Patricia அமெரிக்க எழுத்தாளர். Indianaவில் பிறந்து Midwestன் எல்லா மோசமான நகரங்களிலும் வளர்ந்தவர். இதற்குமுன் இவரது இரண்டு கவிதைத்தொகுப்புகள் மற்றும் நினைவுக்குறிப்பு நூல் முதலியன வெளிவந்துள்ளன. New York times, New Yorker, New Republic, London Review of Books முதலிய பத்திரிகைகளில் தொடர்ந்து எழுதுபவர். இவருடைய இந்த முதல் நாவல் புக்கர் 2021ன் நீண்ட பட்டியலில் இடம்பெற்றது.
நூலிலிருந்து: (intenet ஐப் Portal என்கிறார்)
“The people who lived in the portal were often compared to those legendary experiment rats who kept hitting a button over and over to get a pellet. But at least the rats were getting a pellet, or the hope of a pellet, or the memory of a pellet. When we hit the button, all we were getting was to be more of a rat.”
ஆங்கிலத்தில் ஏற்கனவே நூற்றுக்கணக்கான Genres இருக்கும் போது Patricia இந்த நாவலில் புதிதாக ஒரு Genreஐ அறிமுகப்படுத்துகிறார். நாவலின் முதல் பகுதி ஆயிரக்கணக்கான Twitter கணக்குகளில் இருந்து எடுத்தாற்போல் Sex toysல் இருந்து விளையாட்டு, துணுக்குகள், Incest என்று ஏராளமான விசயங்களைப் பேசுகின்றன. இதுவே முதல் முழுநீள Internet genre novel.
மெய்நிகர் உலகம் பெரும்பாலோனோருக்கு நாளில் பெரும்பகுதியை முழுங்கி விடுகிறது. முப்பத்தாறு வயதான பெயர் சொல்லாத, எழுத்தாளர் ஒரு extremely online, Twitter celebrity. அவரது டிவிட்டுகள் மக்களிடையே பிரபலமாக அவர் பலரை சந்திக்கிறார். அவரது சிந்தனைகள் மெய்நகர் உலகில்….. அல்லது மெய்நகர் உலகின் சிந்தனைகள் அவரது சிந்தனையாக மாற்றமெடுக்கிறது. எல்லைமீறி மெய்நிகர் உலகில் இருப்போருக்கு இரண்டு வாழ்க்கைகள். ஒன்று மெய்நிகர் மற்றது நிஜவாழ்வு. நாவலின் இரண்டாவது பகுதியில் நிஜவாழ்வு இவரை அழைக்கிறது.
Scattered fragments ஆக இருக்கும் பத்திகளை தொடர்ந்து வாசிக்கையில் ஒரு வடிவம் கிடைத்து விடுகிறது. அடிப்படையில் இவர் கவிஞர் அதனால் சில வரிகளில் அழகியல் கலக்கிறது. கூடவே இவர் midwest நகரங்களில் வாழ்ந்த இன்றைய தலைமுறை அமெரிக்கன். அதனால் தவிர்க்க முடியாமல் Profanity இவர் எழுத்துகளில் தானாக வந்து சேர்கிறது.
டிவிட்டரில் தொடர்ந்து இருப்பவர் இவர், கதைசொல்லியின் வயதும் கிட்டத்தட்ட ஒன்றே. அதே போல் நாவலின் இரண்டாம் பகுதியில் கதைசொல்லியின் சகோதரிக்குப் பிறக்கும் Proteus Syndrome குழந்தை இவரது சகோதரிக்கும் பிறந்தது. எனவே இந்த நாவலில் உண்மையும் புனைவும் எது எங்கே என்று கண்டுபிடிக்க முடியாமல் இரண்டறக் கலந்திருக்கின்றன.
டிவிட்டரில் உபயோகிப்பட்ட வரிகளே இந்த நாவலிலும் உபயோகிப்பட்டிருக்கின்றன. Literary Hubல் Walker Caplanன் இந்த நாவலில் வரும் டிவிட்டுகள் பற்றிய விளக்கக் கட்டுரை டிவிட்டரில் அறிமுகம் இல்லாதவர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தும்.
Internet தான் Donald Trump வெற்றிபெறக் காரணம் (நேரடியாகப் பெயர் சொல்லாமல் Dictator என்கிறார்) என்பது போல் அதன் Pros and Cons ஒரு செய்தியாக Judgemental tone இல்லாமல் சொல்லப்படுகின்றது. இது ஒரு Weird, funny, poetic, philosophical, Modern Literature என்றே சொல்லவேண்டும். முதல் நாவலிலேயே பரிட்சார்த்த முயற்சியை எடுத்திருக்கிறார். இது எளிதாகப் படிக்கக் கூடிய நாவல் அல்ல. ஆரம்பத்தில் வாசகரை வெளியே தள்ளுவதற்கு ஆனவரை முயற்சிக்கும். விடாப்பிடியாக உள் நுழைந்து விட்டால் இன்றைய நவீன உலகத்தின் காட்சிகள் கலைடயாஸ்கோப்பில் காண்பது போல் மாறிக்கொண்டே இருப்பதைக் காணலாம். Patricia ஒரு Gifted writer.