விருதுபெற்ற Shuggie Bain மகனது பார்வையில், அவனது குடிக்கு அடிமையான, நல்ல மனைவியாகவோ அல்லது நல்ல தாயாகவோ இருக்கமுடியாத, அவனது அம்மாவின் கதை. நமக்கு நல்ல தாய் இருக்கலாம், ஒருவேளை இது போல் தாய் என்றால்…… என்பதில் வரும் பயம் நம்மை நாவலில் ஒன்ற வைக்கிறது. இந்த புக்கர் இன்டர்னேஷனலில் கடைசி பட்டியலில் வந்த ஆறு நூல்களில் மூன்றில் அல்புனைவு அம்சங்கள் நிறைந்திருந்தன, ஒன்று அர்ஜென்டினாவின் இளைஞர்களிடையே இருக்கும் Chaosஐயும், ஒன்று வரலாற்றில் நடந்த தவறையும் சொன்னது. பரிசை வென்ற At Night All Blood is Black ஒரு குற்றஉணர்வின் கதை. இந்த வருட புலிட்சர் விருதை வென்ற The Night Watchman அமெரிக்க வரலாற்றில் ஆதிகுடிகளுக்கு நேர்ந்த அநீதி பற்றி அதற்காக போராடியவரின் பேத்தி எழுதிய உண்மை+ புனைவு. இவையெல்லாம் இன்றைய உலக இலக்கியத்தில் Latest trends என்று சொல்லலாம்.

Avni Doshiன் Burnt Sugar படித்தவர்கள் இந்தியர் எனில் அவர் இந்தியக்கதையை மேலைநாட்டு பாணியில் எழுதியதாக சொல்வார்கள். நான் சிபாரிசு செய்து அந்த நூலைப்படித்த அமெரிக்கப் பெண்மணி அது முழு இந்திய நாவல், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார். ஆடிக்காற்றில் அம்மியே பறக்கிற போது இலவம்பஞ்சுகளுக்கு என்ன கதி என்ற பழமொழி ஏனோ சம்பந்தமேயில்லாமல் நினைவுக்கு வந்தது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s