துலாத்தான்- பா.திருச்செந்தாழை:
மற்றொரு மண்டி கதை. ஆனால் முற்றிலும் புதிய களம். மண்ணின் மணம் வீசும் கதைகளை திருச்செந்தாழை தேர்ந்த சைத்ரீகனின் தன்னம்பிக்கையுடன் எழுதுகிறார். மனதை திடப்படுத்திக் கொண்டு கதையைப் படிக்க ஆரம்பியுங்கள்.
திருச்செந்தாழை பெயர் போல மொழியும் அழகு.
“பாவாடையை விரித்து குத்தவைத்து உட்கார்வது கவிழ்த்து வைத்த செம்பருத்திப்பூ.”
“மறந்திருந்த கவலைகள் அனைத்தும் ஈக்கூட்டம் போல் வந்து அப்பிக் கொண்டன.”
” அய்யாவு தனது பாதங்களைப் பூனைக்குட்டிகளைப் போல சாக்குக் கட்டுக்குள் பொதிந்து கொண்டார்.”
“காய்ந்த சோகை தலைவிரி கோலம் கொண்ட பெண்ணின் முகச்சாயலோடு உருண்டு வந்தது.”
கிராமத்து ஜனங்கள் அப்பாவிகள் என்ற பொது அபிப்ராயத்திற்கு எதிர்மறையான உலகத்தை இந்தக்கதையில் சித்தரித்திருக்கிறார். Dog eating dog world. உலகத்தில் எல்லோருக்கும் தெரியுமுன் தான் தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பது சம்பந்தப்பட்டவனுக்கே தெரியும். போதும் போதாதற்கு கை கொடுத்த தெய்வம் சாவித்திரி போல பரமு. என்ன ஒரு Subtle characterization! சொந்த வாழ்க்கையும், வியாபாரமும் சத்தமில்லாது கலந்து வரும் கதை.
பித்து – எம்.கோபால கிருஷ்ணன்:
முழுக்கவே உரையாடல்கள் மூலம் நகரும் கதை. உரையாடல்களை வெகுகூர்மையாக, வாசகர்களைக் கவனமாகப் படிக்கவைக்கும் கைகளால் எழுதப்பட்டது. காதல் தோல்விக்கு
யாரும் ஆறுதல் சொல்வதற்கில்லை. அவர்களாகவே வெளிவரவேண்டும். பித்து மனநிலையைப் பற்றி ஒருவார்த்தை சொல்லாமல், வாசகர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்ட கதை.
https://tamizhini.in/2021/07/27/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/
மெல்லிய இடர் – சுரேஷ் பிரதீப்:
Superbly presented story. எத்தனை முயற்சித்தும் திரும்பிப் பார்க்காத பெண், இன்னொரு ஆணுடன் சிரித்துப்பேசுவதைப் பார்த்தால் வயிறு எரியத்தான் செய்யும். புறக்காட்சிகள் வேறு, அகமனம் அதை அணுகுவது வேறு. நோயில் பாதிக்கப்பட்ட ஒருவனின் பார்வையில் விரியும் கதை இது. முடிவு எதிர்பாராதது. வாழ்த்துகள் சுரேஷ்.
பெண் என்று சொல்லிடிலோ- இராஜேந்திர சோழன்:
ஒரு குடிசையில் நடக்கும் ஒருநாள் வாழ்வே கதை. பெண்கள் எல்லா பாரத்தையும் ஏற்றுக் கொண்டால் ஆண்களுக்குப் பொறுப்பு இல்லாது போய்விடுகிறது. ஐம்பது பைசா என்றால் எட்டணா தானே.
பல்தஸாரே ஸில்வாண்டேவின் மரணம் – மார்சல் ப்ரூஸ்ட் தமிழில் இல. சுபத்ரா:
நகரநாகரீகம், செழிப்பான வாழ்க்கை எல்லாமே மரணத்தின் அழைப்பு வரும்போது அர்த்தமில்லாது போய்விடுகிறது. Society மேலான Satireம் மரண விசாரமும் தான் கதை. மரணம் சிறுவனின் பார்வையில் பார்க்கப்படுகையில் வித்தியாசமான உணர்வைத் தருகிறது. Proust அடிப்படையில் நாவலாசிரியர். ஒரே ஒரு சிறுகதைத் தொகுப்பே எழுதியிருக்கிறார். அது பெரிதாகப் பேசப்பட்டதாக என் நினைவில் இல்லை. வாய்ப்பிருப்பவர்கள் Lydia Davisன் மொழிபெயர்ப்பில் வந்த In search of Lost time வாசித்துப் பாருங்கள். மறக்கமுடியாத அனுபவமாக இருக்கும்.
