மேரி கனடாவின் Ontarioவில் சிறிய வேளாண்மை சமூகத்தில் 1946ல் பிறந்து வளர்ந்தவர். இவருடைய முந்தைய மூன்று நாவல்களுமே பலத்த வரவேற்பைப் பெற்றன. The other Side of the Bridge என்ற மற்றொரு நாவலின் மூலம் ஏற்கனவே புக்கரின் நீண்ட பட்டியலில் இடம் பெற்றவர் இவர். இது இரண்டாவது முறை.

கிளாரா எட்டுவயதாகப் போகும் சிறுமி. அவளுடைய அக்கா Rose அம்மாவிடம் சண்டையிட்டு, வீட்டைவிட்டு வெளியேறி இரண்டு வாரங்கள் ஆகப்போகிறது. அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று கூட தெரியவில்லை. அவளது பெற்றோரும் அவளிடம் உண்மையைச் சொல்வதில்லை.
எலிஸபெத் தன்னுடைய எழுபது வயதில் இருதயநோயுடன் கடைசிநாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். அவர் முப்பது வருடங்களுக்கு முன் செய்த ஒரு குற்றத்தையும் மரணிப்பதற்குள் சரிசெய்தாக வேண்டும். லியாம் குழந்தையில் இருந்தே Loner. நண்பர்கள் கிடையாது. எதிலும் ஈடுபாடு கிடையாது. இப்போது அவன் மணவாழ்க்கையும் முடிவுக்கு வரப்போகிறது. வேலையையும் ராஜினாமா செய்தாகிவிட்டது. இவர்கள் மூவரின் தனிக்கதைகள் எப்படி ஒரே கதையாகின்றது என்பதே நாவல்.

ஆரம்பத்தில் இருந்தே திரில்லரைப் போல் நகரும் நாவல், உண்மையில் மூவரது அகஉணர்வுகளின் அடியாழத்திற்குச் சென்று வருகிறது. ஒத்துவராத துணையுடனும் அவள் பிரியலாம் என்று சொல்லும்வரை அமைதியாக இருப்பவனின் பின்னணி குழந்தைப் பருவத்தில் இருந்தே சொல்லப்படுகிறது. குழந்தை இல்லாத பெண், பக்கத்துவீட்டுக் குழந்தையிடம் காட்டும் அன்பு எவ்வளவு தூரத்திற்குச் செல்லும்! ஒருநாளும் பெற்றவர் போல் மற்றவரால் ஆகமுடிவதில்லை, எவ்வளவு தான் நிபந்தனை இல்லாத அன்பை வெளிக்காட்டிய போதும்! டீன் ஏஜில் காரணமில்லாமல் பெற்றோரிடம் காட்டும்
எதிர்ப்புணர்வும் கூட Globalதன்மை கொண்டது.

மூவர் கதைசொல்லிகள். ஒவ்வொருவர் சொல்லும் போதும் Tone அதற்கேற்ப மாறுகிறது. ஏழுவயதுப்பெண் சொல்கையில் அது சிறார் உலகம். அந்த உலகத்தில் பெரியவர்கள் மேல் நம்பிக்கை வருவது சிரமம். எழுபது வயதுப் பெண் சொல்லும் கதை முப்பது வருடங்களுக்கு முன் நடந்தது. அந்தக்கதையைக்கூட அவர் நமக்கு சொல்லவில்லை. அவருடைய இறந்து போன கணவரிடம் பேசுகிறார். அவருடன் இணையும் காலம் நெருங்குகிறது. லியாம் கதையில் அவனது சிறுவயதின் நீட்சி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

Solace என்பது கற்பனை நகரம் ஆனால் குழந்தைப் பருவத்தில் பதிந்த Landscapeஐ இந்தக் கதையில் அப்படியே கொண்டு வந்திருக்கிறேன் என்கிறார் ஆசிரியர். ஒருவகையில் இது மனத்திற்குள் அந்தகாலகட்டத்திற்குள் திரும்பவும் பயணிப்பது. நாற்பதுகளில் இருந்து எழுபத்து ஐந்துக்குள் கனடாவில் நடைபெறும் கதை இது. Details matter. நாற்பதுகளில் குற்றவிசாரணை கனடாவில் எப்படி இருந்தது? அப்போது போலிஸ்காரரின் வாழ்க்கை எப்படி இருந்தது? ஒரு வீட்டின் கூரையை(Roof), அப்போதுள்ள தொழில்நுட்பப்படி, கனடாவின் வடக்குப்பகுதியில், வருடஇறுதியில் இருக்கும் மோசமான தட்பவெட்பநிலையில், செப்பனிடுவதன் சிரமங்கள் என்பது போல் எல்லாவிதத் தகவல்களும் அதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்டிருக்கின்றன. நாவலில் ஒரு கதாபாத்திரம் Blueberries சாப்பிடுவதாக ஒரு காட்சி வரும். எழுபதுகளில் வடக்குப் பகுதியில் வருடஇறுதியில் Blueberries விளைவதில்லை, ஆனாலும் அவனை சாப்பிட வைக்கவேண்டும் என்று தோன்றியது என்னசெய்ய என்று சிரிக்கிறார் இவர். அப்படி சிரிப்பதென்றால் தமிழில் நாம் சிரித்துக்கொண்டே தான் படிக்கவேண்டும் இல்லையா!

bookerlonglist2021

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s