அமெரிக்காவின் Maineல் பிறந்தவர். Horror என்றவுடன் உலகில் எல்லோரும் முதலில் சொல்லும் பெயர் இவருடையது. நாற்பது வருடங்களில் எண்பது நூல்கள் வரை இவர் எழுதியிருக்கக்கூடும். இவருடைய நூல்கள் 300ல் இருந்து 350 மில்லியன் பிரதிகள் விற்றிருக்கக்கூடும் என Wikipedia குறிப்பு சொல்கிறது. ஒரு பேட்டியில் வருடத்திற்குக் குறைந்தபட்சம் நூறு நூல்களேனும் வாசிப்பதாகச் சொல்லியிருந்தார். அது தான் இவ்வளவு எழுதியும் இவர் எழுத்தின் நீர்மை மாறாது காத்துக் கொண்டிருக்கும் என்று தோன்றுகிறது. இந்த நாவல் ஆகஸ்ட் 3, 2021ல் வெளியாகியது.

Billy ஒரு வாடகைக் கொலையாளி. பதினேழு முறை நடத்திய Assignmentகளிலுமே எந்த பிரச்சனையிலும் மாட்டிக்கொள்ளாமல் ஓய்வும் பெற்றாயிற்று. Noir என்பது ஒரு Genre என்றால் கடைசியாக ஒருமுறை என்பது Subgenre. இரண்டு மில்லியன்களுக்காக கடைசியாக ஒருமுறை. Billயின் கொள்கை, கொலைசெய்யப்படுபவர் மோசமான ஆளாக இருக்கவேண்டும், நல்ல ஆட்களைக் கொல்வதில்லை. இந்தமுறை கொலைசெய்ய Billyக்கு கொடுக்கப்பட்ட Target இன்னொரு வாடகைக் கொலையாளி.
பதினைந்து வயது பள்ளிச் சிறுவனைக் கொன்றவன். ஆகவே மோசமான ஆள். Hitting the hitter. ஆனால் ஆரம்ப அறிகுறிகளே இது முந்தைய வேலைகளைப் போல் இல்லை என்பதற்கான எச்சரிக்கைகளை விடுக்கின்றன. இன்னொரு விசயத்தையும் இப்போதே தெரிந்து கொள்வோம். Las Vegas death penalty இருக்கும் State. அகப்பட்டுக் கொண்டால் First degree murderக்கு அதுதான் கிடைக்கும்!

வேறு எந்த எழுத்தாளரையும் விட அதிகமாக எழுத்தாளர்களை பிரதான கதாபாத்திரமாக்கியது கிங் ஆகத்தான் இருக்க முடியும். Jack Torrance போல பல நாவல்களில் வரும் எழுத்தாளர் கதாபாத்திரங்களும் உண்டு. அவர்களை கதாபாத்திரமாக வைப்பதில் King வாசகர்களுக்குச் சொல்ல வேண்டியதை கதையோடு சொல்வதோடு அவரது Tone கதை நடுவே வராமல் பார்த்துக் கொள்ள முடிகிறது. இந்த நாவலில் எழுத்தாளருக்கு ஒரு நண்பர் சொல்கிறார் “நாவலில் Sex சேர்த்துக்கோ, புத்தகம் நன்றாக விற்கும்”.

கதைக்குள் கதை என்பது பல நாவல்களில் வந்தது. கிங் இதில் புதிய யுத்தியைக் கையாள்கிறார். வாடகைக் கொலையாளி ஒரு எழுத்தாளர் என்ற போர்வையில் வேறு பெயரில் தங்கிக் கொள்கிறான். காத்திருந்து பொழுதைக் கழிப்பதற்கு உண்மையிலேயே கதை எழுதலாம் என்று எழுதுவது அவனுடைய கதை.

ஒரு சிறந்த எழுத்தாளரால் கதை எப்படி எழுத வேண்டும் என்று சிலர் பேசிக் கொண்டிருக்கையில் எதுவும் தெரியாதது போல கேட்டுக்கொண்டிருக்க முடியும் என்று நம்புகிறீர்களா? ஆனால் அதில் குறுக்கிடுவது ஆபத்தில்லாதது. ஒரு Sniper வாடகைக் கொலையாளியாக வேலை பார்க்கும் போது பீச்சில் சிறுவன் சொன்னான் என்று பொம்மைத் துப்பாக்கியை வைத்துப் பொம்மைப் பறவைகளைச் சுடுவது என்பது ஆபத்தானது மட்டுமல்ல முட்டாள்தனமானதும் கூட.

கிங் தனது வழக்கமான Horror genreல் இருந்து Crimeக்கு மாறி இருக்கிறார் இந்த நாவலில். வழக்கம் போல் Research செய்து எழுதப்பட்ட நூல் இது. இந்த நாவலில் Zolaவையும் Dickensஐயும் பற்றிய பல குறிப்புகள் வருகின்றன. கிங் அநேகமாக எல்லா Classics writerகளையும் படித்திருக்கக்கூடும். ஆனால் தனக்கு Horrorதான் சரியாக வரும்என்றுதேர்ந்தெடுத்திருக்கக்கூடும். எதுவாயினும் King is one of the greatest story tellers alive. இந்த நூலை கிங்கின் the best in years என்று Guardian சொல்கிறது. எனக்கென்னவோ ஒவ்வொரு கிங் நூலுமே விருந்தாகத் தான் தோன்றுகிறது.

English

Leave a comment