ஆன்டன் செகாவ்:

நவீன சிறுகதைக்கான பாதையை உருவாக்கித் தந்தவர் செகாவ். நூற்றாண்டுகள் கடந்தும் கதைவடிவம், மொழிநேர்த்தி, சித்தரிப்பு வடிவம் என சிறுகதையின் ஒவ்வொரு இலக்கணத்திலும்
செகாவின் அழுத்தமான முத்திரை மெருகிழக்காமல் இருப்பதே அவரது மேதைமைக்கு சான்று.

எம்.கோபாலகிருஷ்ணன் :

கோயம்பத்தூரில் வசிப்பவர். இவரது நான்கு நாவல்கள், இரண்டு குறுநாவல்கள், மூன்று சிறுகதைத் தொகுப்புகள், மூன்று கட்டுரைத் தொகுப்புகள், ஐந்து மொழிபெயர்ப்பு நூல்கள் (இந்தியிலிருந்தும், ஆங்கிலத்திலிருந்தும்) ஏற்கனவே வெளிவந்தவை.

செகாவின் கதைகள் பெரும்பாலும் அவர் கண் முன் பார்த்த வாழ்க்கையினின்று வந்தவை. அங்கங்கே காணும் கவிதை கலந்த நடையும்,அழகியலும் தவிர்த்துப் பார்த்தால் எளிமையான கதைகள். 1894ல் எழுதப்பட்ட முதல் கதை, வராத பணத்துக்கு நட்டக்கணக்கு பார்த்தவன், மனைவியை ஒரு மனுஷியாக நடத்தாதவன், எல்லோரது வெறுப்பையும் சம்பாதித்தவன் கடைசியில் உலகத்திற்கு உன்னதமான ஒன்றை விட்டுச் செல்வது ஒரு அதிசயம். யாரிடமிருந்து என்ன கிடைக்கும் என்பது தான் வாழ்க்கையில் எப்போதும் முரண்பாடாக இருக்கிறது. இந்த முரண்பாடுகள் செகாவின் கதைகளில் அடிக்கடி வரும் விசயம்.

இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளில் சுரண்டல் மற்றும் உபயோகித்துக் கொள்ளல் அடிக்கடி நிகழ்கிறது. பதினெட்டு வயதுப் பெண்ணை மணந்த ஐம்பத்திரண்டு வயது ஆண் அவளை முழுமையாக, மருத்துவம் படிக்கும் மாணவன் வழியில்லாத பெண்ணின் உழைப்பையும், உடலையும், பதிமூன்று வயதேயான வேலைக்காரி வர்காவின் உழைப்பை வீட்டுக்காரர்கள் என்று பெண்களை Exploit செய்வது என்பதும் இவர் கதைகளில் அடிக்கடி வரும் அம்சம்.
வர்க்கபேதங்களும் இவர் கதையில் அடிக்கடி காணப்படும் விசயம். கடல்சிப்பி கதை அதற்கு நல்லதொரு உதாரணம். ஏழை சிறுவனிடம் பணக்காரர்கள் நடந்து கொள்ளும் விதம்!

இவரது கதைமாந்தர் பெரும்பாலும் அசாதாரணர்கள் இல்லை. கதைகளில் அசாதாரணமாக எதுவும் நடப்பதுமில்லை. பின் எவ்வாறு செகாவின் கதைகள் இன்றும் பேசப்படுகின்றன? மாஷென்காவின் கதையை மத்வேய் சொல்கிறான். அவன் சொல்வதால் அவனுக்குச் சாதகமாக சொல்கிறான். அவன் கூட இருப்பவரும் அவனுக்கு ஒத்துப் பாடுகிறார்கள். ஆனால் நல்ல வாசகருக்குப் புரியும் கதை வேறு. இது இவருடைய பல கதைகளில் நடக்கிறது. எளிமையாய் போகும் கதையில் இன்னொரு கதை ஒளிந்திருக்கிறது. அதனால் தான் செகாவ் சிறுகதை முன்னோடியாகிறார். ஒருவேளை பாரதி எழுதிய கதையே தமிழின் முதல் சிறுகதையாக இருந்தாலும் கூட அதுவும் செகாவ் மரணத்திற்குப் பின் 1905ல் தான் வெளியாகிறது.

பெண்களை ஒடுக்குவதை செகாவ் Empathize செய்த போதிலும் அவருடைய பல கதைகளில், திரும்பப் பழிவாங்கும் அன்யா, வார்வரா போன்ற பெண் கதாபாத்திரங்களும் இவருடைய பல கதைகளில் வருவார்கள். இத்தொகுப்பில் இல்லாத Darlings மற்றும் Grasshopper, இரண்டு கதைகளிலும் ஓல்கா என்ற ஒரே பெயரில் வரும் வேறு கதாபாத்திரங்கள் போல மற்ற ருஷ்ய நாலாசிரியர்களின் கனமான பெண்கதாபாத்திரங்கள் போல் இவர் சிறுகதைகளிலும் உண்டு.

மதம் குறித்தல்ல திருச்சபை குறித்த மெல்லிய விமர்சனம் செகாவின் சில கதைகளில் வந்து போகும். நீத்தார் பிராத்தனையில் உண்மையில் யாருக்கு redemption வழங்க வேண்டும்? அதே போல் ஈஸ்டர் இரவு திருச்சபை புதியன எவற்றையும் ஏற்றுக்கொள்ளாது Rigid ஆக இருப்பதையும், உண்மையில் தெரிந்து ஸ்தோத்திரம் சொல்பவர் ஆலயம் வரமுடியாததையும், உள்ளிருப்பவர்கள் கடனுக்கு மாரடிப்பதையும் சொல்கிறது. திருச்சபை பெற்றஅன்னையையும் விலகி நின்று பார்க்கச் செய்வதைச் சொல்லும் ஆயர் செகாவின் மிகச் சிறந்த கதைகளில் ஒன்று. தத்துவார்த்தமாக, மதரீதியாக, இலக்கியபூர்வமாக, உணர்வுரீதியாக ஒவ்வொரு கோணத்திலும் இந்தக் கதையை அணுகமுடியும்.

தொகுப்பில் எல்லாமே இதுவரை வெளிவராத கதைகள் என்று முன்னட்டைக் குறிப்பு சொல்கிறது. Bishop கதை இதுவரை தமிழில் வராதது ஆச்சரியமாக இருக்கிறது. கோபாலகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு எளிதாகப் படிக்கும் விதத்தில் நேரடித் தமிழ்வார்த்தைகளை உபயோகித்து வந்திருக்கிறது. நூல்வனம் பதிப்பு கையில் ஏந்துகையில் காதலியைத் தொடுமின்பம் அளிக்கும் அளவு அழகான வடிவமைப்பு.
செகாவை இடைவெளிவிட்டு காலத்திற்கும் படித்துக் கொண்டே இருக்கலாம்

பிரதிக்கு:

நூல்வனம் 91765 49991
முதல்பதிப்பு ஜூலை 2021
விலை ரூ.230.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s