ஆசிரியர் குறிப்பு:

கச்சிராயப்பாளையத்தில் பிறந்தவர். சென்னையில் வசிப்பவர். சிங்கப்பூரில் ஐந்து ஆண்டுகள் வசித்தவர். இவரது மார்க்கும் ரேச்சலும் கதை குறும்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த நூல் இவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பு.

மாதவன் பாத்திரக்கடையை நடத்திக் கொண்டே பார்த்த மனிதர்களை வைத்துக் கடைத்தெருக்கதைகள் எழுதியது போல, இவர் சிங்கப்பூரில் வாழ்ந்த ரோவெல் தெருவில் தான் பார்த்த மனிதர்களைப் புனைவில் ஏற்றியிருக்கிறார். பிரிட்டிஷ் காலத்தில் சிவப்புவிளக்குப் பகுதியாக இருந்த தெருவின் எச்சம் இன்னும் இருப்பதாகத் தெரிகிறது. கண்களுக்கு முன்னேயே கதைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அவைகளை எப்படி நல்ல கதைகளாக மாற்றமுடியும் என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு இந்தத் தொகுப்பு. கண் முன் விரியும் கதைகளைத் தவறவிட்டவர்கள் காற்றுவெளியில் கதையைத் தேடி அலைகிறார்கள்.

களபஎயிறு தொகுப்பின் வித்தியாசமான கதை. சொந்த வாழ்க்கையிலும், அலுவலக வாழ்க்கையிலும் நிம்மதியில்லாது அலைபாயும் பெண்ணுக்கு பற்கள் போகும்படி முகத்தில் அடிபடுகையில் தலையில் சேர்த்து அடிபட்டிருக்கலாம் அல்லது அமானுஷ்ய சம்பவங்கள் வெகுசிலருக்கு மட்டும் நேர்வது போல் நடந்திருக்கலாம். கதையில் கடைசிவரை இரண்டு சாத்தியங்களும் கலையாது இருப்பதாகவே தோன்றுகிறது.

அன்றாட வேலை பார்த்தால் தான் பிழைப்பு அல்லது ஊரில் வாங்கிய கடனை அடைக்கமுடியும் என்ற நிலையில் உள்ள ஆண்கள் தான் பெரும்பாலும் இவர் கதைகளின் மையப்பாத்திரங்கள். அப்படியும் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அடிதடியில் இறங்கி ஆறுமாத சம்பளத்தை வழக்குக்கு செலவழிக்கிறார்கள், முப்பது கிலோ மீட்டர் தூர இடத்திற்கு சுற்றுலா செல்ல வருடக் கணக்கில் முயற்சித்தும் முடியாமல் போகிறது, கையில் இருக்கும் சொற்பத்தையும் கோடிகளின் மோசடியில் இழக்கிறார்கள், சம்பளமில்லாத விடுமுறையிலும் ஊருக்குப் போனால் செலவு என்று பயந்து வீதிகளில் அலைகிறார்கள்.

கதைகளின் நம்பகத்தன்மை இடையில் வரும் Finer details மூலம் அதிகரிப்பது இவர் கதைகளில் அடிக்கடி நடக்கிறது. மார்க் ஏமாற்றிவிட்டுப் போய்விட்டானே எனக் கோபப்படுவது, எல்லாவற்றிற்கும் தேவன் என்றால் வரும் எரிச்சல், தி.ஜாவின் தவம் சொர்ணாம்பாள் சாயலில் வரும் ரொட்டி கோசம் தேவி என்று வரிசையாக வரும் சம்பவங்கள் புனைவுத்தன்மையைக் குறைத்து யதார்த்தத்தைக் கூட்டுகின்றன.

பிராத்தனை கதை, எந்த சின்னக்குறையும் சொல்ல முடியாத Perfect short story. அதை ரசித்துப் படித்தபின் தான் தோன்றியது அதில் கொஞ்சம் ஆதவன் Style இருப்பது.
Obsessionஐச் சொல்லும் எலி கதையும் நன்றாக வந்திருக்கிறது. மார்க்கும் ரேச்சலும் எளிதில் யூகிக்கும் முடிவு எனினும் மிக அழகான Presentation, அதே போலவே பிணை கதையிலும் முடிவு Flat ஆக இருப்பது போல் தோன்றுகிறது. Open ending or snap shot type stories வரும் காலத்தில் இவைகளைக் குறைகள் என்று சொல்ல முடியாது.

பத்து கதைகளிலும் கூடுமானவரை வித்தியாசமான கதைக்கருக்களை முயற்சி செய்திருக்கிறார். ஒரே கதைக்களத்தில் (சிங்கப்பூர் ரோவெல் தெரு) நடக்கும் கதைகளில் வித்தியாசம் காட்டுவது கடினம். மொழிநடையில் ஒரு Spontaneous flow நம்மை வேகமாக இழுத்துச் செல்கிறது. நல்ல தொகுப்பு இது. நம்பிக்கையைத்தரும் எழுத்தாளர்.

சிறுகதைகள்

பிரதிக்கு:

எழுத்து பிரசுரம் 98400 65000
முதல்பதிப்பு பிப்ரவரி 2021
விலை ரூ.220.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s