கஞ்சா- அம்ரிதா பீரிதம்- பஞ்சாபியிலிருந்து ஆங்கிலம் ராஜ் கில்- ஆங்கிலத்திலிருந்து தமிழில் தி.இரா.மீனா:
இந்தக்கதை ஏற்கனவே அங்கூரி என்ற பெயரில் அனுராதா கிருஷ்ணசாமியால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு ஆவநாழியில் வெளிவந்தது. மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட கதைகளுக்கு, நாவல்களுக்கு ஒரு தளத்தில் Update செய்யும் வசதி இருந்தால் அவரவர் செய்து கொள்ளலாம். புதிதாக செய்பவர்கள் ஏற்கனவே செய்யப்பட்டிருக்கிறதா என்று சரிபார்த்தலும் எளிது.
என்ன ஒரு அழகான கதை. கிராமத்துப் பெண்ணின் நம்பிக்கைகளை வைத்துச் சொல்லப்படும் கதை, பெண் சமூகத்தால் ஒரு நுகரும் பொருள் போல் நடத்தப்படுவதை சொல்கிறது. பெண் படிக்கக்கூடாது, காதலிக்கக் கூடாது, கணவன் வயதானவன், அழகில்லாதவன் என்றாலும் வீட்டில் முடிவுசெய்தால் அவனே தெய்வம்.
கிராமத்தில் இருந்து அதே மனநிலை, நம்பிக்கைகளுடன் வந்த அங்கூரி, அவளறியாமலே நகைகள் அணிவது, முகத்திரை விலக்குவது என்று ஆரம்பிக்கிறாள். பொருந்தாத ஜோடி என்பதும், அவளது அழகு பற்றியும் கதைசொல்லியால் சொல்லப்படுகிறது. இப்போது அங்கூரிக்கு கடிதம் எழுதும் அளவாவது எழுதப்படிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். எதற்காக?
மீனாவின் மொழிபெயர்ப்பு தெளிவாக, அழகாக இருக்கிறது.
http://padhaakai.com/2021/07/25/amrita-pritam/
அப்பாவின் நண்பர் – வேல்விழி மோகன்:
அப்பாவின் நண்பர், வந்தவரா இல்லை பழக்கடைக்காரரா? மோகமுள் தங்கம்மாளை உள்ளே வைத்து பூட்டிப்போவார் அவள் கணவர், கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் கழித்து அவள் வாசலுக்கு வந்து விடலைப்பையன்களை வெறித்துப் பார்க்கிறாள். பாவம்.