காலச்சுவடு குறுங்கதைகளுக்குள் நுழைவதற்கு முன் Lydia Davisன் இந்தக் கதையைப் பார்க்கலாம்:
ON THE TRAIN
We are united, he and I, though strangers, against the two women in front of us talking so steadily and audibly across the aisle to each other. Bad manners.
Later in the journey I look over at him (across the aisle) and he is picking his nose. As for me, I am dripping tomato from my sandwich on to my newspaper. Bad habits.
I would not report this if I were the one picking my nose.
I look again and he is still at it.
As for the women, they are now sitting together side by side and quietly reading, clean and tidy, one a magazine, one a book. Blameless.
இந்தக்கதையில் லிடியா ஒரு Momentஐ Capture செய்திருக்கிறார். அவர் சொல்வதெல்லாம் தன்மையில் ஒரு judgemental character குறித்து. இங்கே வார்த்தைகள் எப்படி பிறருக்கு என்றால் Bad manners தனக்கு என்றால் Bad habits என்று வசதிக்கேற்ப மாறுகிறது. பொது இடத்தில் மூக்கு நோண்டுவது Bad manners இல்லையா. இவளுக்கு அவன் மேல் Crushஒ என்னவோ தொடர்ந்து நோண்டினாலும் எதுவும் சொல்ல விரும்பவில்லை. கடைசியாக அமைதியான பிறகும் அந்தப் பெண்களை இவள் விடவில்லை. Blameless!
எந்த மொழிநடையில் எந்த வார்த்தைகளில் எழுதுகிறோம் என்பதே Flash fiction. அங்கே பெரும்பாலும் கதை சொல்லப்படுவதில்லை. ஒரு உணர்வு வாசிப்பவருக்குக் கடத்தப்படுகிறது. அதற்காக வார்த்தைகளைச் செதுக்க வேண்டியதாகிறது. அதனாலேயே Flash Fiction எழுதுவது என்பது கடினமான ஒன்றாகிறது.
சுரேஷ்குமார இந்திரஜித்;
பால் டம்ளர்- சுஜாதாவின் முதல்மனைவி கதையில் பேசமுடியாது புனிதவல்லி எங்கே என எழுதுவான். இதில் பேசமுடிந்ததால் சொல்லி விடுகிறான்.
பெண்ணியப்புலி- காட்சியும் கற்பனையும் கலந்த கதை.
மேஜிக்- ஆதவனின் ஒலி கதையில் விசில் சத்தம் திடீரென நின்றுவிடும். மேஜிக். அதே தான் இந்தக்கதையிலும்.
எஸ்.ராமகிருஷ்ணன்:
பதினேழாவது ஆள்- கல்யாணி அக்காவின் தற்கொலைக்குக் காரணமானவனே மீண்டும் வந்து அவளைக் கூட்டிச் சென்றிருக்க வேண்டும்.
பஷீரின் திருடன் – உள்ளம் கவர் கள்வன்.
வாளும் மலரும் – சீசரின் மனைவி
சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள்.
குறுங்கதைகள்- யுவன் சந்திரசேகர்:
முதல்கதை – அபிமன்யு மரணம். அர்ச்சுனன் கலக்கம். தோற்ற மயக்கம்.
இரண்டாம் கதை- ஒரு ஒடிய எழுத்தாளரும், ஒரு ஹிந்துஸ்தானி கலைஞரும், ஒரு மரநிற வண்ணத்துப்பூச்சியும்.
மூன்றாம் கதை- இருமைகள் வழியாக இல்லை அனுபவங்கள் வழியாக மனித வாழ்வு தன்னை நிறுவிக்கொள்கிறது.
பா.ராகவன்;
இருளற்றது- Whodunit story.
குறுஞ்செய்தி- ஒரு காலை வணக்கமும் ஒரு தற்கொலையும்.
புத்தக விமர்சனம்- கற்றுத் தெரிவதில்லை மன்மதக்கலை.
கே.என்.செந்தில்:
சிதைவு- விளையாட்டின் வெற்றி தோல்வியை வாழ்க்கையின் வெற்றி தோல்வியாக நினைப்பது பலரிடமும் இருக்கிறது.
காத்திருத்தல்- பிறவி தாண்டிய காத்திருப்பு.
ஈரம்- நாய்கள் உலகம் மனிதர்களின் உலகத்தை விடத்தேவலை.
போகன் சங்கர்;
அசனம்- நவீன பொன்னகரம்.
ஒளிவலை- Beautifu Short story. வயோதிகத்தில் வாலிபம் மீண்டும் வரும் என்று தேடுதல் போல.
வாடாமல்லி- இரண்டு வாடாமல்லி புடவைக்காரிகள். வாடாமல்லி என்றால் சோகமும் சேர்ந்துவிடுமா?
பெருந்தேவி:
மால்- ஒருவகையில் Sci fi கதை. Klara and the Sun கதையும் கிட்டத்தட்ட இந்தப் பின்னணியில்.
படமானவர்கள்- பாசமலரில் சிவாஜி முதலிரவு அறையில் சாவித்திரி படத்தைக் கவிழ்த்து வைப்பார். உடல் என்பது மூளை சொல்லும் விசயங்களை பதில்பேசாது செய்யும் ஒரு அடிமை. ஆனா அந்தப் பரணில் ஏற்றுவதில் பெருந்தேவி உள்ளே நுழைகிறார்.
வெளியாள்- ஆடலுடன் பாடலைக் கேட்டு…..
ரசிப்பது என்பது இதுதானா!