புத்தகத்தின் நுழைவாயிலிலேயே பங்களித்த ஓவியர்களின் புகைப்படத்துடன் அவர்கள் பற்றிய குறிப்பு அழகு.
சித்தாந்தன் கவிதைகள் மூன்றின் ஓரிரு வரிகள்:
” ஒரு முத்தத்தின் பிறகான
எம் கணங்கள் முழுவதும் பறவைகள் தீண்டாத கனிகளே நிறைந்திருந்தன”
” இப்போது பாருங்கள்
மரங்கள் வரைந்த பாதையில்
வரிசை பிசகாது செல்கின்றன எறும்புகள்”
” முத்தங்களால் நெய்கிறாய் போர்வையை
பெருமழை பெய்யத் தொடங்குகிறது
அறையினுள்”
நீலம் – றஷ்மி
தி.ஜாவின் தவம் கதையில் ஒரு இலட்சியத்திற்காக பல வருடங்கள் அயராத உழைப்பு வீண் என்று தெரியும். இந்தக் கதையும் ஒரு இலட்சியத்தைத் துரத்தி ஓடியவனின் கதை. கதைக்குள் கதையாக ஒரு காதல்தோல்விக்கதை. மாத்தையா கதாபாத்திரம் தெளிவான சித்தரிப்பு. மாத்தையாவின் காதல்கதை சொல்லும் பத்தியில் ஊர் குறித்த சித்திரமும் மனதில் நன்கு படிகிறது. நீலம் நல்லது தான், வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததே.
மலையாளக்கவிதைகள் -டி.பி.வினோத்- தமிழில் பத்மகுமார் பரமேஸ்வரன்:
“தென்றலில் கரைந்த
அழுகைகள்
வந்து தொடுகையில் தான்
மூங்கில் காட்டிலிருந்து
மொழியில்லாத
முனகல்கள் எழுவது”
ஊதாப்பூக்கள் – எஸ்.கிரிதரன்:
ஊதாப்பூக்கள் ஒரு Nostalgia. பரஸ்பரம் பிடித்திருந்தாலும் வாழ்வில் ஒன்றாக இணைய முடியாததற்கு காரணங்கள் ஆயிரம். ஐம்பது வயதில் அசை போடுவதற்கும் ஆயிரம் விசயங்கள்.
சிவவரதராஜன் கவிதைகள் :
” காலம் தலையில் குட்டிக்குட்டி
கற்றுத்தந்த கணக்குகள்
மீண்டும் மீண்டும் பிழைக்கின்றன எனக்கு
தீர்க்க முடியாச் சூத்திரங்களாகவே
மாறியிருக்கின்றது வாழ்வு”.
விஸ்வாமித்ரன் சிவக்குமாரின் மூன்று மலையாளத் திரைப்படங்கள் குறித்த கட்டுரை இந்தப் படங்களைத் தேடிப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது.
றின்னோஸாவின் குர்திஸ் மக்கள் பற்றிய கட்டுரை அவர்கள் வரலாற்றைப் பத்து நிமிடங்களில் அறியும் வாய்ப்பு. ஆர்வமுள்ளோர் மலைகளை விடவும் எமக்கு நண்பர்கள் இல்லை என்ற யமுனா ராஜேந்திரனின் நூலைப் படிக்கலாம். குர்திஸ் இலக்கியம் குறித்த நல்ல நூல்.
ஹீரோ குர்டா மூன்று கவிதைகள் – தமிழில்
தேவி அபிரா
” கண்ணாடியில் அம்மாவின் உடைந்த முகத்தைப் பார்க்கிறேன்
உதட்டுப்பூச்சுக் குமிழை எடுக்கிறேன்
மனிதர்களுடைய பொருட்களுக்கென்று
வாசமிருக்கிறது”
மோகனம் – அனோஜன் பாலகிருஷ்ணன் :
மோகனம் Pure LGBT story. தன் பிள்ளைகள் Gay என்பதை எந்தப் பெற்றோரும் ஏற்றுக் கொள்வது கடினம். ஆனால் இந்தக் கதையில் கூடுதல் சிக்கல் இருக்கிறது. இங்கிலாந்து மருமகளுக்குப் புரிந்து கொள்ளும் Bandwidth இருப்பதும் உண்மையே. ஆனால் கடவுள்கள் செய்ததை நான் செய்கிறேன் என்றால் இங்கே ஒத்துக் கொள்வார்களா? பரமேஸ்வரியின் மௌனத்தைக் கடைசிவரை கொண்டு போனது நல்ல யுத்தி.