நல்ல மொழிபெயர்ப்பாளர்கள் இணையஇதழில் எழுதுகையில் போதுமான நேரம் இருப்பதில்லை போலும். அவர்கள் புத்தகங்களுக்குச் செய்யும் திருத்தங்களுக்கு நேரப்பற்றாக்குறை இதில். பின்வரும் வரி என்ன சொல்கிறது?
“உயர்சிந்தைகளால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டிருந்த அவர், இதுநாள் வரை வாழ்விற்கு அழகும் மதிப்பும் பெருமையும் சேர்க்கின்ற விஷயங்கள் எனக் கருதியவற்றின் கருணை மீது தற்போது ஆர்வம் இழந்திருந்தார். “
நாவல் மரம்- மோனிக்கா அரேக் தே நியாக்கோ- தமிழில் லதா அருணாச்சலம்:
First person singularல் கதை சொல்லப்படுவதால் அழுத்தம் கூடியிருக்கிறது. ஒரு Nostalgia, ஒரு ஏக்கம் ஒரு Reliving ஒரு Sadness எல்லாம் கலந்து வரும் கதை. ஒருபாலின உறவு சட்டத்துக்கும், மதத்துக்கும் புறம்பானது என்று சொல்லும் தேசத்தில் இருந்து எழுதப்பட்டிருக்கிறது. நாவல் பழம் Nippleன் குறியீடு. நாவல் மரம் Symbol ஆகக் காட்டப்படுவதால், ரகசியம் அதன் கீழே வெளிவந்ததால், விவிலியத்தின் படி விலக்கப்பட்ட கனி என்ற உருவகமும் வருகிறது. ஒருபுறம் ஒருபால் உறவின் பழைய நாட்களின் Longingஐ சொல்லுகையில், அந்த சமூகம் பற்றி ஏராளமான குறிப்புகளும் வருகின்றன. வாழ்க்கை திருப்பிப் போட்டது போல் நாம் ஏளனமாகப் பார்ப்பவர் பெரியநிலைக்கு வருவதும், ஏளனம் செய்தவர் பெண் செவிலியாகப் பணிபுரிவதும் விதியின் நகைமுரண்கள். வேறு என்ன சொல்ல முடியும். Simple but deep story. லதாவின் இதமான சுகமான மொழிபெயர்ப்பு. வாய்ப்பிருப்பவர்கள் இஸ்மத் சுக்தாயின் Lihaaf கதையும் படித்துப் பாருங்கள்.
காஃப்காவின் நண்பர் – ஐசக் பாஷவிஸ் சிங்கர்- தமிழில் கயல்:
சிங்கரின் கதைகளைப் படிப்பது பரமானந்தம். இந்தக் கதையில் காஃப்காவைக் கதாபாத்திரமாக்கி அவரையும், அவர் நாவல்களையும் வம்பிழுக்கிறார். ஜாக் கோஹன் தன் பழைய புகழை வைத்து கதைசொல்லியிடம் பணம் பறிப்பதும், அவனை தன் கதை கேட்கும் Audience ஆகவும் உபயோகிப்பது போல் மேலோட்டமான பார்வையில் தோன்றும் கதை, ஆண்மையில்லாதவனின் அதிருஷ்ட இரவையும் அதன் பின் அவன் அதிர்ஷ்டத்தை சோதிக்க விரும்பாததையும் கூறுகிறது. கூடவே இலக்கியக் கிண்டல்கள். ஏன் War and Peaceக்கு மேல் பக்கங்கள் யாரும் எழுதக்கூடாது? ஏனென்றால் நமக்கு நினைவாற்ல் குறைவு. கயல் நன்றாக மொழிபெயர்த்திருக்கிறார் இந்தக்கதையை.
அந்திநேரத்து சூரியன்- வில்லியம் ஃபாக்னர்- தமிழில் கார்குழலி:
Racism பற்றிய கதை. அவர்கள் உழைப்பைச் சுரண்டும் யாரும் அவர்களுக்கு பாதுகாப்பு தேவைப்படும் பொழுது உதவ மாட்டார்கள். நான்சி எப்படி உடலை விற்க ஆரம்பித்தாள் என்பது கதையில் சொல்லப்படவே இல்லை. கருப்பினப்பெண்ணின் உடல் மீது வெள்ளையன் உரிமை செலுத்திப் பின் சில்லறையை இறைத்துவிட்டுப் போயிருக்க வேண்டும். மூன்றுமுறை இருந்துவிட்டுப் பணம் கொடுக்காதது மட்டுமன்றி முகத்தில் உதையும் அதிகாரத்தை வெள்ளையனுக்குக் கொடுத்தது யார்?.இனம், நிறம், ஜாதி, மதம் இவற்றின் பெயரால் ஆதிக்கம் செலுத்துவது உலகமெங்கும் நடக்கும் சமாச்சாரம். Lucidly translated by Karkuzhali.