என்ரிக் லின்னுடன் ஒரு சந்திப்பு – ரொபெர்த்தோ பொலான்யோ- தமிழில் கார்குழலி:
பொலான்யோவின் மீண்டும் இன்னொரு உலகத்தை உருவாக்கும் கதை. இதில் கனவு உலகம். அதனால் தான் லின்னின் ஏழாவது மாடி வீடு போல் ஒரு Surreal காட்சிகளை உருவாக்க முடிகிறது. லின்னுடனான கடிதப் போக்குவரத்து நிஜம், அவர் இவருக்கு முன் இறந்தது நிஜம், அவர் இவரை நம்பிக்கையூட்டும் எழுத்தாளர் என்று குறிப்பிட்டதும் நிஜம், கதை மட்டுமே கற்பனை. ஆரம்பத்தில் படிக்கையில் தமிழ் இலக்கிய உலகத்தைப் பற்றித் தானோ என்று ஒரு தடவை சரிபார்த்துக்கொள்ள நேர்ந்தது. பொலான்யோ வரிகளை எவ்வாறு கட்டமைத்திருக்கிறார் பாருங்கள். கார்குழலி அதை கொஞ்சமும் சிதைக்காமல் தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார். சிறந்த மொழிபெயர்ப்பு.
https://vanemmagazine.com/%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a8/
ஸ்படிகம் – மயிலன் ஜி சின்னப்பன்:
அன்றாட வாழ்க்கையில் இருந்தே ஆயிரக் கணக்கில் கதைகளை எடுக்கலாம் என்பதற்கு இந்தக்கதை ஒரு சிறந்த உதாரணம். ஒரு சராசரி ஆணின் மனத்திற்குள் புகுந்து கழிவுகளைத் தூக்கி வெளியே போடுகிறார் மயிலன். அதே போல் பேச வேண்டிய நேரத்தில் கவனமாகத் தவிர்த்துவிட்டுப் பின் அதைப்பற்றியே பேசுவதும் பெருவாரியான ஆண்கள் செய்வது. வீரமணி சொல்லும் Solutionக்கு பதிலே இல்லை. நிறைய ஆண்கள் இப்படித்தான். குற்றஉணர்வு என்ற திரையின் பின் மறைந்திருக்கும் மற்ற உணர்வைப் பாருங்கள். செதுக்கியது போல் ஒரு மொழிநடை, நான் அடித்து ஆடுகிறேன் பார் என்று சுற்றுமுற்றும் பார்க்காது விளையாட்டைத் தொடரும் கதைசொல்லல்.
Stunningly beautiful story. இந்த நாள் இனிதாகியது.
எமிலிக்காக ஒரு ரோஜா – வில்லியம் ஃபாக்னர் – தமிழில் ஆனந்த் ஸ்ரீனிவாசன்:
Faulknerன் புகழ்பெற்ற கதைகளில் ஒன்று. ஏற்கனவே தமிழில் படித்த நினைவு இருக்கிறது. நெருங்கியவர் யாரேனும் இறந்தால் சிலகாலம் நம்மிடையே அவர் இல்லை என்பதை நம்மால் நம்ப முடிவதில்லை. மரணத்தை மறுத்தல் கதையில் மூன்றுமுறை நடக்கிறது. அது போலவே தன்னைப் பெரிதாகக் கருதிக் கொண்டு எல்லோரிடமிருந்தும் தனிமைப் படுத்திக்கொள்வது. ஆனாலும் எமிலியின் வாழ்வு பரிதாபமானது. Faulkner கூட அதனாலேயே அவளுக்கு ஒரு ரோஜாவைப் பரிசளிக்க எண்ணியிருக்கலாம். நல்ல மொழிபெயர்ப்பு.
https://vanemmagazine.com/%e0%ae%8e%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%b0%e0%af%8b%e0%ae%9c%e0%ae%be-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/
நட்சத்திரம் – ஹெச். ஜி.வெல்ஸ் தமிழில் பிரவீண் பஃறுளி:
Doomsday story. 1897ல் எழுதப்பட்ட ஒரு Sci fi story உண்மையாவதற்கு இன்று கூட இல்லை நூறுவருடம் கழித்துக்கூட சாத்தியக்கூறுகள் இருக்கிறது என்பதே இந்தக் கதையை சாகாவரம் பெற்ற கதையாக்கி இருக்கும். கணிதம், அறிவியல், ஆன்மீகம் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டால் என்னவாகும்! Time Machine, Invisible Man போன்ற கதைகளை எழுதியவர் H G Wells. இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் கதை நடப்பில் நடக்கிறது. பெரும்பாலான Sci fi கதைகள் போல் ” வருடம் 2897………” என்று ஆரம்பிக்கவில்லை. நல்ல மொழிபெயர்ப்பு.