லேகா ராமசுப்பிரமணியன் தனக்கென ஒரு தனிப்பட்ட பாணியை திரை விமர்சனத்திற்கு வைத்திருக்கிறார். இம்முறை எரிக் ரோமரின்
Green Ray குறித்து.
சோலைக்கிளி கவிதைகள்:
” பல்லுவிளக்க தென்னைமரத்தை
முறுக்கும் காற்று ஆபத்தானது
கடற்கறைக்கு வந்திருக்கும் அழகிகளே
நான் வரைந்த சித்திரத்திற்கு சாயம்தீட்ட
தூரிகையாக உங்களைத் தூக்கலாம்”
Alexandro Zambraவின் நாவல்கள் குறித்த
டிசே தமிழனின் கட்டுரை நல்லதொரு அறிமுகம்.
கீதப்பீரியனின் இதா இவிட வரே திரைக்கதைச் சுருக்கம், சிறுவயதில் புத்தகமாகப் படித்த திரைக்கதை அனுபவத்தை நினவுக்குக் கொண்டுவந்தது.
சுத்தசாவேரி – டணிஸ்கரன்:
ஒரு இனமே தவறு என்பது ஹிட்லர் வாதம். ஏமாற்றுபவர்கள் எல்லா இனங்களிலும், மதங்களிலும் இருக்கிறார்கள். முஸ்லீம் பெண்கள் இந்துக்களை மணக்கும் போது பெயரை மாற்றுவது, மதம் மாறுவது பெரும்பாலும் ஆண்களுக்கே நிகழ்கிறது. Nargis, Najma Heptullah, Suzanne Khan என்று எத்தனையோ பெண்கள் அதே பெயரை வைத்திருக்கிறார்கள். Gauri khan போல வெகுசிலர் இந்துப்பெயரை மாற்றாமல் இருந்திருக்கிறார்கள். இரு மதத்தினர் மணம் செய்கையில் இருவரும் அவரவர் மதத்தைக் கைவிடுவதே சரியான தீர்வாக இருக்க முடியும்.
ஊடகம் ஒரு அபின் – க.குணராசாவின் ஊடகத்துறை அனுபவங்கள் கட்டுரை வாசிக்க சுவாரசியமானது. பல அரசியல் தலைவர்கள் செய்யும் Gimmic அது, ஒரு வார்த்தை தமிழில் வணக்கம் என்று சொல்வது போல.
உமா வரதராஜனின் புத்தக மதிப்புரை தக் ஷிலா ஸ்வர்ணமாலியின் அந்திமகாலத்து நேசம். ஆரம்பத்தைப் படித்து எனக்குத் தோன்றியதை அவரே கேள்வியாகவும் கேட்டு விட்டார். அந்தத் தொகுப்பில் எனக்கு மிகவும் பிடித்த கதை ஒரே திடல். தொடர்ந்து வாசிக்க வேண்டிய எழுத்தாளர் இவர்.
பா.சஜிந்ரன் அருந்ததிராயின் நேர்காணலின் ஒரு பகுதியைத் தமிழில் தந்திருக்கிறார்.
வியூகம் இலக்கிய இதழ் கிடைக்கும் இடங்கள்.
யாழ்ப்பாணத்தில் :
திரு.அ .யேசுராசா,
இல.1, ஓடைக்கரை வீதி , குருநகர், யாழ்ப்பாணம்
தொலைபேசி இலக்கங்கள் 0777678257/ 021 2224532
மட்டக்களப்பில் :
பேராசிரியர் செ.யோகராசா,
பெய்லி குறுக்குத் தெரு
செல்பேசி 0772343896
கல்முனையில் :
உமா வரதராஜன்,
பிரதான வீதி ,பாண்டிருப்பு -1
செல்பேசி 0772852572
சிவ வரதராஜன்,
வைத்தியசாலை ஒழுங்கை, கல்முனை
செல்பேசி 0773484852
சோலைக்கிளி,
பள்ளிவாசல் வீதி, கல்முனை -04
செல்பேசி 0771607056
காரைதீவில்
கே. டணிஸ்கரன்,
பிரதான வீதி, காரைதீவு -01
செல்பேசி 0778511890
சம்மாந்துறையில் :
பேராசிரியர் .றமீஸ் அப்துல்லாஹ்
செல்பேசி 0774805646
மன்சூர் ஏ காதர்,
குலிஸ்தான் ,54, அலி வன்னியார் வீதி
செல்பேசி 0777561638