அமெரிக்காவைச் சேர்ந்த எழுத்தாளரான Karen ஜர்னலிசத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். 2017ல் வெளியான இவருடைய இந்த முதல்நாவல் 160வாரங்களுக்கு மேல்
நியூயார்க் டைம்ஸ் விற்பனையில் முதலிடம்
வகிக்கும் பட்டியலில் இடம் பெற்றது. இதன் பிறகு வெளிவந்த மூன்று நாவல்களுமே பெரும் வரவேற்பைப் பெற்றன. இவருடைய ஐந்தாவது நாவல் டிசம்பர் 2021ல் எதிர்பார்க்கப்படுகின்றது.

பள்ளியில் வகுப்பறைக்கு அலைபேசியைக் கொண்டு வரக்கூடாது என்ற கட்டுப்பாடு தெளிவாக இருந்தாலும் ஐந்து மாணவர்களின் ( இரண்டு பெண்கள், மூன்று ஆண்கள்) பையில் அலைபேசி இருந்ததால் அவர்கள் வகுப்பறையில் இருத்தி வைக்கப் படுகிறார்கள். ஐவருமே அலைபேசி எப்படி அவர்கள் பையில் வந்ததென்பது தெரியாது என்கிறார்கள். அவர்களில் Simon எனும் மாணவன் ஒரு gossip appஐ நடத்தி வருபவன். அவனுக்கு வேர்கடலை எண்ணெய் ஒவ்வாமை. தாகம் என்று பைப்பில் நீர் பிடித்துக்குடித்து சில நிமிடங்களில் கண்செருகி மயங்கிவிடுகிறான். மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற சிறிதுநேரத்தில் இறந்து விடுகிறான். அவன் குடித்த நீரில் வேர்க்கடலை எண்ணெய் கலந்திருக்கிறது. எனவே இது விபத்தில்லை.அவன் நடத்திய வதந்திக்குழு அவன் மரணத்திற்குக் காரணமா? பள்ளியின் கவனக்குறைவுகாரணமா? ஆசிரியர் இருத்திவைத்தது காரணமா?

Simon அனுப்புவதற்கு இருந்த கடைசி செய்தியில், ஒரு பெண், ஆசிரியரின் கம்ப்யூட்டரில் இருந்து கேள்வித்தாளை காப்பி அடித்ததும், ஒரு பெண் தன்னுடைய Boyfriendன் சிநேகிதனுடன் ஒரிரவு தங்கியதும், ஒருவன் போதைமருந்து விற்று மாட்டிக்கொண்டு Probationல் இருக்கும் போதே மீண்டும் விற்பதையும், ஒருவன் baseball விளையாட்டில் ஏற்பட்ட திடீர் முன்னேற்றத்திற்கு ஊக்கமருந்து காரணம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது. இந்த நால்வரும் தான் Simonஉடன் கடைசியாக இருத்தி வைக்கப்பட்டவர்கள். Weird coincidence. இவர்களில் யார் அந்த செய்தி வெளி வருவதற்கு முன் அவன் கதையை முடிக்க நினைத்தது? இல்லை எல்லோருமே சேர்ந்தா!

Perfect YA fiction நாவல் இது. பதின்மவயதினரே முழுக்க கதாபாத்திரங்களாக வரும் பொழுது, அவர்கள் உலகம், பேச்சு, பொழுதுபோக்குகள், ஏமாற்றங்கள் எல்லாவற்றையும் குறித்து நன்கு தெரிந்தவர் எழுதிய நாவல். நான்குபேருமே கதைசொல்லியாக மாறிமாறி வருவதால், அவரவர் கோணத்தில் கதை நகர்கிறது. இரகசியங்கள் ஒவ்வொன்றாய் வெளிவரவர
நாவலின் ஓட்டம் அதிகரிக்கிறது. கடைசிவரை வாசகர்களை Guessingல் வைத்திருப்பது கூடுதல்பலம் இந்த நாவலுக்கு. ஒரு திரில்லருக்கு வேண்டிய எல்லா ingredientsம் சரியான விகிதத்தில் சேர்ந்த நாவல்.

English

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s