ரச்செல் கனடாவில் பிறந்தவர். அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் வளர்ந்தவர். Creative writing பயிற்றுவிப்பவராகப் பணியாற்றியவர். மூன்று சுயசரிதை நூல்கள் எழுதி கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானவர். இவருடைய Outline Trilogy
மிகவும் பேசப்பட்டது. பத்து நாவல்கள் எழுதியிருக்கும் இவரது இந்த நாவல் 2021 மே மாதத்தில் வெளியாகி புக்கர் நீண்ட பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

Mabel Dodge Luhan தன்னுடைய சுயசரிதையில் D H Lawrenceஐ மெக்சிகோவில் இவருடைய இடத்தில் தங்க வைத்ததன் பிரதிபலனாக, D H Lawrence அவரை அழித்துவிடுவேன் என்று மிரட்டிய உண்மைநிகழ்வைத் தூண்டுதலாக வைத்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. அதில் புகழ்பெற்ற எழுத்தாளர், இதில் ஓவியர்.

பெயரிடப்படாத அல்லது M என்ற முதல் எழுத்தைக் கொண்ட எழுத்தாளர் பாரிஸில் ஒரு ஓவியக் கண்காட்சியைப் பார்த்து, அந்த ஓவியரின் ஓவியங்களில் தனக்கு சுதந்திர உணர்ச்சி பொங்குவதாய் மயங்கி, அவரை தன்னுடைய பண்ணைக்கு விருந்தாளியாக அழைப்பதில் எல்லாமே ஆரம்பிக்கிறது.

கலைஞர்கள் Cynicஆக Egoist ஆக Eccentric ஆக இருப்பதை அவர்களது ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தமிழிலும் கூட இது போல் நிறையப் பார்த்திருக்கிறோம். தூரத்துப் பச்சை கண்ணுக்கு குளிர்ச்சி, ஆனால் அவர்களே அருகில் நெருங்கி தொடர்ந்து தொந்தரவு கொடுக்கையில் இன்னொரு ஐந்துரூபாயும் அழுக்குச்சட்டைக்காரரும் கதையாகி விடுகிறது.

சாத்தானை சந்திக்க நேர்ந்தால் ஏன்ன செய்வீர்கள்? கவனிக்காதது போல் நகர முயற்சிப்பீர்கள் தானே! சாத்தானுடன் நட்பு செய்வது ஒருவேளை உங்களுக்கு வெளியில் சொல்லிக் கொள்ள கௌரவமாக இருக்கும் என்றால்? ஒருவேளை சாத்தான் உலகத்தில் இருக்கும் எல்லாப் பெண்களையும் விட்டுவிட்டு உங்களைக் காதலிக்கக்கூடிய சாத்தியக்கூறு இருக்குமென்றால்?

கதைசொல்லியின் இருபத்தோரு வயது மகள் ஜஸ்டின், கதைசொல்லியிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவள். கதைசொல்லி ஓரிடத்தில் சொல்வது போல், சிறுவயதில் இருந்தே பயம் என்பதை அறியாதவள், தீர்க்கமான முடிவு எடுப்பவள். மாறுபட்ட குணாதிசயங்களால் தாயும், மகளும் ஒருவரில் இருந்து மற்றவர் அந்நியராக உணர்கிறார்கள்.

முதலில் இருந்தே தன்மையில் Jeffers என்பவரிடம் Monologue ஆகச் சொல்லப்படும் கதை இது. முழுநாவலிலும் உரையாடலே கிடையாது. கதைசொல்லிக்குப் பெயர் கிடையாது அவளது கோணத்திலேயே முழுதும் நகரும் கதை. அவளது Obsession, சரிவுகள், தோல்விகள், பயங்கள், Infatuation என்று எல்லாமே வெளிவருகின்றன.

இன்று எழுதிக் கொண்டிருக்கும் Canadian writersல் முக்கியமானவர் Rachel Cusk ரச்செல்லின் மொழிநடை வாசகரை விடாது பிடித்துக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. மனித மனம் விசித்திரமானது, எல்லாவற்றையும் இழந்து பின் இழந்ததைவிட அதிகம் பெற்று வாழும் வாழ்க்கையிலும் திருப்தி காணாது அலைக்கழியத்தான் அதற்குப் பிடித்திருக்கிறது. எது தேவை எனத்தோன்றுகிறதோ கடைசியில் அது தேவையில்லை. எது தேவையில்லை என்று தோன்றுகிறதோ அது தேவை. நம் வாழ்க்கையின் போதாமைகள் நமது கற்பனைகளுக்கும் நிஜங்களுக்குமுண்டான இடைவெளியினால் ஏற்படும் ஏமாற்றத்தின் குழந்தைகள். உருவகங்கள், உவமானங்கள் கலந்த இவரது எழுத்து காலமயக்கத்தை ஏற்படுத்தும். கதாபாத்திரங்கள் இருப்பதை விட்டுப் பறப்பதைப் பிடிக்க முயல்வது ரச்செலின் கதைகளில் அடிக்கடி நடக்கும் நிகழ்வு. நூற்றிஇருபது பக்கங்களுக்கும் கீழ், உறவுச்சிக்கல்களை அழுத்தமாகச் சொல்லும் நல்ல நாவல் இது.

bookerlonglist2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s