ஆசிரியர் குறிப்பு:
இலங்கையில் பிறந்து சிங்கப்பூரில் வளர்ந்தவர். சிங்கப்பூர் நாளிதழ் ஒன்றில் ஆசிரியர். இரண்டு கவிதைத் தொகுப்புகளை ஏற்கனவே வெளியிட்டுள்ள இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு இது.
வல்லினத்தில் வெளிவந்த இளவெயில் என்ற சிறுகதை தான் இவர் வேறு என்ன எழுதியிருக்கிறார் என்று தேட வைத்தது. பதிமூன்று வருடங்களுக்கு முன் வந்த நூல் இது, அதிலும் முதல்கதை 1997ல் வெளியாகி இருக்கிறது. கிட்டத்தட்ட கால்நூற்றாண்டில் இவர் எழுத்தில் நிறைய மாற்றம் இருக்கிறது.
பத்து கதைகள் கொண்ட தொகுப்பு. 1997ல் இருந்து 2006 வரையுள்ள பத்தாண்டுகளில் எழுதியவை. பெரும்பாலும் பெண்களைச் சுற்றியே கதை நகர்கிறது. எல்லாப் பெண்களுமே நிம்மதி இழந்து அலைகிறார்கள். வீட்டு வேலைக்காக, பாலியல் ரீதியாக சுரண்டப்படுவதை சத்தமில்லாமல் ஏற்றுக்கொள்ளும் முதல் கதையில் வரும் சிங்கப்பூர் சிட்டிசன் மற்றும் வசந்தி, அடையாளச்சிக்கலில் மாட்டிக் கொள்ளும் ஷெரினும், வீட்டைப் பறிகொடுத்த ஆச்சியும், சண்பகலட்சுமியும், சிறுவயதில் இருந்து இழப்பு, நிராகரிப்பைச் சந்தித்ததால் பயணிகள் விமானத்தை ஓட்டிக்கொண்டே தற்கொலை செய்யும் விமானி, குடியிருக்கும் வீட்டுக்காரரின் இறப்பை எதிர்கொள்ளத் தெரியாது தடுமாறும் பெண் என்று எல்லோருமே அலைபாய்கிறார்கள் அல்லது அலைக்கழிக்கப் படுகிறார்கள். அப்பாவை மையமாக வைத்து நகரும் ஒரே கதையில் கூட அப்பா ஒரு Loser தான்.
இதுவரை, வீடு, அறை போன்ற கதைகள் நனவோடை யுத்தியில் நகரும் கதைகள். தமிழுக்கு அமுதென்று பேர் Sci fi கதை. படுகளம் புராணத்தை Mix செய்த கதை. அடையாளம், நாளை ஒரு விடுதலை பெண்ணியக் கதைகள்.
மதம் இரண்டு கதைகளில் முக்கியமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒன்று முகாந்திரம், மற்றொரு கதை வீடு. ஒன்றில் அப்பாவி தீவிரவாதத்துடன் இணைக்கப்படுவதும், மற்றொன்றில் திருமணத்திற்காக மதமாற்றமும். இரண்டுமே சிங்கப்பூரில் நடப்பவை. சிங்கப்பூர் ஒரு Classic example for poaching by Christianity. நாற்பது வருடங்களுக்குள் 9.9%ல் இருந்து 18.8% ஆக மாறியுள்ளது. Islam மற்றும் இந்து மதங்களில் பெரிய மாற்றம் இல்லை. Taoism நிறையவே மற்ற மதங்களுக்கு மாறிவிட்டது.
மற்ற நாடுகள் போல் அல்லாது சிங்கப்பூரில் கிட்டத்தட்ட கால்பகுதி ஜனத்தொகை எந்த மதத்தையும் பின்பற்றவில்லை. என்று உலகில் கணிசமான மக்கள்தொகை எந்த மதத்தையும் பின்பற்றாமல் இருக்குமோ அப்போதே அமைதி திரும்பும்.
சிங்கப்பூரில் மலாய் தெரியவில்லை என்றால் அந்நியர் ஆவது, குறைந்த வருமானத்தில் சேமிக்கும் பணத்திற்கு பங்கு போட தாய்நாட்டில் பலர் காத்திருப்பது, இந்தியா போலவே அங்கேயும் பிள்ளைகள் சொத்துக்காக பெற்றோரை நட்டாற்றில் விடுவது என்று இயல்பான வாழ்க்கை பதிவாகியிருக்கிறது. அடுத்து வரப்போகின்ற லதாவின் சிறுகதைத் தொகுப்பு இந்தத் தொகுப்பில் இருந்து நீண்ட தொலைவு வந்திருக்கும் என்பதை மட்டும் இப்போது உறுதியாக சொல்லமுடியும்.
பிரதிக்கு :
காலச்சுவடு பதிப்பகம் 04652-278525
இரண்டாம் பதிப்பு ஆகஸ்ட் 2010
விலை ரூ.75.